இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள விளம்பரம் - அப்படி என்னதான் இருக்கு இதுல..!


கும்ப மேளா விளம்பரத்திற்கு பின்னர் ஹிந்துஸ்தான் யுனிலீவர் தடை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது. 

சமூக ஊடகங்களில் , சோப்பு பிராண்ட் சர்ப் எக்ஸ்செல் நிறுவனம் மீது கடும் ஆத்திரத்தை காட்டி வருகின்றனர். அந்த விளம்பர விளைவாக #பாய்காட் சர்ப் எக்ஸ்பெல் என்ற ஹேஸ்டேகை வார இறுதி நாட்களில் சமூக ஊடகங்களில் பயணித்து வருகின்றன.

தற்போது மீண்டும் இந்த நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறுமி மீது சில சிறுவர்கள் வண்ணப்பொடிகளை தூவுகின்றனர். 

அவர்களிடம் இருந்த வண்ணக்கலவை தீரும்வரை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளும் அச்சிறுமி தன் சைக்கிளில் இஸ்லாமிய சிறுவன் ஒருவனை அழைத்துச் சென்று மசூதியில் விடுகிறாள்.

இந்த விளம்பரம் இந்துத்வா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு சம்பாதித்துள்ளது. இதனால் இந்துஸ்தான் லிவர் நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சமூக வலைதளத்தில் பலரும் ஹிந்துஸ்தான் லிவர் பொருட்களை இனி வாங்குவது இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால், மேலும் சிலரோ இது இந்து மற்றும் முஸ்லீம் ஒற்றுமையாக இருப்பதை தான் உணர்த்துகிறது என்று கூறிவருகின்றனர்.
Previous Post Next Post