ம.பி., மிசோரமில் தேர்தல் பரப்புரை நிறைவு.. நாளை மறுநாள் வாக்குப்பதிவு


நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்றுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் மிசோரமில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வியாபம் ஊழல், பெட்ரோல்-டீசல் உயர்வு உள்ளிட்டவை மத்திய பிரதேசத்தில் முக்கிய பிரச்னைகளாக உள்ளன. இவைகளை மையப்படுத்தியே அரசியல் கட்சியினரின் பரப்புரை மேற்கொள்ளப்பட்டன. இதேபோல மிசோரம் மாநிலத்திலும் அனல் பறக்க தேர்தல் பரப்புரை நடைபெற்றது. பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அனல் பறக்க பரப்புரையில் ஈடுபட்டனர். தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், மிசோரமில் நாளை மறுதினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
Previous Post Next Post