ஹை கிளாஸ் பொண்ணுங்க - வெறும் 15,000 - உங்களுக்கு இன்ஸ்ட்ரஸ்ட் இருக்கா..?? - உஷார்...!


நண்பர்களே.. கொரோனா மட்டும் உருமாறவில்லை.. ஹலோ சார் இந்தியன் பேங்-ல இருந்து பேசுறோம் உங்க ATM கார்டு மேலே இருக்க பத்னார் டிஜிட் நம்பர் சொல்லுங்க என்று பான்பராக் வாயன்கள் செய்த அட்டூழியமும் தற்போது உருமாறி வந்திருக்கு. 
 
என்ன சொல்றீங்க.. இப்போ எப்படி கிளம்பியிருக்காங்க-ன்னு கேக்குறீங்களா..? இந்த பதிவின் தலைப்பில் உள்ளது போல தான் கிளம்பியிருக்கிறது ஒரு கூட்டம். ஆனால், இந்த முறை பான்பராக் வாயன்கள் இல்லை.. பான் பராக் வாய்ச்சிகள்.
 

சுண்டி இழுக்கும் குரல்

 
கேட்டவுடன் சுண்டி இழுக்கும் காந்த குரலில் பேசும் பெண்கள் ரேண்டமாக ஒரு நம்பருக்கு போன் செய்கிறார்கள். ( நாளை அந்த நம்பர் உங்க நம்பராகவும் இருக்கலாம் பாஸ்..! ) எடுத்த எடுப்பில் எங்களிடம் ஹை கிளாஸ் பொண்ணுங்க உங்க ஏரியாவுலயே இருக்கு உங்களுக்கு தேவையான எல்லாத்தையும் பண்ணுவாங்க இந்த சர்வீசுக்கு 15,000 ரூபாய் என்று பல்லை இழிக்கிரார்கள். 
 
ஆஹா.. பொண்ணு பல்லை காட்டுதுன்னு திருப்பி நீங்களும் பல்லை கட்டினா மானம் போயிடும்.. கூடவே சேர்த்து வச்சிருக்க பணமும் போயிடும். முதல் அழைப்பிலேயே துண்டித்து விடுவது சிறந்தது. ஒருவேளை அவர்கள் வலையில் நீங்கள் சிக்கினால் சின்னாபின்னம் தான். 
 

சிக்கிடுவ சித்தப்பு

 
நடுவில் எல்லாம் எஸ்கேப் ஆகமுடியாது. அவர்களாகவே போய் தொலையுது என்று விட்டால் தான். இப்படி பேசி இளசுகள் முதல் பெருசுகள் வரை அந்தரங்க உரையாடல், போட்டோ, வீடியோ கால் என நீங்கள் வெளியே போனால் மானம் போயிடும் என்று பயப்படும் சில விஷயங்களை உங்களிடம் இருந்து கறந்து விடுவார்கள். 
 
பிறகு, பணத்தை போடு இல்லன்னா இன்டர்நெட்ல போட்றுவேன் என்று மிரட்டல்களில் ஆரம்பித்து அச்சில் ஏற்றமுடியாத அளவுக்கு அவர்கள் செய்யும் வில்லங்கங்கள் இருக்கும். 
 
சிக்கிடாதிங்க மக்கா...! - சாரி மேடம்-ன்னு சொல்லி உடனே போனை கட் பண்ணிட்டு வேலையை பாக்க ஆரம்பிச்சுடுங்க..!

Post a Comment

Previous Post Next Post