அதர்வா நடிப்பில் வந்த பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை சமந்தா. ஆனால், இப்படத்திற்கு முன்னதாக விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தமிழ் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
சாதாரண ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பின், மாஸ் ஹீரோக்களான விஜய், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ஓ பேபி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 5-ம் தேதி வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ளது. தமிழில் மிகவும் பிரபலமான நடிகை லட்சுமி இப்படத்தில் நடித்துள்ளார்.
சென்னையில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் விஜய், அஜித் ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மூன்று மாடி உயரதிற்கு சமந்தாவிற்கு கட்-அவுட் வைத்துள்ளனர்.
என்னப்பா கத விடுறியா என்று கேட்கிறீர்களா..? இதோ புகைப்படம்,
Tags
Samantha Akkineni