இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2023 செவ்வாய்க்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2023 செவ்வாய்க்கிழமை. என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு மனிதர்களுக்குள் இருக்கும் வரை தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் அந்த நடப்பில் நல்லது கெட்டது பற்றி கணித்து சொல்லக்கூடிய ஆற்றல் ஜோதிடக் கலைக்கு மட்டுமே உள்ளது மேலும் இந்த ஜோதிடக் கலையில் கூறப்பட்டிருக்கும் கிரக கூறுகளை கொண்டு அவர்களின் எதிர்காலத்தை எளிதில் கணித்து விடலாம்.

அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்று சீரானப் பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. சில நிகழ்ச்சிகளில் நீங்கள் பொறுமை இழந்து விடுவீர்கள். எனவே பொறுமையாக இருப்பது அவசியமானது.மேலும் பிறரோடு பேசும் போது வார்த்தைகளை கவனமாக கையாளுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று அதிகப்படியான வேலை இருக்கும். எனவே திட்டமிட்டு நீங்கள் வேலைகளை செய்வதின் மூலம் உங்கள் பணிகளை சிறப்பாக முடித்து விடலாம்.

நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் அதிக அளவு இல்லை.நீங்கள் அஜாக்கிரதை காரணமாக பணத்தை இழக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே  பணத்தை கவனமான முறையில் கையாள வேண்டும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை அஜீரணக் கோளாறுகள் ஏற்பட அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது. எனவே அதற்கு ஏற்ப நீங்கள் மருந்துகள் உட்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். பொதுவாக நீங்கள் அதிக அளவு நீரை பருகுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று நீங்கள் பணிகளில் அதிக அளவு பிஸியாக இருப்பீர்கள். பல பணி வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான அறிகுறிகள் காணப்படுகிறது. உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து இருப்பதால் நீங்கள் நினைத்த இலக்குகளை எளிதில் அடைந்து விடுவீர்கள். பேச்சாற்றல் மூலம் வெற்றிகள் வந்து சேரும்.

தொழிற்சாலத்தை பொருத்தவரை சிறப்பான வளர்ச்சி உள்ளது. பணிகளில் இறுக்கம் இருந்தாலும் அதை போக்கி செயல்படுவீர்கள்.மேலும் புதிய பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

நிதி நிலைமை பொறுத்த வரை இன்று சிறந்த வளர்ச்சி இருக்கும். கையில் உள்ள பணம் போதுமானதாக இருக்கும்.மேலும் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று அதிக ஆற்றலோடு இருக்கும் உங்களுக்கு ஆரோக்கிய சீர்கேடு ஏதும் ஏற்படாது எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று உற்சாகமான தருணங்களை நீங்கள் அனுபவிப்பீர்கள். உங்கள் தைரியமான போக்கால் பிரகாசமான வாய்ப்புகள் வந்து சேரும். பேச்சாற்றல் மூலம் பலவற்றை சாதிப்பீர்கள் எதிரிகளை உங்கள் பேச்சின் மூலம் அடக்கி விடுவீர்கள்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்த வரை சித்தையோடும் திறமையோடும் பணிகளை செய்வீர்கள். உங்களது சிறப்பான பணியை பார்த்து சக பணியாளர்கள் மற்றும் நேரதிகாரிகள் ஆதரவை தருவார்கள்.

நிதி நிலமையை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாள் என்று கூறலாம். உங்கள் சேமிப்பை உயர்த்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். நீங்கள் லாபகரமான முதலீடுகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை அதிக ஆற்றல் இருப்பதின் காரணமாக உங்கள் ஆரோக்கியம் ஸ்திரமாக இருக்கும். எனவே ஆரோகத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

கடகம்

கடக ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு அவ்வளவு சிறப்பான நாள் இல்லை என்று கூறலாம். எனவே எளிதில்  உணர்ச்சி வசப்பட வேண்டாம்.  பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. நீங்கள் இறை வழிபாடு செய்வதின் மூலம் அமைதி பெறலாம்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் அதிகரித்து இருக்கும் .இதனால் உங்களது சௌவுரியங்களை நீங்கள் விட்டுக் கொடுத்துத்தான் பணிகளை செய்ய வேண்டும். எனினும் பணிகளில் தவறுகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதால் திட்டமிட்டு பணி செய்யவும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை போதிய அளவு பணப்புழக்கம் இல்லை. பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை என்று கை, கால்களில் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் அஜீரண கோளாறுகள் ஏற்படலாம் எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

சிம்மம்

சிம்மராசி நேயர்களே இன்று நீங்கள் சற்று நிதானமாக செயல்பட வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு பாதகங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது .உங்கள் பணிகள் தடைகள் காணப்படும். அஜாக்கிரதை ,கவனமின்மை காரணமாக நீங்கள் மதிப்புகளை இழக்கலாம்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை வெற்றிக்கான வாய்ப்புகள் குறைவான அளவே உள்ளது. உங்கள் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். எனவே திட்டமிட்டு பணிகளை செய்யவும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை வீணான செலவுகள் ஏற்படும். கட்டுப்பாடற்ற செலவு செய்வதால் பணத்தை நீங்கள் சேமித்து வைப்பது கடினமாகும்.எனவே சிக்கனமாக செலவு செய்ய முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று திருப்திகரமான நாள் இல்லை. பல்வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் கண் சார்ந்த மருத்துவரை பார்ப்பது மிகவும் நல்லது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் இலக்குகளை எளிதாக அடைய உங்களது புத்திசாலித்தனம் மற்றும் திறமை பயன்படும். திட்டமிட்டு எதையும் உறுதியாக செய்வதின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் நல்ல வெற்றிகள் வந்து சேரும். கடினமான உழைப்பின் மூலம் நீங்கள் நல்ல பலன்களை பெறுவீர்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை சுதந்திரமான முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே நிதியை பற்றி அச்சம் தேவையே இல்லை.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று தைரியம் உங்களிடம் அதிகரித்து இருப்பதால் ஆரோக்கியமும் சிறப்பாகவே இருக்கும். நீங்கள் சுறுசுறுப்போடும் ஆற்றலோடும் இன்றைய நாள் முழுவதும் செயல்படுவீர்கள்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாள் என்பதால் சுய வளர்ச்சியின் மூலம் நீங்கள் பல வெற்றிகளை பெற முடியும்.மேலும் அதிக முயற்சி இல்லாமல் சிறிதளவு முயற்சி செய்தால் கூட அந்த காரியங்கள் வெற்றி அடையக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.

தொழிற்ஸ்தானத்தை பொறுத்தவரை திருப்திகரமான நிலை காணப்படும். நீங்கள் சிறந்த தரத்தோடு பணியாற்றுவதின் மூலம் மேலதிகாரிகளின் நன்மதிப்பு உங்களுக்கு விரைவில் கிடைக்கும்.

நிதிநிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஆன்மீக ஈடுபாடுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். மேலும் உங்களது சௌகரியத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் பணத்தை செலவு செய்யலாம்.இன்று நிதி நிலைமை சிறப்பாகவே உள்ளது.

மேலும் உறுதியாக இருக்கும் உங்களது மனப்போக்கின் காரணமாக ஆரோக்கியமும் சிறப்பாக உள்ளது. எனவே அதைப் பற்றி அச்சப்பட வேண்டாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று உங்கள் இலக்குகளை அடைவது கடினமாக இருக்கும்.மேலும் வெற்றி பெறுவதற்காக நீங்கள் திட்டமிட்டு எல்லா செயல்களையும் செய்ய வேண்டும். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.சற்று தள்ளி போடுங்கள்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை அதிக பணிகளால் கவலை ஏற்படும். பாதுகாப்பு இன்மை உணர்வு காரணமாக நீங்கள் தொழிலில் சரியான அளவு பணி செய்ய முடியாது.

நிதிநிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் வந்து சேரும். இதனால் உங்கள் பணம் எளிதில் கரையும். எனவே சிக்கனமாக என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசியுங்கள்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை தூக்கமின்மை காரணமாக உங்களிடையே பல பாதிப்புகள் ஏற்படும். கை, கால் வலி, முதுகு வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே இன்று உங்களிடம் ஸ்திரமான நம்பிக்கையும், உறுதியும் அதிகளவு காணப்படுவது தான் கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு நீங்கள் எளிதில் வெற்றி பெறுவீர்கள். இன்று நம்பிக்கையோடு செயல்படுவீர்கள்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை மேற்கொள்வதில் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் கவனத்தோடு பணிபுரிவது அவசியமாகும்.

நிதிநிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் வந்து சேரும். இதனால் நிதி நிலைமையில் சற்று சுமை அதிகரித்து இருக்கும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை அதிகளவு பதட்டம் காரணமாக கால்வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கவனம் தேவை. உடற்பயிற்சி செய்வதின் மூலம் நல்ல ஆரோக்கியத்தை நீங்கள் அடைய முடியும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் நீங்கள் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்க கூடிய திறமை உங்களிடம் மேலோங்கி இருக்கும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை செயல் திறனின் காரணமாக பணிகளை மிக நல்ல முறைகள் செய்து முடித்து விடுவதால் பணி புரியும் இடத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை போதிய அளவு பணப்புழக்கம் இருக்கும். எதிர்பாராத பண வரவுகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை இன்று ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று நீங்கள் பொறுமையோடும், உறுதியோடும் செயல்படுவது மிகவும் சத்தியமாகும். கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளதால் எதிலும் வேகத்தை தவிர்த்து திட்டமிட்டு முன்னேற முயற்சி செய்யுங்கள்.

தொழிற்சாலத்தை பொருத்தவரை அதிகப்படியான பணிகள் இருக்கும். சக பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புத் தர மாட்டார்கள். எனவே உங்கள் கோபம் அதிகரிக்கும். பணியில் கவனம் தேவை.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று திருப்திகரமாக இல்லை. தேவையற்ற செலவுகள் வந்து சேரும் இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பான நாளல்ல ஆற்றல் குறைந்து காணப்படும். உங்களுக்கு தலைவலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் அமைதியாக எதையும் கையாளுவதன் மூலம் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று தேவையற்ற விளைவுகளை தடுக்க எந்த செயல்களிலும் தொடங்கும் முன் நன்கு யோசித்து விட்டு துவங்க வேண்டும். உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும். இன்றைய செயல்களை மேற்கொள்ளும் போது பொறுமை அவசியம் தேவை.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணி சூழல் மகிழ்ச்சிகரமாக இல்லை.மேலும் பணிகள் அதிக அளவு காணப்படுவதால் சவால்களை சந்திக்க நீங்கள் திட்டமிட்டு செயல்படலாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை திருப்திகரமாக இருக்காது. கூடுதல் செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாள் இல்லை. கை, கால்களில் வலிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version