பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷன் உடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணம் செய்யாமல் என்னை ஏமாற்றுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகையும், அவரது காதலியுமானசனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், 2019, மே 12ல் எனக்கும், தர்ஷனுக்கும் இருவீட்டாரது குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் மாதம் திருமணம் செய்யலாம் என்று இருந்தோம். ஆனால் பிக்பாஸ் வாய்ப்பு வந்ததால் திருமணத்தை தள்ளி வைக்கும்படி கூறினார்.
நானும் சரி என்றேன். நிச்சயதார்த்தம் நடந்ததை கூட வெளியே சொல்லக்கூடாது என்றார். நானும் அதை கடைபிடித்தேன். அவருக்காக என் பணத்தை ரூ.15 லட்சம் செலவு செய்துள்ளேன். அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு ஆளே மாறிவிட்டார். திருமணத்தை நிறுத்தினார்.
அவரிடம் பேச முயன்ற போதெல்லாம் என்னை அவமானப்படுத்துகிறார். அவர் பெற்றோரிடம் சென்று பேசினேன். தர்ஷனுக்கு அப்போது உன் மீது காதல் இருந்தது. இப்போது இல்லை என்கிறான். நீ உன் வாழ்க்கையை பார்த்துக்கோ என்கிறார்கள்.
இது பற்றி தர்ஷனிடம் பேச முயன்றேன். ஆனால், அவர் நான் படங்களில் நடிப்பதை காரணம் கூறி, என்னையும், சக நடிகர்களையும் இணைத்து தவறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்.
நீ யாரிடம் வேண்டுமானால் போய் கம்ப்ளெயின்ட் பண்ணிக்கோ, உன்னை எப்படி வாய் அடைக்க வைப்பது என எனக்கு தெரியும் என்று மிரட்டுகிறார். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் இன்று அவர் மீது புகார் கொடுத்துள்ளேன்.
அவர் வளர நான் காரணமாக இருந்தேன். ஆனால் இன்று நான் யார் என்றே தெரியாத மாதிரி நடந்து கொள்கிறார். நம்பிக்கை துரோகம் செய்து என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கூறியுள்ளார் சனம் ஷெட்டி.