இன்றைய ராசிபலன் 15 ஏப்ரல் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 15 ஏப்ரல் 2023 சனிக்கிழமை. நல்லதை நினைத்து, நல்லதை செய்யும் போது மனிதர்களிடையே நேர்மறை ஆற்றல் அதிகரித்து நல்ல பலன்கள் அதிக அளவு கிடைக்கும். எனவே ஒவ்வொரு மனிதனின் எண்ண ஓட்டமானது நேர்மறையாக அமைந்து விட்டால் இத்தகைய சிக்கல்களையும் சுலபமாக கையாண்டு அதிலிருந்து நீங்கள் வெளியே வர முடியும் .

குறிப்பாக உங்களது ஜனன ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படக்கூடிய பலன்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதின் மூலம், உங்களுக்கு ஏற்படும் இடர்களையும் உங்கள் குடும்பத்தாருக்கு வரவிருக்கும் இடர்களையும் தவிர்க்க அதற்கு உரிய பரிகாரங்களை செய்து நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று நம்பிக்கை உணர்வு உங்களிடையே அதிகமாக இருக்கும். உங்கள் இலக்குகளை நீங்கள் எளிதாக அடைந்து விடுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும். நட்பு வட்டாரம் அதிகரிக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை நல்ல வளர்ச்சி உள்ளது. உங்கள் செயல் திறனை கண்டு சகப் பணியாளர்கள் பொறாமைப்படுவார்கள். பல புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதால் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். பண சேமிப்பதற்கான வாய்ப்புகளும் கூடிவரும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை மிக ஆற்றலோடு இன்று நீங்கள் இருப்பீர்கள். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே என்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவது சற்று கடினமாக இருக்கும். எனவே தன்னம்பிக்கையை அவசியம் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் உங்களுக்கு நன்மதிப்பு ஏற்படும். கடினமான சூழ்நிலையை சமாளிக்க பிரார்த்தனையை மேற்கொள்ளுங்கள்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். உங்கள் செயல் திறனுக்கான மதிப்பு கட்டாயம் கிட்டும். உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தால் மகிழ்ச்சி ஏற்படும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை அதிகளவு பணம் புழங்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வங்கி இருப்பு உயரும். எனவே நீங்கள் மகிழ்ச்சியில் இருப்பீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கும். உங்களிடம் ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறையும் இல்லை என்று சிறப்பான நாளாகவே அமைந்துள்ளது.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே என்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை என்பதால் மன அமைதியோடு இருங்கள்.இதன் மூலம் மகிழ்ச்சி தானாகவே வந்து சேரும். எதையும் அனுசரித்து செல்வதோடு விவேகத்தோடு நடந்து கொள்வது உங்களுக்கு நன்மையை அளிக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை நீங்கள் செய்யும் பணிகளில் தவறுகள் அதிகளவு நடக்க வாய்ப்புள்ளதால் பணிகள் கவனத்தை செலுத்துவது மிகவும் அவசியமாகும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டமான நாள் என்று சொல்ல முடியாது. கூடுதல் செலவுகள் அதிகரித்து இருப்பதால் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு உங்களுடைய அதிகரித்திருப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாக்க தியானம் மற்றும் பிரார்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.

கடகம்

கடக ராசி நண்பர்களை இன்றைய நாள் துடிப்பான நாளாக உங்களுக்கு அமைந்திருக்கும். நீங்கள் உங்கள் இலக்குகளை எளிதாக அடைந்து வெற்றி பெறுவீர்கள். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். சரியான முடிவுகளை எடுக்க உகந்த நாள் என்று கூறலாம். இன்று எடுக்கும் முடிவுகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள்.தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனை நன்கு பயன்படுத்திக் கொள்வதின் மூலம் தொழில் ஸ்தானத்தில் உச்சகட்ட நிலையை நீங்கள் அடையலாம்.

 நிதி நிலைமை பொறுத்த வரை போதிய அளவு பணப்புழக்கம் உங்களிடையே இருக்கும். இந்த பணத்தை சரியான வழிகள் சேமிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதால் பணத்தை பல முதலீடுகளில் நீங்கள் முதலீடு செய்யலாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் உங்களிடம் ஆரோக்கியத்தில் எந்தவிதமான சுணக்கமும் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

சிம்மம்

சிம்மராசி நண்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும் உங்கள் வளர்ச்சிக்கு உகந்த நாள் என்று கூறலாம். எனவே உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்வீர்கள். முயற்சியால் மட்டுமல்ல உங்களுக்கு புத்திசாலித்தனம் மூலமும் வெற்றிகள் வந்து சேர வாய்ப்புகள் உள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை திருப்தியான நிலை உள்ளது. உங்கள் பணிகளை நீங்கள் தரமாக முடித்து விடுவீர்கள். இதனால் மேல் அதிகாரிகளில் பாராட்டும், நன்மதிப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு அதிகமாக இருக்கும். இன்று சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வதின் மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பான நாளாக இருப்பதால் நீங்கள் மன உறுதியோடு இருக்கலாம். ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே என்று பதட்டம் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு சாதகமான நாளாக இந்த நாள் அமையாது. நீங்கள் உற்சாகமாக இருந்தால் தான் சவால்களை சந்திக்க முடியும். மற்றவரை மகிழ்ச்சி படுத்த வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கும் நீங்கள் பிரார்த்தனை மற்றும் வழிபாடுகள் செய்வதின் மூலம் அமைதி பெறலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அதிகளவு பணிகள் இருப்பதால் உங்களுக்கு சலிப்பு ஏற்படும். மேலதிகாரிகளின் அணுகுமுறை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். எனவே தொழில் ஸ்தானத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது.

 நிதிநிலைமையை பொறுத்தவரை வளர்ச்சி என்று அதிக அளவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் தேவைகளை பொறுத்து நிதி ஆதாரங்கள் இருக்கும். புதிய முடிவுகள் என்று எடுக்க வேண்டாம்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தாயாரின் உடல் நலத்திற்காக பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும். இது உங்களுக்கு கவலையைத் தரும் எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள் அல்ல புத்திசாலித்தனத்தோடும், பொறுமையாகவும் எல்லா விஷயங்களையும் கையாளுவது அவசியம் என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே உங்களுக்கு நன்மை கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அதிகளவு பணிகள் இருக்கும். கவனக்குறைவு காரணமாக பணிகளில் தடங்கல் ஏற்படலாம். எனவே கண்ணும் கருத்துமாக பணியை செய்யவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் இருக்காது. மேலும் வரவுக்கு மீறி செலவுகள் ஏற்படும். இது உங்களுக்கு கவலையை தரும். எனவே சிக்கனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை திருப்திகரமான நாள் இல்லை. தொடைகளில் வலி ஏற்படும். ஆரோக்கியத்தின் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களை இன்று உங்கள் வளர்ச்சியில் நல்ல நிலை ஏற்படும். இதன் மூலம் உங்களுக்கு வெற்றிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆற்றலும் உற்சாகமும் என்று உங்களிடம் அதிகரித்து இருப்பதால் முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாளாக இருக்கும்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடத்தில் உங்களது முயற்சியின் மூலம் நீங்கள் வெற்றி அடைவீர்கள். கடினமான பணிகளை எளிதாக முடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெறுவீர்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் இன்று திருப்திகரமாக இருக்கும். புதிய முதலீடுகளில் நீங்கள் உங்கள் பணத்தை போடக்கூடிய வாய்ப்புகள் உள்ளதால் அதை செய்வதின் மூலம் உங்களுக்கு நன்மை ஏற்படும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுடைய ஆற்றல் அதிகரித்து இருப்பதால் ஆரோக்கியத்தில் எந்த சுனக்கமும் இருக்காது எனவே இன்றைய தினம் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாத நாள் என்று கூறலாம். சில சௌவுரியங்களை விட்டுக் கொடுத்துத்தான் நீங்கள் வாழ வேண்டி இருக்கும். எனவே உங்களுடைய பாதுகாப்பு இன்மை உணர்வு அதிகரிக்கும். நல்ல பலன்களை பெற  வேண்டுமெனில் நீங்கள் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை அதிக அளவு சவால்களை சந்திக்க நேரிடும். எனவே நீங்கள் பணிகளை சிறப்பாக செய்ய திட்டமிட்டு செய்யுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு குறைவாகவே இருக்கும். வீட்டை புனரமைப்பது தொடர்பாக கூடுதல் செலவுகளை செய்ய நேரலாம். எனவே ஜாக்கிரதையாக இருக்கவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல் நலத்திற்காக நீங்கள் பணம் செய்ய வேண்டி வரும். எனவே கவனத்தோடு ஆரோக்கியத்தை அக்கறை செலுத்துங்கள்.

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு விரும்பக்கூடிய பலன்கள் கிடைப்பது சந்தேகமே.எனவே பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடாது என்றால் எந்த செயலையும் துவங்குவதற்கு முன்பு யோசித்து துவங்குங்கள். இசை கேட்டல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதின் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே பணிகளை மேற்கொள்ளும் போது கவனத்தோடு பணி செய்வதின் மூலம் அந்த தவறுகளை நீங்கள் சரி செய்து விடலாம்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று ஏற்ற, இறக்கங்கள் உள்ள நாளாகவே உள்ளது. பண இழப்பு ஏற்படாமல் இருக்க சிக்கனமாக செலவுகளை செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது. எனினும் தொண்டை பகுதியில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் குளிர்ச்சியான உணவுகளை உண்ண வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே இன்று சில துன்பமான சூழல் காரணமாக உங்களுடைய பாதுகாப்பு என்னை உணர்வு அதிகரிக்கும். விவேகத்தோடு நீங்கள் செயல்படுவதின் மூலம் அவற்றை சமாளித்து விடலாம். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதல் தரும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் திருப்தி குறைந்தே இருக்கும். நீங்கள் உறுதியுடனும் சிறப்பாக திட்டமிடுவதின் மூலமும் தடைகளை சமாளித்து தொழிலில் வெற்றி பெற முடியும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை தந்தையின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்யலாம். மேலும் போதிக அளவு சேமிப்பது கடினமாக இருக்கும். எனவே சிக்கனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் அதிக அளவு நீர் பருகுவது அவசியமாகும். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று நீங்கள் சுய முயற்சியின் மூலம் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெற்றி காண்பதற்கு உறுதியான அணுகுமுறை உதவியாக இருக்கும் இனிய வார்த்தைகள் பேசுவதின் மூலம் நல்ல பயன்களை பெற முடியும்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணியில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நீங்கள் பணியில் சிறப்பாக வெற்றி பெற திட்டமிட்ட அணுகுமுறையை மேற்கொண்டாலே போதும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

நிதிநிலைமையை பொறுத்தவரை பணவரவு என்றும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய சேமிப்பு பற்றி யோசிப்பீர்கள் பொருளாதார பாதுகாப்பு உங்களுடைய அதிகரித்து காணப்படும். பணத்தை தக்க வழியில் முதலீடு செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாள் என்று கூறலாம். உங்கள் நம்பிக்கை உணர்வு உங்களை திடமாக வைத்திருப்பதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொடுக்கும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version