இந்த ஆண்டு தியேட்டர் உரிமையாளர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம். அதனை தொடர்ந்து, சூர்யாவின் சூரரைப்போற்று படமும் நல்ல எதிர்பார்ப்பில் உள்ளது.
மாஸ்டர் மற்றும் சூரரைப்போற்று ஆகிய இரண்டு படங்களும் தமிழ் புத்தாண்டு விடுமுறை தினங்களில் நேருக்கு நேர் போட்டி போட்டுக் கொள்ளும் என பல தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது சூரரைப்போற்று படம் மாஸ்டருடன் போட்டி போடுவதை விரும்பவில்லை என கூறுகிறார்கள்.
தளபதி விஜய்யின் படங்கள் சமீபகாலமாக 200 கோடி வசூலை சர்வ சாதாரணமாக கடந்து வருகிறது. சூர்யாவும் வசூலுக்கு சளைத்தவரல்ல. ஆனால் சமீபகாலமாக சூர்யாவின் படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெற்றிகரமாக செல்லவில்லை.
சூர்யாவிற்கு ஹிட் படம் அமைந்து வருடங்கள் பல ஆகி விட்டன. இதனால் சூரரைப்போற்று படத்தை தேவையில்லாமல் போட்டிபோட்டு களமிறக்கி வசூலுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் என சூர்யா தரப்பு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றி தேவைப்படுவதால் மாஸ்டர் படத்துடன் இறக்கினால் பாதிக்குப் பாதி வசூலில் பாதிப்பு ஏற்படும். ஆகையால் மாஸ்டர் படத்தின் வெளியீட்டுக்கு இரண்டு வாரங்கள் முன்னரே மார்ச் 27ம் தேதி சூரரைப்போற்று படம் வெளியாக உள்ளது.


