இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2023 சனிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2023 சனிக்கிழமை. நமது வாழ்க்கை எனும் சித்திரத்தை சிறப்பாக நாம் வரைய வேண்டும் எனில் அதற்கு ஜோதிடம் கூறக்கூடிய நல்ல பலன்களையும், தீய பலன்களையும் நன்கு ஆராய்ந்து அதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்க்கையை தரமாக அமைத்துக் கொள்வதின் மூலம் வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளையும் நீங்கள் அடைய முடியும்.

 அப்படிப்பட்ட ஜோதிட கலையை நீங்கள் நம்பி செயல்பட்டால் கட்டாயம் உங்களுக்கு ஏற்படுகின்ற அசுப பலன்களில் இருந்து விடுபட தக்க பரிகாரங்களை உரிய நேரத்தில் செய்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு கிரகங்களின் கிரக நிலையை பொறுத்தே மனிதர்களின் நன்மை மற்றும் தீமைகள் அமைகிறது. அது மட்டுமல்லாமல் ஜென்மத்தில் செய்த நன்மை தீமைகளை அடிப்படையாகக் கொண்டு இவை அனைத்தும் நடக்கும். அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு உகந்த நாளாக இருப்பதால் இந்த நாளில் உங்களது இலக்குகளை எளிதில் அடைக்க முடியும். எனவே சிறந்த திட்டங்களை இன்று போட்டு அதிக பலன்களை பெறக்கூடிய ராசிகளில் நீங்கள் முதல் இடத்தில் இருக்கிறீர்கள் என்று கூறலாம். அந்த அளவு இன்று உங்களுக்கு சுகமான நாளாக உள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை உங்களுக்கு பணி புரியக்கூடிய இடத்தில் பாராட்டுக்கள் வந்து குவியம். கூடுதல் ஊக்கத்தொகைகள், சலுகைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் தொழில் ஸ்தானம் ஸ்திரமாக உள்ளது என்று கூறலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வலுவான நிதி ஆதாரத்தை நீங்கள் கொண்டிருப்பதன் காரணமாக உங்களுக்கு நிதி பற்றிய கவலை தேவையில்லை. மேலும் இன்று சேமிப்புகளை அதிகரித்துக் கொள்ளக்கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களிடம் காணப்படும் சிறப்பான ஆற்றல் காரணமாக ஆரோக்கியத்தில் எந்த விதமான சுணக்கமும் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று ஏழைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு நீங்கள் தானம் செய்வது மிகவும் நல்லது. இந்த நாளை அதற்குரிய நாளாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். கடவுளின் ஆசியும் மகிழ்ச்சியும் கிடைப்பதின் மூலம் நீங்கள் சுபிட்சமான வாழ்க்கையை வாழலாம்.எனினும் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை இன்று பணிகள் அதிகமாக இருப்பது போல நீங்க உணர்வீர்கள். திட்டமிட்டு பணிகளை ஆற்றினால் வெற்றி கிடைக்கும். சகப்பணியாளர்களின் மூலம் சங்கடங்களில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கவனமாக இருக்கவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகரித்து காணப்படக்கூடிய நாள்.மேலும் பொறுப்புக்களை அதிகளவு நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படலாம். எனவே உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு இருப்பது மிகவும் அவசியம்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இன்றைய நாள் நீங்கள் சில போராட்டங்களை சந்திக்க வேண்டிய நாள் என்பதால் பொறுமையாக இருப்பது மிகவும் அவசியமானது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதின் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும் எனக் கூறலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் சிக்கல்கள் நிறைந்திருக்கும். சக பணியாளர்களுடன் நல்லுறவை பராமரிப்பதிலும் பிரச்சனைகள் ஏற்படும் .எனவே தொழிலில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பான நாள் என்று கூற முடியாது. தேவையற்ற வெட்டி செலவுகள் உங்களுக்கு வந்து சேரும்.இதன் மூலம் உங்களுக்கு கவலை ஏற்படுவதோடு கையிருப்பும் குறைந்துவிடும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறந்த ஆரோக்கியத்தோடு நீங்கள் இருப்பீர்கள். தன்னம்பிக்கை ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியத்தில் எந்த விதமான கஷ்டமும் ஏற்படாது.

கடகம்

கடக ராசி அன்பர்களே உங்களுக்கு இன்று சிறந்த நாளாக உள்ளது. எனினும் கவனமாக எதிலும் செயலாற்றுவது அவசியமானது. புத்திசாலித்தனத்தை மேம்படுத்திக்கொண்டு ஒவ்வொரு செயலையும் செய்வது மூலம் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு காட்டுவதின் மூலம் உங்களுக்கு பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உங்கள் பணிகளை முடிப்பதற்கு உகந்த நாளாக இந்த நாள் இருப்பதால் நீங்கள் பணிகளில் கவனத்தை செலுத்தி விரைவில் பணியை முடிக்கலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வளர்ச்சி சிறப்பாக உள்ளது. உங்கள் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொள்வீர்கள். புதிய முதலீடுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இந்த நாளை நீங்கள் சேமிக்க கூடிய நாளாக மாற்றிவிடலாம்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை மிகவும் சிறப்பான நாள் என்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. பிரார்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் மேலும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று உகந்த நாளாக இல்லை.எனவே அதிக பலன்களை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். குழந்தைகளின் முன்னேற்றமும் எதிர்பார்க்கும் வகையில் இல்லாததால் அது உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தித் தரும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணி சுமை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு நீங்கள் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். ஆற்றலோடு பணிபுரிய முயற்சி செய்யுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வரவும் செலவும் குறைந்து உள்ளது. உங்கள் பணத்தை நீங்கள் சேமிப்பதில் தடங்கல்கள் ஏற்படும். நிதிநிலைமை சற்று  கடினகரமாகத்தான் இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை ஆரோக்கியமும் சிறப்பாக இருக்காது.காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று நீங்கள் மிகவும் எதார்த்தமாக இருக்க வேண்டிய நாள் என்பதால் நீங்கள் எதார்த்தமாகவே இருந்து விடுங்கள். உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க இதைத்தவிர வேறு வழி இல்லை. எனவே உங்களுக்கு இன்று சாதகமாக நாள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று சிறந்த பலன்களை நீங்கள் காண வேண்டுமென்றால் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் பணிகளில் வெற்றிகளை காண நீங்கள் உங்கள் சௌரியங்களை விட்டுக் கொடுத்து ஆக வேண்டும். இதன் மூலம் தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

 நிதி நிலைமையில் பொருத்தவரை இன்று பொறுப்புக்கள் அதிகரித்திருப்பதின் காரணமாக பண பற்றாக்குறை காணப்படும். எந்த சூழ்நிலையையும் எளிதாக சமாளிக்கக்கூடிய மனநிலையை உருவாக்கி விடுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தாயின் உடல் நலத்துக்காக பணம் செலவு செய்ய வேண்டிய நேரம் இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சற்று அனுகூலம் குறைவான நாளாக தான் உள்ளது. எனினும் நீங்கள் அதிர்ஷ்டத்தை விட உங்கள் முயற்சியை துணையாக கொண்டால் வெற்றி மேல் வெற்றி குவிக்க முடியும். முக்கிய முடிவுகளை என்று நீங்கள் எடுக்க வேண்டாம். அதை சில நாட்கள் தள்ளிப் போடுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இறுக்கமான நிலையை காணப்படுவதால் உங்களுக்கு ஓய்வு என்பதே கிடைக்காது. சிறப்பான பலன் காண நீங்கள் திட்டமிட்டு பணி புரிய வேண்டும். அப்போதுதான் பணியில் நீங்கள் சிறப்பாக இருக்க முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நிதி வளர்ச்சி இருக்காது. செலவுகள் அதிகமாக இருக்கும். இதனால் கவலை ஏற்படும். திட்டம் போட்டு செலவு செய்யக்கூடிய மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று அசௌகரியமான நாளாக உள்ளது. பதட்டம் காணப்படும். ஆரோக்கிய குறைபாடு உள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று மிகவும் சிறப்பான நாளாக உள்ளதால் உங்கள் நலன்களை மேம்படுத்திக் கொண்டு சில முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு திருப்தி கிடைப்பதோடு மிகச் சிறப்பான பலன்களும் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் சமூகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு நன்மதிப்பை பெறக்கூடிய நாளாக இந்த நாள் உங்களுக்கு அமைந்துள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கையில் இருக்கும் பணம் போதுமான அளவு இருக்கும். பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் இருக்கக்கூடிய உற்சாகம் உங்கள் ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்தும் எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று அதிக அளவு பொறுப்புக்கள் உள்ளதால் உங்களிடையே பதட்டம் காணப்படும். இறைவழிபாட்டின் மூலம் உங்கள் மனதை கட்டுப்பாடுடன் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் மட்டுமே நீங்கள் நல்ல பலன்களை பெற முடியும்.

 தொழிற்ஸ்தானத்தை பொருத்தவரை பணி செய்யும் இடத்தில் திருப்தி இருக்காது. பணி உங்களுக்கு பணியை முடிப்பதில் தாமதம் ஏற்படும். எனவே தொழிலில் கண்ணும் கருத்துமாக கவனத்தை செலுத்துவது அவசியமான ஒன்றாகும்.

 நிதி நிலை பொறுத்த வரை குறைந்த அளவே பணம் உள்ளதால் என்ன செய்வது என்று எண்ணி திண்டாடுவீர்கள். பெரிய அளவிலான புதிய முதலீடு சம்பந்தமான எந்த ஒரு முடிவுகளையும் இன்று எடுக்க வேண்டாம்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால் எண்ணெய் பதார்த்தங்களை நீங்கள் அதிகளவு உட்கொள்வதை தவிர்த்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாக்க முடியும்.

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று நீங்கள் சௌரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. முக்கிய முடிவுகளை இன்று எடுக்க உகந்த நாள் இல்லை என்பதால் அந்த முடிவுகளை சில நாட்கள் தள்ளிப் போடவும். மனச சஞ்சலம் காரணமாக பல்வேறு விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் மனதில் ஏற்படும் கலக்கத்தை நீக்க இறைவழிபாடு செய்யவும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் வளர்ச்சி குறைந்து உள்ளது. பணியை குறித்த நேரத்தில் முடிக்க நீங்கள் முயலவேண்டும். கடினமாக உழைப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் தொழிலில் அபிவிருத்தி பண்ண முடியும். திட்டமிட்டு அனைத்தையும் மேற்கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் போதிய அளவு இல்லை. அதிக பொறுப்புக்கள் இருப்பதால் குடும்பச் செலவு அதிகரித்து இருக்கும். எனவே நிதியை பற்றி யோசிக்க கூடிய நாளாக உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் உடல் நிலையில் அதிக அக்கறை காட்ட வேண்டும். அதற்காக பண செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே தாயாரின் உடல் நிலையில் அக்கறை காட்டவும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே என்று இன்று கவன இழப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் எதிலும் பின்தங்கியே இருப்பீர்கள். உங்கள் செயல்களில் கவனம் தேவை. தியானம் மேற்கொள்வதின் மூலம் கடினமான சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியாது. பணியில் பலன்கள் உங்களுக்கு சாதகமாக வேண்டும் என்றால் கட்டாயம் நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று மிதமான பணப்புழக்கம்  இருக்கும். பொறுப்புகளை நிர்வகிப்பது சற்று கடினமாக இருக்கும் எனினும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கடன் வாங்கலாம். அந்த யோகம் என்று உங்களுக்கு உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சளி பிரச்சனைகள் ஏற்படும் குளிர்ச்சியான உணவு வகைகளை உண்பதை தவிர்த்து விடுங்கள் இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் உயரும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்று உங்கள் ஆற்றல் மூலம் வெற்றி அடைந்து விடுவீர்கள். உங்கள் மனதை தெளிவாக இருக்கும் எல்லா செயல்களையும் சிறப்பாக செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும். உறுதித் தன்மை காரணமாக இன்றைய நாளை உங்களது நாளாக மாற்றி விடுவீர்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை புதிய தொழில் வாய்ப்புகளால் நம்பிக்கையுடனும் புத்துணர்வுடனும் இருப்பீர்கள். உங்கள் பணிகளை விரைந்து முடிக்க முயற்சி செய்வீர்கள்.

 நிதி நிலைமை பொருத்தவரை போதிய அளவு பணம் காணப்படும். பணத்தைப் பொறுத்தவரை உறுதியான சூழ்நிலையை நிலவுகிறது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களிடம் தைரியம் அதிகரித்து இருப்பதின் காரணமாக ஆரோக்கியமும் மேம்பட்டிருக்கும். எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version