இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2023 ஞாயிற்றுக்கிழமை. ஜோதிடம் என்பது ஒரு அற்புதமான கலை. இந்த ஜோதிடத்தை நாம் கணக்குகளைக் கொண்டே வகுக்கிறோம். மேலும் ஜோதிடம் ஆனது நமது வாழ்க்கையோடு இணைந்து பயணிக்கிறது. ஜோதிடத்தைக் கொண்டு இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும், நேற்று என்ன நடந்தது என்று முக்காலத்தையும் கணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.

ஜோதிட ரீதியாக ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய தோஷங்கள் போன்றவற்றை எளிதில் பரிகாரங்கள் செய்து நீக்க முடியும். எளிமையான இந்த ஜோதிடத்தை நீங்கள் நம்புவதின் மூலம் உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்று வெற்றி அதிகமாக கிடைக்கக்கூடிய நாள் என்பதால் உறுதியாக நீங்கள் எதிலும் செயல்படலாம். உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் பணிகளை மிகவும் மகிழ்ச்சியாக செய்வீர்கள். சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படுவதால் இன்று தொழிலில் எந்தவிதமான பிணக்கமும் உங்களுக்கு ஏற்படாது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நீங்கள் சிறப்பாக இருப்பது போல் உணர்வீர்கள். பணம் கையிருப்பு அதிகரிக்கும் செழிப்பான நிதி நிலைமை இன்று இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை என்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படுகிறது. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். ஆற்றலுடன் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்கள் செயல்கள் சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெறும். முக்கிய நடவடிக்கைகளை இன்று நீங்கள் விரைவாக எடுப்பீர்கள். இன்று நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக உள்ளது. தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்களுக்கு இன்று பணி இடத்தில் தரமான பாராட்டுக்கள் வந்து சேரும்.

 பணிகளை விரைவில் முடிப்பதோடு பணியாளர்களோடு அனுசரித்து நடப்பீர்கள். நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பாக நாளாக இந்த நாள் உள்ளதால் நீங்கள் அதிகளவு பணத்தை சேமிக்கக்கூடிய நாளாக இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இருப்பதால் நீங்கள் ஆற்றலோடு காணப்படுவீர்கள். உங்களது நகைச்சுவை உணர்வு காரணமாக ஆரோக்கியம் மேம்பட்டு இருக்கும் ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்கள் இன்று ஆன்மீகத்தில் அதிக அளவு ஈடுபடுவதின் மூலம் பதட்டம் குறையும். பதட்டம் குறைவதால் ஆறுதலோடு இருப்பீர்கள். இந்த நாள் எந்த காரியத்தையும் பார்த்து செய்ய வேண்டும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை மேற்கொள்வதில் தாமதம் இருக்கும். உங்களுக்கு இது கவலையை ஏற்படுத்தி தருவதால் தொழிலில் முறையாக திட்டமிட்டு எதையும் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைந்த அளவே உள்ளது. எனவே கூடுதல் செலவுகள் ஏற்படும் கவனத்தோடு பணத்தை செலவு செய்யவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உடல் நலத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக பணம் செலவு செய்ய நேரம் குழந்தைகளை முறையாக கவனித்துக் கொள்ளவும். அது போல் உங்கள் தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே  இன்று தன்னம்பிக்கை அதிகரித்து உங்களுக்கு இருக்கும். நேர்மறை எண்ணத்தோடு திகழ்வீர்கள். உற்சாகத்தோடு இருப்பதால் அனைத்து செயல்களும் விரைவாக முடியும்.

 தொழில்தானத்தை பொறுத்தவரை கூடுதல் பணிகள் காணப்பட்டாலும் பணியில் வளர்ச்சி இருப்பதால் நீங்கள் கண்ணும் கருத்துமாக பணியை செய்வதின் மூலம் வெற்றி மீது வெற்றி வந்து சேரும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இருக்காது. வரவை விட செலவு அதிகமாக இருப்பதால் பண விஷயத்தை கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை மன உளைச்சல் காரணமாக கால்களில் வலி ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே இன்று நீங்கள் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி அடையக் கூடிய நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுப்பதன் மூலம் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் நிலை உள்ளது.

வேலை தொடர்பாக நீங்கள் பயணங்களை மேற்கொள்ளலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதால் தொழிலில் எந்தவிதமான பிணக்கமும் உங்களுக்கு இல்லை.

 நிதி நிலைமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாளாக இந்த நாள் உள்ளது. உங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை நீண்ட நாட்கள் கழித்து இன்று உங்களுக்கு கிடைக்கும். எனவே நிதியை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

 ஆரோக்கியம் சிறப்பாகவே காணப்படுவதால் உங்களிடம் உற்சாகமும் ஆர்வமும் இருக்கும் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

கன்னி

 கன்னி ராசி அன்பர்களே இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. நீங்கள் விரும்பியதை அறிய கடினமான உழைப்பை மேற்கொள்ள வேண்டி இருக்கும். எனவே கண்ணும் கருத்துமாக இருக்கவும்.

சகப்பனியாளர்களுடன் மோதல் காணப்படும் பணிகளை கையாளும்போது அவசியம் பொறுமையோடு கையாண்டால் மட்டுமே தொழிலில் நீங்கள் அபிவிருத்தி பண்ணிக்கொள்ள முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பாக இல்லை. வீட்டில் பெரியவர்களின் உடல் நலத்திற்காக உங்களது பணத்தை செலவு செய்ய வேண்டியது இருக்கும். எனவே நிதி நிலைமையில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம். அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்யவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இருக்காது. சோர்ந்து போகக்கூடிய நிலை இன்று இருப்பதால் அது உங்களுக்கு வருத்தத்தை தரும். எனவே ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க முயற்சி செய்யவும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். இதனால் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். இன்றைய நாள் உற்சாகமாக நீங்கள் கழிக்க கூடிய வகையில் அமைந்துள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை சமூகமாகவும் கவனத்தோடும் நீங்கள் பணியாற்ற வேண்டும். தொழிற்சார்ந்த அணுகுமுறையை மேற்கொள்வதில் மூலம் இன்று நன்மைகள் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணம் போதிய அளவு இருப்பதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகளை இன்று எடுப்பதின் மூலம் நன்மை கிடைக்கும்.

 ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை இல்லை என்றால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே மிதமான உணவுகளையே சாப்பிடுங்கள். கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கவனத்தோடு இருங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று சிறப்பான நாளாக உங்களுக்கு இருக்கும். தொழில் சார்ந்த அணுகுமுறையால் நீங்கள் வளர்ச்சியை அதிகமாக பெற முடியும். உங்கள் செயல்களை சிறந்த முறையில் செய்ய வேண்டும் என்றால் மனதிற்கு ஆற்றல் மட்டுமல்ல அமைதியும் தேவை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை ஓய்வு எடுக்க முடியாத அளவுக்கு பணிகள் அதிக அளவு குவிந்து கிடக்கு.ம் பணியில் ஏற்படும் மாறுபாடுகளை ஏற்ப ஒத்துப் போக நீங்கள் உங்கள் மனதில் திட்ட போட்டு செயல்படுங்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை ஸ்திரத்தன்மை இருக்காது. வரவும் செலவும் சமமாக இருப்பதால் நீங்கள் எந்த முடிவும் இன்று எடுக்க வேண்டாம்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சிகரமான நாளாக இன்று இருக்கும் எனவே ஆரோக்கியத்தை கவலை வேண்டாம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களது தொடர் முயற்சி மூலமாக உங்கள் வளர்ச்சியில் முன்னேற்றம் அதிகமாக கிடைக்கக்கூடிய நாள் என்பதால் இந்த நாளை நீங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவும்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை வேலை தொடர்பான பயணத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அந்த பயணமும் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை அதிகளவு பணம் காணப்படும். பண வரவு அதிகமாக இருப்பதால் ஆன்மீக விஷயங்களுக்கு நீங்கள் பணத்தை செலவிடலாம்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று தேக ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருப்பதால் உங்களுடைய நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து தேக ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும் என்பதால் ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக உள்ளது. துடிப்புடன் நீங்கள் எதிலும் செயல்படலாம். கவனத்தோடு செயல்படுவதின் மூலம் அதிக அளவு நன்மைகள் கிடைக்கும்.

 தொழில்தானத்தை பொறுத்தவரையில் பணிகளை உறுதியோடும் எளிதாகவும் செய்வீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று சிறப்பான நாளாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள். நிதி நிலைமையை பற்றி கவலை வேண்டாம்.

 ஆரோக்கியமும் இன்று சிறப்பாக இருப்பதால் நீங்கள் சூப்பராக எல்லா பணிகளையும் செய்து முடிக்கலாம்.ஆற்றல் அதிகரித்து இருப்பதால் ஆரோக்கியமும் அதிக அளவு இன்று இருக்கும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே

உற்சாகமாக இருப்பீர்கள் தேவையற்ற எண்ணங்களை தவித்து விடுங்கள். நீங்கள் கவனம் இடமும் விழிப்புடனும் பணியாற்ற வேண்டும்.  சோம்பல்  காரணமாக உங்கள் பணிகளில் தவறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கவனமாக இருக்கவும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பண இழப்புக்கான வாய்ப்புகள் உள்ளது. கவனத்தோடு இருங்கள் இந்த சூழ்நிலையை நீங்கள் எப்படி கையாளுகிறார்களோ அதை பொறுத்து உங்களது நிதி நிலைமை இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்திற்காக நீங்கள் உடற்பயிற்சி மற்றும் தியானத்தை மேற்கொள்வது மிகவும் நல்லது. இருமல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

மீனம்

 மீன ராசி அன்பர்களே இன்று செயல்களில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்குள் ஏற்படுவதால் கவலையும் குழப்பமும் ஏற்படும். எனவே அதை விட்டொழித்து தியானத்தில் ஈடுபடுங்கள்.

 தொழில் ஸ்தானத்தில் பணியிடைச் சூழல் சிறப்பாக இருக்காது. பணிகளில் தவறுகள் நேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கவலை ஏற்படும். எனவே எச்சரிக்கையோடு உங்கள் பணியை செய்யுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று சிறப்பாக இல்லை இந்த சூழ்நிலையில் நீங்கள் பணத்தை சரியாக கையாள இயலாது. எனவே கண்ணும் கருத்துமாக இருங்கள்.

 ஆரோக்கியமும் இன்று சிறப்பாக இருக்காது. சளி மற்றும் தொண்டை பிரச்சனைகளுக்கு ஆளாகலாம்.  எனவே ஆரோக்கியத்தை கவனத்தில் செலுத்தவும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …