பிக்பாஸ் முதல் சீசன் ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு சீசன். அந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டவர் நடிகை பிந்து மாதவி. அதிலும் இறுதி போட்டியாளர்களாக இருந்த 5 பேரின் அட்டகாசங்கள் எல்லாம் இதுவரை யாராலும் மறக்க முடியாத ஒரு விஷயம்.
பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் நடிகை பிந்து மாதவி.
வந்த பட வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை மட்டுமே தேர்வு செய்யும் அவர் தற்போது மாயன் என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில், அவர் கடவுள் பார்வதியாக நடிக்கிறாராம். அந்த படத்தின் போட்டோ ஷுட் வெளியாக பிந்து மாதவியா இது என ரசிகர்கள்ஆச்சரியத்தில்உள்ளனர்.
Tags
Bindhu Madhavi