இன்றைய ராசிபலன் 10 ஏப்ரல் 2023 திங்கட்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 10 ஏப்ரல் 2023 திங்கட்கிழமை. நாளை என்ன நடக்கும் என்பதை அறிய ஆவலாக அனைவரும் இருப்பார்கள். அப்படி அந்த நாளைய நிகழ்வுகளை நீங்கள் அறிந்து கொள்வதின் மூலம் சிறப்பாக திட்டமிட முடியும். திட்டமிடுதல் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று என்று கூறலாம்.

இதன் அடிப்படையில் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும் அந்த வகையில் நாளைய பலன்களை உங்களுக்கு எளிதாக கணித்து தரும் ஜோதிடத்தை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துவதின் மூலம் வெற்றி மேல் வெற்றி அடையலாம்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று தவறுகள் நேரது வண்ணம் உங்களை கண்காணிப்பது மிகவும் அவசியமானது. உங்கள் பணிகளை நீங்கள் கவனமாக செய்ய வேண்டும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று பொறுமையோடு, உறுதியோடும் உங்கள் பணிகளை நீங்கள் முடிக்க வேண்டும். தவறுகள் நடக்காமல் நீங்கள் கண்காணித்து உங்கள் பணிகளை எளிதில் முடியுங்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று உங்கள் செலவுகளை திட்டமிட்டு செய்வதின் மூலம் நன்மைகள் ஏற்படும். இதன் மூலம் நிதி பற்றாக்குறை ஏற்படாது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தியானம் மற்றும் பிரார்த்தனைகளை மேற்கொள்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று புதிய நண்பர்களின் நட்பு உங்களுக்கு ஏற்படும். இது உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். உங்கள் பணிகளை நம்பிக்கையோடு செய்து முடிப்பீர்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்கள் பணிக்கு உரிய பாராட்டுக்கள் இன்று கிடைக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை குறித்த நேரத்திற்கு முன்பாகவே முடித்து அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்துவீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். பணத்தை செலவு செய்து அதன் மூலம் திருப்தி அடைவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தேக ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பக்தி பாடல்களை கேட்பதன் மூலம் உங்களுக்கு மன வலிமை கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்று உங்களுக்கு அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. வாழ்க்கையின் உயரத்தை எட்டுவதோடும் மட்டுமல்லாமல் உங்களுக்கு அனைத்துமே நன்மையாக முடியும். வேகம் மற்றும் உறுதி உங்களிடையே அதிகரித்து இருக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை கொடுக்கும் வேலைகளை படுவிரைவாக முடிப்பீர்கள். உங்கள் பணி நல்ல தரத்தோடு இருக்கும். உங்கள் திறமையை பயன்படுத்தி பலவிதமும் நல்ல பெயரை பெற்று விடுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை போதுமான அளவு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படுவதால் உங்கள் பணத்தை சேமிக்க கூடிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறந்த ஆற்றல் உங்களிடம் காணப்படும். அதன் மூலம் உங்கள் தேக ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம்.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு பொறுமை அவசியம் தேவை எதிலும் அமைதியை கடைப்பிடியுங்கள்.நீங்கள் திட்டமிட்டு திறமையோடு செயலாற்ற வேண்டிய காலகட்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். புனித பயணம் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உள்ளது.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பொறுமையோடு பணிகளை செய்து முடியுங்கள். தொழில் சார்ந்த அணுகு முறையில் சற்று கவனம் தேவை.

 நிதி நிலைமையை பொருத்தவரை கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பண பற்றாக்குறை ஏற்படும். பணத்தை சரியான வகையில் கையாளுவது அவசியம். இதன்மூலம் நிதி பற்றாக்குறையிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை அமைதியோடு இருந்தால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதற்காகவும் பதட்டப்படாதீர்கள்.எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். பல் வலி, தலைவலி போன்றவை வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருங்கள்.

சிம்மம்

சிம்மராசி அன்பர்களே இன்று பொறுமை காரணமாக வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயல்களில் அதிக அளவு கவனம் தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை தைரியமும், உறுதியும் இருந்தால் என்று வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளது. சாதாரண பணிகளை விட இன்று பணிகள் கூடுதலாக உங்களுக்கு கொடுக்கப்படும்.

 நிதி நிலைமை பொறுத்த வரை என்று அதிர்ஷ்டத்தை விட திறமையில் நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். பணப்புழக்கம் சரியாக இருக்காது. எனவே உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் எண்ணெய் பண்டத்தை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். வெயிலில் அதிக நேரம் சுற்றுவதை தவிர்த்து விடுங்கள்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று நீங்கள் விரும்பியது உங்களுக்கு கட்டாயமாக கிடைக்கும். பிரார்த்தனைகள் செய்வதின் மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இன்றைய தினம் இருப்பீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை கொடுக்கப்பட்ட பணிகளை விட அதிக அளவு பணிகளை செய்ய வேண்டிய நெருக்கடிகள் ஏற்படும். மேலதிகாரிகள் உங்கள் திறமையை கண்டு பாராட்டுவார்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வங்கிகளில் இருப்பு அதிகரிக்கும். உங்கள் திறமை காரணமாக சேமிப்பு பல மடங்காக உயரும். எனவே நிதி நிலைமையை பற்றி அச்சப்பட வேண்டாம்.

 ஆரோக்கியமும் இன்று சீரும் சிறப்புமாக உள்ளது எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று சரியாக திட்டமிட்டால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். எனவே நீங்கள் அமைதியாக இருந்து உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். கூடுதல் பொறுப்புக்கள் வந்து சேரும்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை கவனத்தோடு பணியாற்றுவது அவசியம். ஏனெனில் கவனச் சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே விடாமுயற்சியோடு அமைதியோடும் உங்கள் தொழிலை செய்யுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சுமாரான நாளாகவே இந்த நாள் உள்ளது. சேமிப்பு அவசியம் தேவை. சிக்கனமாக பணத்தை செலவு செய்ய முயற்சி செய்வதால் சேமிப்பு அதிகரிக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்களில் வலி, எரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே கண் சார்ந்த நோய்கள் வந்தால் உடனே மருத்துவரை அணுகி விடுவது உங்களுக்கு நன்மை தரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று நீங்கள் உற்சாகமோடு செயல்படுவீர்கள். பொறுமையாக இருந்து ஆற்றலோடு அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி சம்பந்தமாக என்று பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். பணியிடத்தில் சவால்கள் நிறைந்து இருப்பதால் புத்திசாலித்தனமாக உங்கள் பணிகளை செய்ய முயற்சி செய்யுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகமாகவே இருக்கும் என்பதால் பணத்தை கவனத்தோடு திட்டமிட்டு செலவிடுவது செலவு செய்வது மிகவும் நல்லது.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை கவனம் தேவை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டி வரும் எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் அதிகரித்து காணப்படும்ஶ்ரீ இதை தவிர்த்தால் உங்களுக்கு நல்ல நிலைமை கிடைக்கும். நீங்கள் உற்சாகத்தோடு இருந்து நல்ல பலன்களை பெற முயற்சி செய்யுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று மந்தமான நாள் என்று கூறலாம்.எனவே உங்கள் பணிகளை முடிக்க தாமதமாகும்.மேலும் கவனத்தோடும், திட்டமிட்டும் பணியாற்றினால் கட்டாயம் முன்னேற்றம் கிடைக்கும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணவரவு சுமாராகவே இருக்கு.ம் பணத்தை தக்க முறையில் கையாளுவது உங்களுக்கு கூடுதல் சிறப்பை தரும். தக்க முறையில் பண செலவுகளை கட்டுப்படுத்தவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சின்ன சின்ன குழப்பங்கள் ஏற்படும். எனவே முழு நம்பிக்கையோடு உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியமாகும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே என்று மிகவும் சிறப்பான நாளாக உங்களுக்கு அமைந்துள்ளது. நீங்கள் எடுக்கும் எல்லாம் முயற்சிகளும் இன்று வெற்றி அடையும். உங்கள் எண்ணங்களில் அமைதியை மட்டும் கடைப்பிடிப்பது கூடுதல் நன்மைகளை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்கள் பணிகளைப் பார்த்து அனைவரும் பாராட்டுவார்கள். சக பணியாளர்களுடன் நீங்கள் ஒத்துழைத்து செல்வதோடு அவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருப்பீர்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். உங்கள் சேமிப்பு கணிசமான அளவு உயரும். எனவே நிதி நிலைமையை பற்றி கவலைப்படாதீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று சிறப்பாகவே உள்ளதால் ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நீண்ட காலத்திட்டம் இன்று நடைமுறைக்கு கொண்டு வர நீங்கள் முயற்சி செய்வீர்கள். முக்கிய முடிவுகளை என்று எடுக்க வேண்டாம். அதை சற்று தள்ளி போடுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை மகிழ்ச்சியாக இருக்கும். சக பணியாளர்களுடன் நல் உணர்வு ஏற்படும். பணியிடத்தில் நல்ல நல்ல வாய்ப்புக்கள் வந்து சேரும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். பணப்பழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் கையில் உள்ள பணத்தை சீரான முறையில் செலவு செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஆற்றல் அதிகரித்து காணப்படும். தன்னம்பிக்கையின் காரணமாக உங்கள் ஆரோக்கியத்தில் எந்த குழப்பமும் இருக்காது. எனவே ஆரம்பத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு பாதுகாப்பு இன்மை உணர்வை அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். மேலும் நீங்கள்  இன்றைய நிலையில் இருந்து நல்ல முறையில் முன்னேற முயற்சி செய்வீர்கள். எனவே நீங்கள் உற்சாகத்தோடு இருக்க முயற்சி செய்வது நல்லது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணிகளை ஒப்படைக்கும் முன்பு தவறுகள் உள்ளதா? என்று சரி பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை கடன்களை அடைக்க வேண்டி இருக்கும். இதனை உடனே செய்வதின் மூலம் பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே பணத்தை சிறப்பாக நிர்வகிப்பது அவசியம் ஆகும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தொண்டை வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் குளிர்ந்த பொருட்களை உண்ண வேண்டாம். தலைவலியை தவிர்க்க அமைதியாக இருக்கவும்.உடற்பயிற்சியை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும். எனவே ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக கவனத்தை செலுத்துவதின் மூலம் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version