“இவங்க ரெண்டு பேர் கூட மட்டும் பண்ண முடியல..’ – பெருமூச்சுடன் ஏக்கத்தை உடைத்த நடிகை மீனா..!

நடிகை மீனா, தமிழ் சினிமாவில் தேவதை நடிகை. மீனாவின் அழகும், நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுக்கும். அவரது கண் பார்வை மயக்கத்தில், அவரது படங்களை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவர்.அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, பருவ வயதை எட்டிய பின், பல படங்களில் நடித்தார். அதில், ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படம், மீனாவுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்றனர்

அதன்பின் எஜமான், நாட்டாமை, மாயி, பெரியண்ணா, பாளையத்து அம்மன்,முத்து, சிட்டிசன், தாய் மாமன், மாமன் மகள், வில்லன், வானத்தைப் போல, ஆனந்தப் பூங்காற்றே, பாரதி கண்ணம்மா, பொற்காலம், குசேலன், அரிச்சந்திரா, ரிதம், சேதுபதி ஐபிஎஸ், வீரா, அண்ணாத்த, அவ்வை சண்முகி என பல படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நடிகையாக மீனா, தமிழ் சினிமாவில் பவனி வந்தார். இதில், சில படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக நல்ல நடிப்பை தந்திருக்கிறார். பல படங்களில், கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார்.

மீனா மலையாள படங்களிலும் நிறைய நடித்திருக்கிறார். மோகன்லாலுடன் அவர் நடித்த த்ரிஷியம் படம், ஒன்று, இரண்டு என வெற்றிகரமாக ஓடி, இப்போது 3 பாகத்திலும் மீனா நடிக்கிறார்.மீனா நடித்த படங்களில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், எஜமான், ஆனந்த பூங்காற்றே, அவ்வை சண்முகி போன்றவை அவரது நடிப்பாற்றலை சொல்லும் மிக சிறப்பான படங்களாக அமைந்தன.மீனாவின் மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். விஜய் உடன், தெறி படத்திலும், அரவிந்த் சாமி படத்தில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்தார். இதனால், மன வேதனையில் இருந்த மீனா, இப்போதுதான் மீண்டும் நடிப்புத்துறைக்கு வந்திருக்கிறார். த்ரிஷியம் 3 படப்பிடிப்புகளில் கலந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில், மீனா 40 என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்று, மீனாவை பாராட்டி, வாழ்த்தி பேசினர்.இந்நிலையில், நடிகை மீனா, ஒரு நேர்காணலில் தனது நீண்ட நாள் ஏக்கத்தை சொல்லி இருக்கிறார். அது, தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்கள் விஜய், அரவிந்த் சாமிீ. இவர்கள் இரண்டு பேருடன், இதுவரை நான் ஜோடியாக நடிக்க முடியவில்லை. ஆனால், ஷாஜகான் படத்தில், விஜய் உடன் ஒரு பாடல் காட்சியில் நடித்து விட்டனே். ஆனால், அரவி்ந்த் சாமியுடன் ஒரு சீன் கூட இதுவரை நடிக்கவில்லை. ஆனால், என் மகள் நைனிகா தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் இருவருடனும் நடித்து விட்டாள். எனக்கு கிடைக்காத வாய்ப்பு என் மகளுக்கு கிடைத்து விட்டது என ஏக்கமாக கூறி இருக்கிறார் மீனா.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …