இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2023 செவ்வாய்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2023 செவ்வாய்கிழமை.பூமி எப்படி சூரியனை சுற்றி வருகிறதோ அதுபோல ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கக் கூடிய கிரகங்கள் அனைத்தும் அவனை ஆட்டிப்படைத்து வருகிறது. அப்படிப்பட்ட கிரகங்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டுதான் அவனுடைய புத்தி மற்றும் குண நலன்கள் அமைகிறது.

அந்த கிரகங்களின் உச்ச நீச்ச அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு அவன் வாழ்வில் அடையக் கூடிய வெற்றி தோல்விகளை நாம் கணித்து விடலாம். எப்படிப்பட்ட மிகப்பெரிய மகானாக இருந்தாலும் பூமியில் ஜெனித்துவிட்டால் அது அவதார பிறப்பு என்றாலும் அந்த கிரகங்களின் கட்டுப்பாட்டுக்கு கீழ்தான் செயல்படுவார்கள்.

அது தான் உலக நியதியாக வகுக்கப்பட்டுள்ளது .எனவே தான் தசாவதாரம் மட்டுமல்லாமல் பல்வேறு அவதாரங்களில் இறைவனுக்கும் இந்த கிரகங்களின் தாக்குதல் காரணமாக எண்ணற்ற துன்பங்கள் நிகழ்ந்த போதும் அதை எதிர்கொண்டு அவர்கள் அனுபவித்து அதிலிருந்து வெளிவரக்கூடிய சூட்சுமங்களை மனிதர்களுக்கு விட்டு சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு இன்று மந்தமான நாள் என்பதால் குழப்பத்தோடு இருப்பீர்கள்.நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் உங்கள் கவனத்தை செலுத்துவதின் மூலம் உங்களுக்கு அது சற்று ஆறுதல்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை மன நிறைவு இல்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் உங்களால் செய்து முடிக்க முடியாது.இது உங்கள் கவலையை மேலும் அதிகரிக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரையில் அனுகூலமான நாள் இல்லை கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் உங்களுக்கு கவலையே மிஞ்சும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தேவையில்லாத மன உளைச்சலுக்கு காரணமாக தலைவலி, காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று வளர்ச்சி அதிக அளவு உரிய நாளாக உங்களுக்கு உள்ளதால் வெற்றி மீது வெற்றிகள் வந்து உங்களை சேரும். நம்பிக்கையுடன் நீங்கள் எந்த செயலிலும் இந்த ஈடுபடுவதின் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை கடுமையான முயற்சிகள் தான் செய்து முடிக்க வேண்டி இருக்கும். உங்கள் உறுதி மற்றும் பொறுப்புணர்ச்சி காரணமாக பணிகள் சுலபமாக நடந்தேறி முடியும். திட்டமிட்டு செய்வதின் மூலம் நீங்கள் நல்ல பலனை பெறலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பங்கு வர்த்தகத்தின் மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உள்ளது. இதன் காரணமாக நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். அதற்கு உரிய நாளாக இந்த நாள் விளங்குகிறது.

ஆரோக்கியமும் இன்று சிறப்பாகவே உள்ளதால் நீங்கள் நம்பிக்கையோடு செயல்பட்டால் நன்மைகளை பெற முடியும். ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று சுய முயற்சியின் மூலம் நல்ல பலன்களை அடைவீர்கள். மகிழ்ச்சியும்,உற்சாகம் உங்களிடைய அதிகரித்து காணப்படுவதால் முன்னேற்றத்திற்கு இது வழிவகை செய்யும். இன்று முன்னேற்றம் காணக்கூடிய நாளாக உள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்கள் பணி வளர்ச்சி திறமாக இருக்கும். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கையோடு எதையும் நல்ல பலன்களை இன்று பெறுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று உங்களிடம் கணிசமான தொகை காணப்படும். இந்த தொகையைக் கொண்டு உங்கள் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம். போதுமான அளவு பணப்புழக்கம் இருப்பதால் நிதி நிலைமையை பற்றி கவலை வேண்டாம்.

ஆரோக்கியமும் அதுபோலவே சிறப்பாக இருப்பதால் நீங்கள் அதைப்பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை. யோகா மற்றும் தியான பயிற்சிகளை செய்வதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று நல்ல சிந்தனையின் மூலம் சிறப்பான செயல்களை நீங்கள் கடுமையான முயற்சியின் மூலம் செய்து முடிப்பீர்கள். உணர்ச்சிவசப்படுதலை மற்றும் தவிர்த்து விட்டால் வெற்றி உங்களை விரைவில் வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் என்று அதிகமாக காணப்படும். சக பணியாளர்களிடம் சிறந்த முறையில் நீங்கள் பழகுவதின் மூலம் புத்துணர்வாக உங்கள் பணிகளை செய்து முடிக்க முடியும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணம் சம்பாதிப்பது கடினமாக இருக்கும். சிறந்த முறையில் திட்டமிடுவதின் மூலம் உங்கள் பணத்தை சேமிக்க இயலும்.

 உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்களில் கவனம் தேவை சளி மற்றும் நரம்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா? ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

சிம்மம்

சிம்மராசி அன்பர்களே இன்று அமைதி இன்மையோடு இருப்பீர்கள். அறிவார்ந்த செயல்களை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவீர்கள். பொறுமையான அணுகுமுறை இருந்தால் மட்டும்தான் இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக செய்ய வேண்டும். மேலதிகாரிகள் சிலர் உங்களோடு விரும்ப தகாத தருணங்களை ஏற்படுத்துவார்கள். எனவே பணியில் கவனத்தை செலுத்துங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வதின் மூலம் பண செலவு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

 ஆரோக்கியம் சுமாராக இருப்பதால் கை கால்களில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்கள் முயற்சிகள் மூலம் வெற்றி பெறுவீர்கள் உங்கள் நடவடிக்கைகளை எளிதாக மேற்கொண்டு அனைவரையும் கவருவீர்கள். அதிர்ஷ்டமான நாளாக இந்த நாள் உங்களுக்கு விளங்குகிறது.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிவிடத்தில் நல்ல மாற்றங்கள் தெரியும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடித்து விடுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பணத்தின் வரவும் செலவும் அதிகமாகவே உள்ளது. இந்த நேரத்தை நீங்கள் நன்கு பயன்படுத்தி பணத்தை முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பான நிலையில் உங்களது ஆரோக்கியம் இருப்பதால் உடற்பயிற்சி தியானம் போன்றவற்றை மேற்கொள்வதில் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு செய்வதின் மூலம் மன அமைதி மற்றும் மன ஆறுதல் கிடைக்கும். விவேமான முறையில் இன்று அணுகுமுறைகள் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள வேண்டிய வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்வதின் மூலம் ஆக்கபூர்வமான பலன்களை பெற முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு சுமாராகவே இருப்பதால் கட்டுப்பாட்டுடன் பணத்தை செலவு செய்ய வேண்டும் எனவே நிதி நிலைமையில் சற்று அக்கறை காட்டுங்கள்.

 ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். தோள்கள் மற்றும் கணு கால்களில் வலி ஏற்படலாம்.இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று உறுதியுடன் இருக்க வேண்டிய நாள்.நீங்கள் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் கவனமாக எடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு நிச்சயமாக வெற்றி வந்து சேரும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் சில விரும்பத்தகாத தருணங்கள் ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. இதன் மூலம் நல்ல நல்ல பலன்கள் ஏற்பட்டு உங்கள் தொழில் சிறப்பாக அமையும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் பணத்தை கையாளும்போது கவனம் தேவை.

ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் எரிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு பொருட்களை நீங்கள் உண்ண வேண்டாம். மன உளைச்சலுக்கு இடம் கொடுக்காதீர்கள். தியானத்தை மேற்கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவதின் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இதுவே உங்களது எதிர்காலப் போக்கை மாற்றி அமைக்கக்கூடிய ஒரு வழிகோலாக இருக்கும் என்று கூட கூறலாம்.இந்த நாள் சிறப்பாக அமைய ஆன்மீக வழிபாடு அவசியம் தேவை.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை உங்கள் வளர்ச்சியில் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. எனவே முன் சாக்கிரதையோடு தொழிலில் ஈடுபட வேண்டும். விழிப்புணர்வுடன் எதையும் செய்தால் வரும் பாதிப்பை சற்று தவிர்க்க இயலும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு குறைவாகவே உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள். திட்டமிட்டு செலவுகளை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சுமாரான ஆரோக்கியமே உள்ளது. பதட்டங்களை கட்டுப்படுத்தினால் ஆரோக்கியம் அதிகரிக்கும். எனவே எந்த ஒரு விஷயத்திற்காகவும் நீங்கள் பதட்டப்பட வேண்டாம்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்றைய நாள் உற்சாகமாக மகிழ்ச்சியான நாளாக உங்களுக்கு அமைந்துள்ளது. எனவே மகிழ்ச்சியுடன் இந்த நாளை நீங்கள் கொண்டாடலாம். இன்று வெற்றி மீது வெற்றி உங்களை தேடி வரும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் முன்னேற்றங்கள் காணப்படும். புதிய பணி வாய்ப்புகள் வந்து சேரும். எனவே நீங்கள் தொழிலை பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை.

நிதி நிலைமையை பொறுத்தவரை சேமிக்க கூடிய அளவு பண வரவு அதிகரிக்கும். எனவே நீங்கள் சேமிப்பை உயர்த்த முயற்சி செய்வீர்கள். இதன் மூலம் உங்கள் வங்கி இருப்புகள் அதிகரிக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களை வருத்தி கொள்ளாத வகையில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதையும் சிந்திப்பதை விடுத்து விட்டு நீங்கள் நல்ல செயல்களை ஈடுபட்டாலே போதுமானது. இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் தெளிவாக செய்து வெற்றிகளை காண்பீர்கள். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேற கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடத்தில் முன்னணியில் இருப்பீர்கள். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் மேல் பாராட்டுக்கள் வந்து சேரும். எனவே தொழிலைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை மிகவும் உற்சாகமான மகிழ்ச்சியான நாள் எனக் கூறலாம்.  எதிர்பாராத பணவரவு உங்களுக்கு வந்து சேரும். எனினும் திட்டமிட்டு கவனமாக பணத்தை கையாளுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பெரிய அளவில் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏதும் இல்லை. உடற்பயிற்சியை மேற்கொள்வதின் மூலம் உங்களது ஆரோக்கியம் மேலும் சிறப்பாக பேணிப் பாதுகாக்கப்படும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு புத்துணர்வோடு இருக்கும். நம்பிக்கையோடு நீங்கள் செயல் புரியலாம் மற்றும் தியானம் மேற்கொள்வது சிறப்பான நன்மையை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிவிடத்தின் வளர்ச்சி சமூகமாக இருக்காது. அதிகமான பணிகள் உங்களை கடுமையாக வருத்தி வாட்டும்.

 நிதி நிலைமையை பொறுத்த வரை ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். பண இழப்புக்கு தான் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே பணத்தை சேமிப்பதில் கவனத்தை செலுத்தவும்.

 ஆரோக்கியம் என்று அவ்வளவு சிறப்பாக இல்லை. தோள் வலி, முதுகு வலி போன்ற வலிகள் ஏற்படலாம் பதட்டத்தை தவிர்த்து விட்டு தியானத்தை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …