மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ, தனுஷூடன் தொடரி, விஜய் உடன் சர்கார் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷுக்கு நடிகையர் திலகம் பெரும் வரவேற்பைக் கொடுத்தது. அந்தப் படத்தில் அவர் நடிகை சாவித்ரியாகவே வாழ்ந்து தனது திறமையை நிரூபித்திருந்தார்.
மீண்டும் தற்போது ஹீரோயினை மையப்படுத்திய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தநிலையில் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா, கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கும் படத்தை இயக்குவதாகவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். பொசு பொசுவென இருந்த இவர் உடல் எடை குறைகிறேன் பேர்வழி என்ற பாதையில் சென்று எழும்பும் தோலுமாக மாறியது அவரது ரசிகர்களுக்கு பிடிக்கவே இல்லை.
இந்நிலையில், அவருடைய சமீபத்திய புகைப்படம்oஒன்று வெளியாகியுள்ளது. இது நிஜமாகவே கீர்த்தி சுரேஷ் தானா என்று ரசிகர்கள் கண்களை தேய்த்து பார்த்து வருகிறார்கள்.




