இன்றைய ராசிபலன் 05 ஏப்ரல் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 05 ஏப்ரல் 2023 புதன்கிழமை.நாம் எடுத்திருக்கும் இந்த மனிதப் பிறவியை நல்ல முறையில் வாழ்வதற்கும் வாழ்க்கையில் ஏற்படுகின்ற தடைகளை தகர்த்தெறிந்து அது எதனால் ஏற்படுகிறது என்று அறிந்து கொள்ள உதவி செய்யும் ஜோதிட கலையில் கூறப்பட்டுள்ள பரிகாரங்களை செய்வதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும்.

இதன் மூலம் நாம் எதிர்காலத்திற்கு வேண்டிய எல்லாவற்றையும் முன்கூட்டியே நாம் கணித்து அதற்கு தக்கவாறு செயல்பட முடியும். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள
28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று உங்கள் அணுகுமுறையில் கவனம் அவசியம் இருக்க வேண்டும்.நீங்கள் பிரியமானவர்களுடன்  பேசும்போது கவனத்தோடு பேசுங்கள்.மேலும் முக்கிய முடிவுகள் எடுப்பதை என்று தள்ளிப் போடுங்கள். இதனால் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிச்சுமை அதிகரித்து இருக்கும். குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடிக்க முடியாது. எனவே தொழிலில் கவனத்தை செலுத்துவது அவசியம்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை அதிக செலவுகள் காணப்படும். நிதியை சமாளிப்பது எப்படி என்பது தெரியாமல் விழிப்பீர்கள். பண இழப்புக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் கவனமாக உங்கள் பணத்தை கையாள வேண்டும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படும். எனவே குளிர்ச்சியான உணவை நீங்கள் எடுப்பதை தவிர்த்து விடுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் எதை நீங்கள் பேச ஆரம்பிக்கும்போது இரு முறை யோசித்து செயல்பட வேண்டும். நீங்கள் விட்டுக் கொடுக்கும் அணுகுமுறையின் மூலம் நன்மைகள் ஏற்படும். மேலும் சிறிய விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியை சாமர்த்தியமாக கையாள வேண்டும். இல்லை என்றால் பணியில் உங்கள் தரத்தை நீங்கள் வெளிக்காட்ட முடியாது. எனவே தொழில் ஸ்தானத்தில் சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் அவசியமாகும்.

நிதி நிலைமையை பொறுத்தவரையில் இன்று சிறப்பான நாள் இல்லை. தேவையற்ற செலவுகள் அதிகமாக ஏற்படும். இது உங்களுக்கு கவலையை தரும். எனவே பணத்தை போதுமான அளவு மிச்சப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை முதுகு வலி, சளி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அப்படி பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே சிகிச்சை மேற்கொள்வது உங்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தரும். பிரார்த்தனை மேற்கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மிதுனம்

 மிதுன ராசி அன்பர்கள் இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உங்கள் செயல்களை கவனமாக செய்வீர்கள். உங்கள் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு அதிக அளவு கிட்டும். இன்றைய நாளை நன்கு நீங்கள் பயன்படுத்தி உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்கள் பணிகளை சில கொள்கைகளுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல் திறன் நிரூபணமாகும். உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நிதி நிலையை பொறுத்தவரை பணவரவு அதிக அளவு காணப்படும். மேலும் பணத்தை சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பயனுள்ள திட்டங்களில் முதலீடு செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

 ஆரோகத்தை பொறுத்தவரை இன்று எந்த விதமான குறையும் இல்லை என்று கூறலாம். உறுதியான ஆரோக்கியம் காரணமாக என்று சிறப்பாக நீங்கள் இருப்பீர்கள்.

கடகம்

கடக ராசியில் நண்பர்களே இன்று உங்களிடம் பதட்டம் அதிகளவு காணப்படும். இதை சமாளிக்க சமநிலையான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள்.மேலும் திருப்தியான மனநிலை ஏற்பட வேண்டும் என்றால் உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம், பிரார்த்தனை போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்த வரை பணியிட சூழல் கடினமாக இருக்கும். சகப் பணியாளர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது. அவர்களோடு நட்பு முறையை மேற்கொள்வதின் மூலம் நன்மை அடைக்கலாம்.

 நிதி நிலைமையை பொருத்தவரை என்று பண வரவு அதிக அளவு இல்லை. அப்படியே வந்தாலும் தேவையற்ற செலவுகளை நீங்கள் சந்திப்பீர்கள். எனவே பணதை கவனத்தோடு செலவு செய்யவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கான சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். எனவே நீங்கள் அமைதியாக இருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். எதிலும் நீங்கள் அதிக அளவு ஈடுபட்டு பேச்சு வார்த்தைகளை தேவையில்லாமல் பேசி உங்கள் மனதை நீங்கள் புண்படுத்திக் கொள்ள வேண்டாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பணிகள் கடினமாக இருக்கும். சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. இது உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தித் தரும். எனவே பணிகளை திட்டமிட்டு செய்வதின் மூலம் மட்டுமே குறித்த நேரத்தில் எங்கள் முடிக்க முடியும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை நிதி வளர்ச்சியில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.நீங்கள் முடிந்த அளவு சேமிக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். இதனை தடுக்க என்ன செய்யலாம் என்பது பற்றி யோசிக்கவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் உங்களுக்கு தலைவலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே கவனத்தோடு இருக்கவும்.

கன்னி

 கன்னி ராசி நேயர்களே இன்று மகிழ்ச்சியான நாள் கிடையாது. பொறுமையோடு எதையும் சகித்துக் கொள்வது மிகவும் நல்லது. எதையோ இழந்தது போன்ற உணர்வு உங்களுக்குள் ஏற்படும். தியானம் பண்ணுவதின் மூலம் உங்களுக்கு மன நிம்மதி, ஆறுதல் கிடைக்கும்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை செய்யும்போது பல தடைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். உங்கள் பணியை முறையாக செய்ய நீங்கள் திட்டமிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண வரவு குறைந்தே காணப்படும். இதனால் நீங்கள் உங்கள் குடும்பத்தை சமாளிப்பதை சிரமமாக உணர்வீர்கள். திட்டமிட்டு பணத்தைச் செலவு செய்வதின் மூலம் சிக்கனமாக இருக்கலாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தேவையற்ற குழப்பங்களால் உங்கள் ஆரோக்கியம் சீர்கேடு அடையும். ஓய்வாக இருப்பதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே என்று நீங்கள் உங்கள் சுய முயற்சியின் மூலம் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். உங்களிடையே காணப்படும் உறுதியின் மூலம் முயற்சியில் வெற்றி பெறக்கூடிய நிலை கிடைக்கும். பிறருடன் சிறப்பாக தொடர்பு கொண்டு உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்த வரை பணியில் வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது.நீங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். இந்த அணுகுமுறையின் மூலம் பல வெற்றிகள் உங்களுக்கு வந்து சேரும்.

 நிதி நிலைமை பொறுத்த வரை இன்று அதிக அளவு வருமானம் இருக்கும்.மேலும் சேமிப்பு உயரும். எனவே நிதி நிலைமை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

 ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நம்பிக்கை உணர்வும் மேலோங்கி இருப்பதால் திடமான ஆரோக்கியத்தோடு இன்று நீங்கள் இருப்பீர்கள். எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்றைய நாள் சமநிலையோடு இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான நாள் என்பதால் இந்த நாள் உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை என்று உங்களது நேர்மையை பார்த்து மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். உங்கள் திறமை நன்கு வெளிப்படும்.

 நிதி நிலைமையை பொறுத்த வரை திருப்திகரமான நாள் என்று கூறலாம். நீங்கள் பணத்தை அதிக அளவு சேமிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. இதனால் உங்களுக்கு திருப்திகரமான உணர்வு ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொறுத்த வரை இன்று ஆற்றல் நிறைந்து இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்த விதமான சீர்கேடும் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்பது இறைவழிபாட்டில் ஈடுபடுவது மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். உங்கள் பேச்சில் கவனம் அவசியம் தேவை. இன்று நண்பர்களை சந்தித்து கலந்துரையாடுவதை தவிர்க்கவும்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை அதிக பணிகள் காரணமாக குறித்த நேரத்தில் உங்கள் பணிகளை முடிக்க முடியாது. புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் பணிகளை சிறப்பான முறையில் செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பயணத்தின் போது பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் கவனத்தோடு பணத்தை கையாளுவது அவசியமாகும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஒவ்வாமை ஏற்படும். தொண்டை வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று எளிமையான முறையில் உங்கள் பணிகளை செய்ய நினைத்தாலும் அந்தப் பணிகள் உங்களுக்கு கடினமாகவே இருக்கும். ஆற்றல் இழந்து இருக்கும் உங்களுக்கு கொடுக்கின்ற பணிகள் எல்லாமே கஷ்டமாகத்தான் தோன்றும்.எனவே இன்று ஓய்வெடுக்க வேண்டிய நாள் என்று கூறலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் பணிகளில் சில அபாயங்களை சந்திக்க நேரிடும். இதன் மூலம் உங்களுக்கு கவலை ஏற்படும். எனவே பணிகளை மேற்கொள்ளும் போது கவனத்தோடும் மேற்கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை உங்களின் அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் உங்கள் பணத்தை கவனமான முறையை நீங்கள் செலவிட திட்டமிடுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டை வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குளிர்ச்சியான உணவுகளை உண்ண வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று அனுகூலமான நாளாக இருக்கும் சமநிலையோடு நீங்கள் செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மற்றும் நட்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பிறருடன் கலந்து பேசி மகிழ்ச்சி அடைவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று கடினமான பணிகளை கூட மிக எளிதாக செய்து முடித்து விடுவீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு உங்களுக்கு அதிக அளவு கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை திருப்திகரமான நாள் என்று கூறலாம். பணத்தை பயனுள்ள விஷயங்களுக்காக நீங்கள் செலவு செய்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதின் மூலம் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தன்னம்பிக்கை அதிகரித்து இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாளாகவே உங்களுக்கு இருக்கும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்று அதிர்ஷ்டமான நாள் என்று கூறலாம். நீங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் எல்லாம் நல்ல நல்ல வெற்றிகள் வந்து சேரும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை சிறப்பான நாளாக மாற்றி விடுவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சமயோகித புத்தியின் காரணமாக உங்கள் பணிகளை எளிதாக முடித்து விடுவீர்கள். வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை உங்களுக்கு உள்ளதால் அது உங்கள் பணிகளில் பிரதிபலிக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை வளர்ச்சி காணப்படும். லாபகரமான திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள். பணத்தை சிக்கனமாக செலவு செய்வது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று மன உறுதி காரணமாக ஆற்றலோடு இருக்கும் உங்களுக்கு ஆரோக்கியமும் அதிகளவு அதிகரித்திருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version