இன்றைய ராசி பலன் 08 பிப்ரவரி 2023 – புதன் கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :  இன்றைய ராசி பலன் பிப்ரவரி 8- ஆம் தேதிக்கான  மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான பலன்கள். திட்டமிடுதல் என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல எதிர்காலத்தை நாம் உணர்ந்து கொள்ளுவதன் மூலம் மிகச் சிறப்பான திட்டமிடலை செய்ய முடியும்.

 அதற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய ஜாதகத்தை அறிந்து கொண்டால் ஒவ்வொரு மனிதனும் தனக்கு நேரக்கூடிய கெட்ட நிகழ்வுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில பரிகாரங்களை செய்வதற்கு ஜோதிட சாஸ்திரங்கள் உதவுகிறது.

ஜோதிட சாஸ்திரமானது வேதத்தின் கண்கள் போல கருதப்பட்டு வந்தது. இது மனிதனுக்கு ஏற்படக்கூடிய சுப மற்றும் அசுப பலன்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கு தக்கபடி திட்டமிடுவது மூலம் ஒவ்வொரு நாளையும் நீங்கள் சிறப்பாக மாற்றி அமைக்க முடியும். அந்த வரிசையில் இன்று 27 நட்சத்திரங்களுக்கு உரிய ராசிபலன் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று பொறுப்புக்கள் உங்களுக்கு மிக அதிகமாக காணப்படும் நாள். நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் செய்யும்போது மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செய்வது அவசியமாகும். அதுபோலவே எந்த விஷயங்களையும் மிக லேசாக எடுத்துக்கொண்டு செயல்படுவது மிகவும் நல்லது.

தொழிலைப் பொறுத்தவரை இன்று சற்று கடினமாக இருக்கும். குறித்த நேரத்தில் எந்த ஒரு பணியையும் முடிப்பது உங்களுக்கு முடியாது. எனவே தொழிலில் தீவிரமாக கவனத்தை செலுத்துவது நல்லது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சிறிய அளவிலான கடனை தரக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். பணவரவு இன்று சாதகமாக உங்களுக்கு அமையவில்லை.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படுவதற்கு சூழ்நிலைகள் உள்ளது எனவே தேவையற்ற மன கவலையை விட்டு ஒழித்தல் வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே உங்களுக்கு இன்று பயணங்கள் செல்லக்கூடிய அமைப்பு உள்ளது. செய்கின்ற செயல்களில் மிகவும் கவனம் தேவை. எந்த செயலை செய்வதற்கு முன்பு ஒரு முறையாக்கு பதிலாக பலமுறை யோசித்து செய்வது நலம் தரும்.

 தொழிலைப் பொறுத்தவரை அவ்வளவு சிறப்பான நிலை இன்று உங்களுக்கு இல்லை. பணி அதிகமாக இருந்தாலும் உங்களிடம் காணப்படும் பதட்டம் காரணமாக தடுமாற்றங்கள் ஏற்படும். எனவே பக்குவமாக வேலையை செய்ய வேண்டும். ஆன்மீகப் பயணத்திற்காக பண செலவை செய்வீர்கள்.

 பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் கவனமாக நிதி நிலைமையை கையாள்வது அவசியம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை தாயின் உடல் நிலையில் அக்கறை செலுத்துவது அவசியம்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று உங்கள் பணிகளை மிக சுலபமாக செய்யக்கூடிய ஆற்றல் உங்களுக்கு அதிக அளவு உள்ளது. நன்மைகள் தரும் நாள் என்பதால் நீங்கள் எதையும் உணர்ந்து செய்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிட்டும்.

 தொழிலைப் பொறுத்தவரை சமூகமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் வந்து சேர்வதால் மகிழ்ச்சி ஏற்படும். பணியில் முழுமையான வெற்றி அடைவதால் திருப்திகரமான நாளாக இந்த நாள் உங்களுக்கு அமையும்.

 பணத்தைப் பொறுத்தவரை போதுமான அளவு இருப்பதால் உங்கள் பணத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும் பணவரவு உயரக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது. மகிழ்ச்சி காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த குறையும் இருக்காது.

கடகம்

என்றும் புத்திசாலித்தனத்தை கையாளும் கடக ராசி நேயர்களே தவறுகள் அதிகமாக நிகழக்கூடிய நாளாக இன்று இருப்பதால் எதிலும் கவனத்தோடு செயல்படுவது அவசியமான ஒன்று.

உங்கள் செயலில் கூடுதல் முயற்சி மற்றும் கவனமாக இருந்தால் இந்த நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழிலைப் பொறுத்தவரை பணிச்சுமை அதிகமாக இருக்கும் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் தொழில் ஸ்தானத்தில் நீங்கள் கவனத்தோடு செயல்படுவது அவசியமானதாகும்.

 அதிக செலவுகள் வந்து சேரக்கூடிய நாள் எனவே திட்டமிட்டு எதையும் செய்ய வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது. மனதில் பதட்டம் ஏற்படுவதால் உங்கள் தொடைகளில் வலிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எனவே பதட்டமான சூழ்நிலையை குறைப்பதற்கு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுவது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

சிம்மம்

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு செயல்படும் சிம்ம ராசி நேயர்களே ஆன்மீகத்தில் ஈடுபடுவதின் மூலம் உங்கள் மனதிற்கு ஆறுதல் கட்டாயம் கிடைக்கும். உங்கள் பணியில் சற்று தடைகள் ஏற்படுவதால் கவலையை இது தந்துவிடும்.

 எனவே நீங்கள் சிறப்பாக பணிபுரிய திட்டமிட்டு செயலாற்றுவது கட்டாயமான ஒன்றாகும். இன்றைய சூழ்நிலையில் பணத்தை அதிகம் சம்பாதிப்பதற்கான அதிர்ஷ்டம் உங்களுக்கு குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கூடுதல் செலவுகளை நீங்கள் செய்ய வேண்டி இருக்கும்.

 உடல் நிலையை பொறுத்தவரை உடன் பிறந்தோரின் உடல் நலத்திற்காக பண செலவு செய்ய வேண்டி இருக்கும். இதனால் உங்களுக்கு மன வருத்தம் மற்றும் கவலை ஏற்படும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு இன்று தடைகள் அதிகளவு காணப்படுவதால் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டிய நாளாக இந்த நாள் உள்ளது. நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்வதின் மூலம் நீங்கள் வெற்றி அடைய முடியும்.

பணிச்சுமை பணிபுரிய இடத்தில் அதிக அளவு உங்களுக்கு காணப்படும். சுமூகமான பலன்கள் கிடைக்க திட்டமிட்டாலும் அது தாமதமாகவே உங்களுக்கு கிடைக்கும்.

 நிதி நிலமை தொட்டுக்கோ தொடைச்சிக்கோ என்று சொல்லக்கூடிய அளவு தான் இருக்கும்.எனவே தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் உங்களுக்கு கவலை தான் மிஞ்சும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் உடலில் குறிப்பாக முதுகு வலி ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களுக்கான பொதுபலன் இன்று என்னவென்றால் இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக இருப்பதால் எந்த செயலிலும் நீங்கள் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியும் அடைவதற்கான சூழ்நிலைகள் கூடி வந்துள்ளது.

 உங்கள் விருப்பங்கள் என்று கட்டாயம் நிறைவேறும் தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்களுக்கு மிகவும் முறையில் இருப்பதால் புதிய தொழில் வாய்ப்புகள் வந்து சேருவதோடு இருக்கும் தொழில் அவிபிருத்தி ஆகும்.

 பணத்தை பொருத்தவரை போதிய அளவு உங்களிடம் அது நிறைந்து இருப்பதால் செலவு செய்வதையும் இருப்பதைக் கொண்டு செழிப்பாக நீங்கள் நடந்து கொள்வீர்கள். எனவே இன்றைய நாள் நிதி நிலைமைக்கு பற்றாக்குறையே இல்லை என்று கூறலாம்.ஆரோக்கியமும் அதுபோலவே கூடுதல் சிறப்பாக இருப்பதால் தேவ ஆரோக்கியத்தோடு நீங்கள் விளங்குவீர்கள்.

விருச்சிகம்

தொட்ட அனைத்திலும் வெற்றிகளை பெறும் விருச்சிக ராசி நேயர்களே இன்று உங்களது அனுசரணையான வார்த்தைகள் மூலம் மற்றவர்களை கவர்ந்து இழுப்பீர்கள். உங்களிடம் காணப்படும் வெற்றி காரணமாக எதிலும் உச்சநிலையை அடையக்கூடிய சூழ்நிலைகள் அமைந்துள்ளது.

 பணியிடத்தில் கிடைக்கக்கூடிய சலுகைகள் அதிகரிப்பதோடு நீங்கள் எதையும் சவாலாக எடுத்துக்கொண்டு சமாளிக்க கூடிய ஆற்றலை பெற்றிருக்கிறீர்கள்.

 எனவே பணி இடங்களில் பணியை செய்யும் போது அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களிடம் இருக்கும் பணம் தற்போது திருப்திகரமாக இருப்பதால் பயனுள்ள விஷயத்தில் அந்தப் பணத்தை செலவிட வேண்டும்.  உடல் நிலையைப் பொறுத்தவரை இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள் எந்தவித குறைவும் அதில் இல்லை.

தனுசு

தனுசு ராசி நேயர்கள் பொதுவாகவே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள். நீங்கள் இன்று ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருப்பதால் ஆறுதலை தரக்கூடிய நாளாக இது அமையும். எண்ணங்களில் மிகத் தெளிவு ஏற்படுவதால் எதையும் தெளிவாக செய்து முடிப்பீர்கள்.

 பணியிடத்தை பொருத்தவரை ஏற்ற தாழ்வுங்கள் அதிகளவு காணப்படும். மேலும் நீங்கள் உங்களுடன் பணியாற்றுபவர்களுடனும் உங்கள் மேல் அதிகாரிகளுடன் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும்.

 பண வரவு மிதமாக இருப்பதால் செலவை குறைப்பது நல்லது சேமிப்பை உயர்த்த திட்டமிடுங்கள். இல்லையெனில் பண இழப்பு காண சூழ்நிலை ஏற்படும்.

 கண்களில் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது .முகத்தில் அதிக அளவு முகப்பருக்கள் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

மகரம்

 மகர ராசி நேயர்களே இன்று உங்கள் செயல்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். எதிர்மறையான எண்ணங்களை உங்கள் மனதில் வளர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள். நீங்கள் எண்ணியதை அடைவதற்கு பல தடைகள் ஏற்படும்.

 எனவே முடிவுகளை எடுப்பதை தள்ளிப் போடுங்கள் அல்லது தவிர்த்து விடுதல். இன்று நல்லது பணியில் சூழல் சிறப்பாக இல்லாத காரணத்தால் பலவித முட்டுக்கட்டைகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். எனவே எச்சரிக்கையோடு தொழில் செய்யும் போது இருங்கள்.

உங்கள் பணத்தை சாதுரியமாக கையாளுவது மிகவும் கடினமாக இருப்பதால் பணத்தை பொருத்தவரை நீங்கள் முக்கிய முடிவை இன்று எடுக்க வேண்டாம். எதிர்மறை ஆற்றல் உங்களிடம் இன்று அதிக அளவு இருப்பதால் பாதுகாப்பு இன்மை போன்ற உணர்வுகள் உங்களுள் எழும்.

 எனவே தலைவலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அந்த உணர்வை தடுப்பதற்காக தியானம் மேற்கொள்வது சிறப்பாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருப்பதால் அதிகளவு வளர்ச்சி ஏற்படும். நீங்கள் உங்கள் கடின முயற்சியால் என்றுமே வளர்ந்து வெற்றியை உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்ப்பீர்கள்.

 பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் உங்கள் பணியை சரிவர செய்ய வேண்டும்.

 நிதியை பொறுத்தவரை உங்களுக்கு நிதிநிலைமை சற்று சிறப்பாக இருப்பதால் சேமிப்பை உயர்த்த நீங்கள் முயற்சி செய்வீர்கள். பண இருப்பை நன்கு உங்களால் பராமரிக்க முடியும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த குறையும் இல்லை சிறப்புடன் செயல்பட்டு விரைந்து செயலாற்ற உங்களது ஆரோக்கியம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

மீனம்

ஆரம்ப காலகட்டத்தில் தடைகளை சந்தித்தாலும் நீங்கள் உங்கள் செயலில் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். இன்றைய நாளில் உங்களுக்கு நல்ல விதத்தில் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளதால் அதை திட்டமிட்டு நீங்கள் செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றியை சந்தித்தீர்கள்.

 பணிகளை எளிதாக மாற்றுவீர்கள் உங்கள் முயற்சியில் மூலம் உங்கள் விருப்பங்கள் கட்டாயம் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும் உங்கள் வங்கி இருப்பு கட்டாயம் கணிசமாக உயரும்.

 தியனம் மற்றும் பிரார்த்தனை மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளலாம் இன்று ஆரோக்கியத்தில் எந்த விதமான குறையும் இல்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? - யாருமா.. அந்த நடிகை..

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …