எவ்வளவு பணம் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் - இதெல்லாம் கிறுக்குத்தனம் - பிரியா ஆனந்த் விளாசல்..!


நடிகை பிரியா ஆனந்த் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற போராடி வரும் ஒரு நடிகை. 

இவரது நடிப்பில் கடைசியாக துருவ் விக்ரம் நடித்த "ஆதித்ய வர்மா" படம் வெளியாகி இருந்தது. அப்படத்தை தொடர்ந்து நடிகையின் நடிப்பில் என்ன படம் வெளியாகிறது என்பது தெரியவில்லை. 

இந்நிலையில், தான் அவர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் முகத்தை வெள்ளையாக்கும் அழகு சாதன க்ரீம் விளம்பரங்களில் மட்டும் நடிக்கவே மாட்டேன். 

வெள்ளையாக இருப்பது தான் அழகு என்று சொல்வது மிகவும் தவறான விஷயம். தென்னிந்தியர்களிடம் இருக்கும் டஸ்கி கலர் , கண்ணில் இருக்கும் பிரகாசம் வேறு எங்கும் கிடையாது. 

தென்னிந்திய பெண்கள் டஸ்கி கலரில் இருந்தாலும் முகத்தில் இருக்கும் கலையும், கண்ணில் இருக்கும் ஸ்பார்க்கும் எங்குமே இருக்காது என்று பேசியுள்ளார்.

இதற்காக, ஏற்கனவே வெள்ளையாக இருக்கும் மும்பை பெண்களை இங்கே கூட்டி வந்து அவர்களுடைய கலரை குறைக்க மேக்கப் போட்டு பிறகு இந்த க்ரீம் போட்டால் தான் வெள்ளையாவார்கள் என்று கூறுவதெல்லாம் கிறுக்குத்தனம் என்று விளாசியுள்ளார்.