பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 125 குழந்தைகள் இறந்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு காரணம் ஒரு பழம்தான் என்று வெளியாகியுள்ள தகவல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் கோடைகாலத்தில் அதிகமாக விளையும் லிச்சி பழம். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்கும் என கூறப்படுகிறது. மூளைக்காய்ச்சல் ஏற்படுவதற்கும் உடலில் சர்க்கரை அளவு குறைவதுதான் காரணம் என்பதால் லிச்சி பழத்தால்தான் சர்க்கரை அளவு குறைந்திருக்க கூடும் என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags
India