13 வயதில் நான்..! - நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்..!


கொண்டையில் தாழம்பூ .. கூடையில் என்ன பூ  குஷ்பூ என்று ரஜினியுடன்  குஷ்பூ ஆடிய பாடல் பட்டித் தொட்டியெல்லாம்  பரவியது.  ரஜினி, கமல்,  விஜயகாந்த்,பிரபு, கார்த்தி, சீரஞ்சிவி,  என தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளின் சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்தார்.

இதுஒரு பக்கம் என்றால், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொட்ட இடங்களிலெல்லாம் வெற்றியை பரிசாக பெற்றார். தற்போது அரசியலிலும் தனக்கான பாணியில் செயல்பட்டு வருபவர்.

1970ல் மும்பையில் பிறந்து வளர்ந்த குஷ்புவை அரவணைத்து வாழ்க்கை கொடுத்தது தமிழ் சினிமா . சினிமாவிற்கு வந்த காலங்களில் தமிழில் ஒரு வார்த்தைக்கூட தெரியாது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து தமிழை சரளமாக பேசக்கற்றுக் கொண்டார்.

அதன் பின்பு இயக்குனர் சுந்தர் சி வை திருமணம்  செய்துக் கொண்டு தமிழ்நாட்டின் மருமகளாகவே  மாறினார். உடையில் தொடங்கி பேசும் விதம் வரை குஷ்புவிடம் இருக்கும் நேர்த்தி எப்போதுமே தனித்துவமானது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தான் சினிமாவில் அறிமுகமானபோது முதன் முதலாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் கைப்பிடியில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து வருகிறார்கள்.