இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2023 புதன்கிழமை.வாழ்க்கையில் எப்படியும் சாதிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து போராடிவரும் மனிதர்கள் அனைவருமே தங்களது ஜாதக அமைப்பின் மூலம் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க வேண்டி இருக்கும். அப்படி ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் சந்திக்கும் போது கட்டாயம் இது நடக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் அதற்குரிய பரிகாரங்களை செய்து உங்களை பாதுகாத்துக் கொள்வதோடு வெற்றி இலக்குகளை அடையக்கூடிய வழிமுறைகளையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனின் பிறந்த நேரமும் அவரது வாழ்க்கையில் முக்கியமான நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் தான் அவர்கள் நவக்கிரகங்களின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறார்கள். எனவே நவகிரகங்களை நீங்கள் சந்தோஷமாக வைத்திருந்தால் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் போதிய அளவு தெய்வ வழிபாட்டில் உங்கள் மனதை செலுத்துவது மிகவும் நல்லது.அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

உச்சாகத்தோடு இருக்கும் மேஷ ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு நல்ல பலன் கிடைப்பதால் இந்த நாளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது கடினம் முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் எனவே எல்லா செயல்களையும் தெரிந்து முடித்தீர்கள்.

 தொழிற்சாலை பொருத்தவரை பணியை விரும்பி செய்வீர்கள். சுய வளர்ச்சியின் மூலம் ஈடு இணை ஏற்ற அந்தஸ்தை பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தை விட கடுமையான உழைப்பை நீங்கள் நம்ப வேண்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களிடம் உழைப்புக்கு ஏற்ற ஊக்கத்தொகை பணவரவு எல்லாமே இருக்கு.ம் எனவே முயற்சியில் நேர்மையாக இருப்பதன் மூலம் அதிக பண வரவு பெற முடியும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆற்றல் மிகுந்து காணும் உங்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் எந்த சுனக்கமும் இருக்காது. எனவே பிரச்சனை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

ரிஷபம்

 ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று விருப்பமான பலன்கள் ஏதும் நினைத்தபடி கிடைக்காது. கெட்ட விளைவுகளை தவிர்க்க நீங்கள் எந்த விஷயத்தையும் தொடங்குவதற்கு முன்பு யோசித்து தொடங்குவது நலம் தரும். பிறரிடம் பேசும் போது மிகவும் கவனத்தோடு பேசவும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணிகளை திறமையாக ஆற்றுவீர்கள். தடைகள் வந்தாலும் உங்களுக்கு ஏமாற்றம் இருந்தாலும் நீங்கள் பணியில் கவனத்தை செலுத்துவது அவசியம். உங்கள் சகப்பணியாளர்களோடு உங்களது தொடர்பு சிறப்பாக இருக்காது. எனவே பணியில் கவனத்தை செலுத்தவும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகளை தவிர்க்க முடியாது. செலவுகளை கட்டுப்படுத்த நினைத்தாலும் செலவுகள் அதிகரிக்கும். எனவே தேவையற்ற செலவுகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்கள் கண்களை பரிசோதனை செய்யக்கூடிய நாளாக இருப்பதால் கண்கள் பற்றிய ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அதிக பணியின் காரணமாக சோர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

மிதுனம்

தொட்டதுதெல்லாம் நடக்க வேண்டும் என்ற கருத்தில் இருக்கும் மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று இருக்கின்ற முயற்சிகளில் இடையேறு தடைகள் நிறைந்து இருக்கும். விரும்பத்தகாத சூழ்நிலை இருக்கும் போதும் அதை எளிதில் நீங்கள் எடுத்துக் கொண்டால் சமாளித்து விடலாம். மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடச் சூழல் சமூகமாக இருக்காது. பணிகளை செய்யும்போது காலதாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு குறைந்து காணப்படும். அதிக பணம் செலவாகும். நிதி சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. இல்லையென்றால் உங்களுக்கு தீய பலன்கள் தான் ஏற்படும்.

 தாயாரின் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.கண் பிரச்சினை காரணமாக உங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று ஆக்கப்பூர்வமான நாளாக உங்களுக்கு உள்ளது. எதையும் நீங்கள் எளிதில் பெறக்கூடிய அம்சம் இருப்பதால் இந்த நாளை உற்சாகமாக நீங்கள் கொண்டாடி தேவையான அனைத்தையும் பெற முயற்சி செய்து விடுங்கள்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை முன்னேற்றமான நாள் என்று கூறலாம். உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சக பணியாளர்களின் ஆதரவும் உங்களுக்கு நல்ல முறையில் கிடைப்பதால் பணியில் உங்கள் செயல் திறன் திருப்திகரமாக வெளிப்படும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று வரவுகள் அதிகமாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் உண்டு. பணத்தை பல்வேறு வகைகளில் முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று எந்த சுணக்கமும் இல்லை. எனவே இது ஆறுதலாக இருக்கும். ஆற்றலும் உறுதியும் தன்னம்பிக்கையும் சுறுசுறுப்பும் இன்று உங்களிடம் அதிக அளவு இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று மிதமான பலன்களை உங்களுக்கு கிடைக்கும். பொறுமையாக எதிலும் காத்திருப்பது அவசியம். தியானம் மேற்கொள்வதின் மூலம் எத்தகைய சூழ்நிலையும் நீங்கள் எதிர்கொள்ள முடியும்.

 தொழிற்சாலை பொருத்தவரை பணிகள் அதிகமாக காணப்படும். எனவே திட்டமிட்டு செயல்படுவது  மூலம் உங்கள் பணிகளை சிறப்பாக முடிக்க முடியும். மேலும் தொழில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் ஏற்படும்.

 நிதி நிலமையை பொறுத்தவரை சோம்பேறித்தனம் காரணமாக பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பணத்தை கையாளும்போது மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

 பதட்டம் காரணமாக ஆரோக்கியத்தில் சுணக்கம் ஏற்படும் கால் மற்றும் தொடைகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே என்று உங்களுக்கு வெற்றிக்கான நாள். புத்திசாலித்தனத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வெற்றி மேல் வெற்றி பெற முடியும். இன்று கட்டுக்கடங்காமல் இருக்கும் சூழ்நிலைகளை  உங்களது ஆக்கிக் கொள்ள உதவி செய்யும். எனவே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு யோசிக்க  வேண்டும்.

தொழிற்சாலத்தை பொருத்தவரை பணியிடத்தில் கவனம் இன்மை காரணமாக தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கவனமாக செயல்பட வேண்டும்.

நிதியை பொறுத்த வரை பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் பணத்தை திட்டமிட்டு செயல் திட்டமிட்டு செலவு செய்வது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை அலர்ஜி காரணமாகவும் அஜீரண கோளாறுகளும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே உணவு முறையை பின்பற்றும்போது சரியாக பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மாற்றி அமைக்க முடியும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று மந்தமான நாளாக இருப்பதால் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும்தான் எதிலும் முன்னேற்றத்தை காண முடியும். எனவே அதிக நம்பிக்கையை உங்கள் மீது வையுங்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற இந்த நம்பிக்கை உங்களுக்கு கூடுதலாக உதவி செய்யும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் ஏமாற்றமான சூழ்நிலையை நிலவும். பணி புரியும் இடத்தில் சூழல் சமூகமாக இல்லை இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். எனவே பொறுமையோடு காத்திருந்து உங்கள் பணிகளை கவனத்தோடு முடியுங்கள்.

 நிதி நிலையை பொருத்தவரை தேவையற்ற செலவுகள் வந்து சேரும். இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும். பணத்தை சேமிக்க முடியுமா என்பதில் எண்ணத்தை வைக்கவும். எதையும் சிக்கனமாக செய்யவும்.

 ஆரோக்கியதத்தை பொருத்தவரை இன்று பதட்டம் அதிகமாக இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பதட்டத்தை சமாளிக்க நீங்கள் யோகா தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது மிகவும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருப்பதால் முக்கிய முடிவுகளை உடனே எடுத்து விடலாம். இதன் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும். உற்சாகமான அணுகுமுறையால் இந்த நாளை நீங்கள் மிகவும் சிறப்பான நாளாக மாற்றி விடலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை சகா பணியாளர்களின் ஆதரவு அதிகளவு கிடைக்கும். மேலதிகாரிகளிடமிருந்து எதிர்பாராத நன்மைகள் கிடைப்பதால் நீங்கள் இன்று பணிபுரியும் இடத்தில் சந்தோஷமாக இருக்கலாம். சாதிக்க வேண்டும் என்ற உணர்வு உங்களிடம் மேலோங்கி இருக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணம் உங்களுக்கு போதுமானதாக இருப்பதால் உங்கள் சேமிப்பு பல மடங்க அதிகரிக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள். அதில் வெற்றியும் கிட்டும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உடல் முழு ஆரோக்கியத்தோடு இருப்பதால் உடலும் மனமும் உங்களுக்கு உத்வேகம் அளிக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று சமூகமான நாளாக உங்களுக்கு உள்ளது. உங்களது போக்குகள் மூலம் நல்ல உறுதியான முடிவுகளை நீங்கள் இன்று எடுக்க முடியும். உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் பயணம் செய்து வெற்றிகளை பெறுவீர்கள்.

பணியிடைச் சூழலைப் பொறுத்தவரை இன்று மகிழ்ச்சிகரமான நாள் என்பதால் தொழில் ஸ்தானத்தில் உங்களுக்கு அபாரமான வெற்றி வாய்ப்புகள் காத்துள்ளது. மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவதோடு புதிய வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும்.

 நிதி நிலமையை பொறுத்தவரை உங்கள் சேமிப்பு அதிகரிக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கணிசமான பணத்தை சம்பாதிக்கும் அதிர்ஷ்டம் என்று உள்ளதால் இயன்ற நிதி நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த ஒரு சுணக்கமும் இல்லை என்பதால் ஆரோக்கியம் என்று மேம்பாடுடன் இருக்கும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இதனை போக்க நீங்கள் இசை மற்றும் படங்களை பார்க்கலாம். பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை கையாளும் விதத்தில் கையாள நீங்கள் புதிய அணுகுமுறையை மேற்கொள்ளலாம். வாக்குவாதங்களில் ஈடுபடாமல் விலகி இருங்கள். நட்பான அணுகு முறையோடு எதையும் செய்யுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை கையாளும்போது அதிக கவனம் தேவை. இதன் மூலம் உங்கள் திறன் அதிகரிக்கும். தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கவனமாக பணிகளை செய்யவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண இழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் கிடைத்திருக்கும் பணத்திற்கு ஏற்ப செலவுகளை செய்யவும். உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருப்பதால் சிக்கனத்தைக் கைகொண்டு இருப்பது நன்மை பயக்கும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை கை கால்களில் பாதிப்புகள் வலிகள் ஏற்படலாம். பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையை இழந்திருப்பீர்கள். நல்ல பலன்களை காண நீங்கள் உறுதியோடு இருக்க வேண்டும். உங்கள் வளர்ச்சியில் தடைகள் பல வந்தாலும் அதை தகர்த்தெறிந்து முன்னேற என்ன செய்யலாம் என்று யோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து இன்று செயல்படவும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் அதிக அளவு தவறுகள் ஏறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே பணிகளை திட்டமிட்டு முறையாக ஆக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பண இழப்பு அதிக அளவு காணப்படுகிறது. பயணத்தின் போது பல இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளதால் பயணத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்திலும் இன்று சில பிரச்சனைகள் ஏற்படும் குறிப்பாக கை கால்களில் வலிகள் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று பல நன்மைகள் நடக்கும். உங்கள் அணுகு முறையில் நம்பிக்கை ஏற்படும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். சமூகத்தில் புதிய நபர்களின் மூலம் உங்களுக்கு தொடர்பு ஏற்பட்டு நல்ல நல்ல விஷயங்கள் நடக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் திறமைகளை அதிகளவு வெளிப்படுத்துவீர்கள். உங்களது தனித்தன்மை இதன் மூலம் வெளிப்படும் பணியிடத்தில் உங்கள் செயல் திறன் சிறப்பாக இருக்கும்.

நிதி நிலை சிறப்பாக இருப்பதால் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். ஊக்கத்தொகை போன்ற கூடுதல் பல வரவு உங்களுக்கு அதிக அளவு காணப்படும். பணத்தை பற்றி கவலை கொள்ள தேவையில்லை.

ஆற்றல் உற்சாகம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.எனவே ஆரோக்கியமான நாளாக இந்த நாள் உள்ளது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …