பாடகி சுவர்ணலதாவின் சூப்பரான 10 உண்மைகள்..!

பாடகி சுவர்ணலதாவின் சூப்பரான 10 உண்மைகள்..!

தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியான ஸ்வர்ணலதா வெறும் பாடகி அவ்வளவு தானே என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றி விடுங்கள்.

ஏழிசையின் ரீங்காரக்குயில் என்று கருதப்படும் பாடகி ஸ்வர்ணலதாவின் வாழ்க்கை வரலாற்று முழுவதும் ரணமும், மன வலிகளும் நிறைந்ததாக தான் இருந்து வந்தது.

பாடகி ஸ்வர்ணலதா:

14வயதிலேயே பாட ஆரம்பித்த சுவர்ணலதா தனக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் வெறும் 37 வயதிலே புகழில் உச்சத்தில் இருக்கும்போது அவர் மறைந்து விட்டார்.

பாடகி சுவர்ணலதாவின் சூப்பரான 10 உண்மைகள்..!

வாழ்க்கையில் இசை இசை என இசை தவிர வேறொன்றும் அறியாத தேவதையாக ஸ்வர்ணலதா சிறந்த பாடகியாக இருந்து வந்தார்.

தனக்கென்று குடும்பம் குழந்தை என எதையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இசைக்காகவே பிறந்து இசையிலேயே வாழ்ந்து இசையோடு தன்னை மரணித்து கொண்டார்.

மிகச் சிறந்த பாடகியாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்த ஸ்வர்ணலதா இசை பொக்கிஷம் என்றும் ஸ்வரங்களின் அரசி , ஹம்மிங் குயின் என்றும் தனிமையில் கரைந்து போன ஒரு குறள் என வர்ணிக்கிறார்கள்.

7000க்கும் மேற்பட்ட பாடல்கள்:

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, உருது, மலையாளம், பெங்காலி ,ஒரியா, படுகா உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களுக்கு இவர் திரைப்பட பாடல்களை கிட்டத்தட்ட 7000க்கும் அதிகமான பாடல்களை பாடி மிகப்பெரும் நட்சத்திர பாடகியாக பலம் வந்து கொண்டிருந்தார்.

ரசிகர்களால் ஸ்வர்ண குயில் என அன்புடன் அழைக்கப்பட்ட இவர் இனிமையான குரல் வளமும் பன்முகப் பாடும் திறனும் கொண்ட ஸ்வரங்களின் அரசி என்றும் புகழ் பாராட்டப்பட்டார்.

கருத்தம்மா திரைப்படத்தில் இடம் பெற்ற “போராளே பொன்னுத்தாயி” என்ற பாடலை இவர் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்று கவுரவிக்கப்பட்டார்.

இந்த பாடலை ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் உள்ள பாலக்காட்டில் 1973 ஆம் ஆண்டு பிறந்த ஸ்வர்ணலதாவின் தந்தை ஹார்மோனிய கலைஞர், சிறந்த பாடகராக இருந்ததால் தந்தையின் மூலம் தான் இவருக்கு இசை ஆர்வம் அதிகரித்தது.

பாடகி சுவர்ணலதாவின் சூப்பரான 10 உண்மைகள்..!

பின்னர் பாடகியாக அவதாரம் எடுத்தார். இசை குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் சிறு வயதிலேயே தன் தந்தை மற்றும் சரோஜா எனும் தனது மூத்த சகோதரியிடம் பாடுவதற்கும் ஹார்மோனியம் வாசிப்பதற்கும் சிறப்பாக பயிற்சி பெற்றுக்கொண்டார்.

ஸ்வர்ணலதாவின் திறமைகண்டு வியந்த ஊர்மக்கள்:

சொர்ணலதாவின் பாடும் திறமனை கண்டு ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள் அவரை மிகவும் பாராட்டி விட்டு சென்றார்கள்.

அதை எடுத்து அவரது குடும்பத்தினர் ஸ்வர்ணலதாவுக்கு இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என திரைப்படங்களில் பாட வைக்க வேண்டும் என்பதற்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள்.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலை பாடி இவர் முதல் முதலில் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது பெறும் 14 தான்.

இந்த சின்னஞ்சிறு குயிலின் குரல் இளையராஜாவிற்கு மிகவும் பிடித்து போனதால் தான் இசை அமைத்த குரு சிஷ்யன் திரைப்படத்தில் உத்தமபுத்திரி நானு என்னும் பாடலை பாட வாய்ப்பளித்தார்.

அதன் பிறகு தொடர்ச்சியாக இவருக்கு ஏராளமான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கப் புகழும் உச்சத்திற்கே சென்றார் ஸ்வர்ணலதா.

பாடகி சுவர்ணலதாவின் சூப்பரான 10 உண்மைகள்..!

வலிகள் நிறைந்த வாழ்க்கை:

அமைதியான குணம், கூச்ச சுபாவம், தனிமை விரும்புபவர் ஆகவும் கேமராவிற்கு முன்னால் நடிக்க விரும்பாதவராகவும் இருந்ததால் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் மேடை நிகழ்ச்சிகளையும் தவிர்த்து வந்தார்.

தனது பெற்றோர்களை இழந்து 37 வயதாகியும் திருமணம் ஆகாமல் நுரையீரல் பிரச்சனையால் இருந்து அதிலிருந்து மீண்டு வர முடியாமல். ஒரு கட்டத்தில் வாய் திறந்து பேசுவதற்கு கூட முடியாமல் போனார்.

நுரையீரலுக்கு செல்லும் கற்று தடுக்கப்பட்டு சுவாசிப்பதே சிரமமாக இருந்ததாக வினோதமான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

காற்றின் அலைகளால் இசை ரசிகர்களை அடிமையாக்கிய சுவர்ணலதாவின் குரல் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி கரைந்து போனது.