பிக்பாஸ் புகழ் தர்ஷன் பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமான ஒரு போட்டியாளராக வளம் வந்தார். எந்த ஒரு கெட்ட பெயரும் எடுக்காமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
நிகழ்ச்சியில் அவர் இருந்த நாட்களில் எல்லோரையும் கவர்ந்துவிட்டார். இந்த நிலையில் தான் அவர் மீது காதல் ஏமாற்று புகார் கூறியுள்ளார் நடிகை சனம் ஷெட்டி. இருவரும் ஆளுக்கொரு காரணங்கள் கூறுகின்றனர்.
ஆனால், உண்மை என்ன என்பது தெரியவில்லை. தினமும் இருவரும் ஒவ்வொரு விதமாக தங்களது நியாயத்தை கூறி வருகின்றனர். இந்த நேரத்தில் நடிகை சனம் ஷெட்டியின் முதல் காதலர் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரின் பெயர் அஜய் என்பதும் இருவரும் "கலைவேந்தன்" என்ற தமிழ் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இருவரும் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் பரவி வருகின்றன.
இதனை வெளியிட்டது யார்..? ஏதேனும் படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளா இது..? என்பதும் தெரியவில்லை. அதே நேரம்,அவளுக்கு ஒரு முன்னாள் காதலன் இருக்கிறான் என்று தெரிந்தும், கவர்ச்சியாக படங்களில் நடித்துள்ளார் என்று தெரிந்தும் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து விட்டு,பிறகு பிகினி உடையில் பேட்டி கொடுத்ததால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.