கொளு கொளுவென வளர்ந்த ஆடு ஒன்று கசாப்பு கடைக்கு சென்று ஏக வசனம் பேசினால் கடைக்காரர் என்ன செய்வார். கசாப்பு போட்டுவிடுவார். அது போல 180 கோடி பணத்தை கொட்டி ஒரு படத்தை எடுத்து விட்டு வில்லங்கமான இடத்தில் கழுத்தை நீட்டி இப்போது எடுக்க முடியாமல் நெம்பிக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.
படம் எத்தனை கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் மத்தியில் இப்போது எந்த
பிரச்னையையும் தொடாமல் திரைக்கு வந்து விடுமா..? என்கிற எதிர்பார்ப்பு தான் எகிறிக்
கொண்டு இருக்கிறது.
இசை வெளியீட்டு விழாவில் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தது இப்போது அவரது
படத்திற்கு எதிராக திரும்பி நிற்கிறது. பிகில் விழாவில் அவர் பேனர்
விவகாரத்தை பேசியது சும்மா இருந்த அமைச்சர்களை கீறி இருக்கிறது.
அதிலும் தீவிர விஜய் ரசிகரான இருக்கும் அமைச்சர் கூட கடும் கோபத்தில் இருகிறாராம். படத்தை எடுங்க , ரிலீஸ் பண்ணுங்க தேவை இல்லாமல் சும்மா இருக்குறவங்கள சொறிஞ்சிகிட்டு இருந்தா சும்மா இருக்க முடியாது என கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
போதாக்குறைக்கு மத்திய அரசை விமர்சிக்கும் சில காட்சிகளை படத்தில் ஆங்காங்கே தெளித்து விட்டிருகிரார்களாம். யாரை திருப்தி படுத்த விஜய் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
ஏதாவது ஒரு சர்ச்சையில் படத்தை சிக்க வைத்தே படத்தை ஹிட் ஆக்க நினைக்கிறார். சர்ச்சை இல்லாமல் வந்த எல்லா படங்களும் ப்ளாப் ரகம் என விலாவரியாக புட்டு புட்டு வைகிரார்கலாம் ஆளும் தரப்பிற்கு நெருங்கியவர்கள்.
எந்தெந்த தியேட்டர்களில் பிகில் வெளியாகிறதோ அங்கெல்லாம் கடுமையான
கண்காணிப்பு கருட பார்வையுடன் இருக்கும் என்பது தெள்ள தெளிவாக தெரிகின்றது.
இதற்கிடையில்
முதல்வர் எடப்பாடியை சந்திக்க விஜய் நேரம் கேட்டிருந்ததாகவும் அதற்கு
சந்திக்க நேரம் இல்லை என பதில் வந்து விட்டதாகவும் கோலிவுட்டில் சில
புள்ளிகள் கூறி வருகிறார்கள்.
படம் வெளியாகி விட்டால் போதும் அதன் பிறகு அரசியல் வாதிகளே ப்ரமோஷன் செய்து படத்தை ஹிட் ஆக்கி விடுவார்கள் எனவும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.