1 கோடி மொபைல் காலி.. உங்க போன்ல இந்த App இருக்கா..? உடனே இதை பண்ணுங்க..! கூகுள் எச்சரிக்கை..!

கையில் காசு இருக்கிறதா? பணம் இருக்கிறதா? என்ற நிலை மாறி எப்போது மொபைல் இருக்கிறதா? என்று பார்க்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. மனிதர்கள் எளிதில் சொந்த பந்தங்களை பிரிந்து விடுவார்கள். ஆனால் இந்த அலைபேசியை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய முடியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட இந்த மொபைல் போனில் திடீர் திடீர் என புதிய புதிய வைரஸ்கள் பரவி உங்கள் அலைபேசியை காலி செய்கின்ற விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த வகையில் ஏற்கனவே ஒரு கோடி மொபைல் காலி என்று கூகுள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 கோடி மொபைல் காலி.. உங்க போன்ல இந்த App இருக்கா..?

ஏற்கனவே 1 கோடி மொபைல் போனை காலி செய்திருக்கும் இந்த வைரஸ்கள் தற்போது உங்கள் அலைபேசியையும் செயல் இழக்க செய்யலாம். இந்த போன் இல்லை என்றால் உங்களுக்கு ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை தடுமாற்றம் தான் ஏற்படும்.

அலைபேசியை பயன்படுத்துவதால் பன்மடங்கு நன்மை கிடைப்பதோடு சில தேவையில்லாத ஆட்கள் செய்கின்ற வேலையால் செல்போன்கள் ஹேக் செய்யப்படுகிறது. இதன் மூலம் தகவல் திருட்டு நடைபெறுவதோடு மட்டுமல்லாமல் மாபெரும் தொகையை ஒவ்வொரு தனிமனிதனும் இழக்க நேரிடுகிறது.

அந்த வகையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை பற்றி விரிவாக அலசிய தகவல்களை உங்களுக்கு நாங்கள் தர உள்ளோம். அந்த வகையில் 1.10 கோடி ஆண்ட்ராய்டு செல்போன்கள் நெக்ரோ லோடர் என்ற வகை வைரஸின் புதிய வேரியன்டால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி உள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வைரஸை சைபர் செக்யூரிட்டி நிறுவனமான காஸ்பர்ஸ்கி நிறுவனம் முதல் முதலில் கண்டுபிடித்ததை அடுத்து இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயங்கள் வெளி வந்துள்ளது.

அந்த வகையில் google play store-ரில் உள்ள பிரபலமான கேம் மற்றும் செயலிகளை டெவலப் செய்த நிறுவனத்திற்கு இந்த மால்வர் குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பிரபல நிறுவனங்களின் கேம் அல்லது செயல்களில் பிரச்சனை இல்லை. மாறாக அதில் சில மாறுபாடுகளை செய்து விஷமிகள் வெளியிட்டிருக்கும் போலி செயல்களால் இந்த வைரஸ் பரவுவதாக எச்சரித்து உள்ளார்கள்.

உடனே இதை பண்ணுங்க.. கூகுள் எச்சரிக்கை..

இந்த வைரஸ் உங்கள் மொபைலை தாக்கி விட்டால் கண்ணுக்குத் தெரியாத மாற்றங்களை நமது மொபைலிலேயே செய்து விடும். அத்தோடு வங்கி கணக்கு உள்ளிட்ட கணக்குகளையும் திருடிவிடும்.

வீடியோ கேம் பாடல் கேட்க பயன்படுத்தும் செயலி whatsapp என மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயல்களின் போலி வெர்ஷன் மூலம் இது பரவுவதாக வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தேவையில்லாமல் போலி விஷங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

எனவே இலவசமாக கிடைக்கின்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து இந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளுபவர்கள் இனி மேல் ஒரிஜினல் செயல்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுரை சொல்லப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது போன்ற போலி வெர்ஷன் ஒரு கோடிக்கும் மேற்பட்ட செல்போன்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் இனியாவது போலி செயலிகளை பதிவிறக்காமல் உங்கள் போன்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam