‘லிங்கா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா. இந்தப் படத்திற்கப் பின் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
இவர் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது உடல் எடை கூடியிருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து லிங்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சோனாக்ஷி அவர்கள் சமீபகாலமாக உடல் எடையை அதிகரித்து இருந்ததால் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கிண்டல் அடித்து வந்தனர்.
இன்ஸ்டா(கிலோ)கிராம்
சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சோனாக்ஷி சின்ஹா. 2010 ஆம்
ஆண்டு வெளியான "தபாங்" என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்
என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து இவர் ரவுடி ரத்தோர், சன் ஆப்
சர்தார், புல்லட் ராஜா திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிகாட்டி
மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்
கொண்டார்.
பாலிவுட் நடிகைகள் என்றாலே ஒல்லிப்பிச்சானாக தான் இருப்பார்கள். ஆனால்,சோனாக்ஷி மட்டும் சற்றே பூசினார் போல் குண்டாக இருந்ததால் இவரை பாலிவுட் ரசிகர்கள் கலாய்த்தனர்.
மற்ற நடிகைகள் தங்களது போட்டோவை அப்லோட் செய்ய இன்ஸ்டாகிராம் போதும் ஆனால், சோனாக்ஷிக்கு இன்ஸ்டாகிலோ வேண்டும் என்று கலாய்த்தனர்.
ஆரோக்கியமான டயட்
இதனால் உடல் எடையை குறைப்பதில் தீவிரம் காட்டிய இவர் ஆரோக்கியமான டயட் முறையில் உடல் எடையை குறைத்து சிக்கென மாறினார்.
அதன் பிறகு, பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு தன்னை கலாய்த்தவர்கள் முகத்தில் கரியை பூசினார்.
இந்நிலையில், கையில் வாழைப்பழத்தை வைத்துக்கொண்டு இன்று இரவு இது மட்டும் போதும் என கேப்ஷன் வைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இரட்டை அர்த்தத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Tags
Sonakshi Sinha