தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் சமீப நாட்களாக பகிரும் புகைப்படங்களில் இயற்கை சார்ந்த விஷயங்களும், பழமை சார்ந்த விஷயங்களும்தான் அதிகம் உள்ளன.
கொடைக்கானல், ஹைதராபாத் என செல்லும் இடங்களிலும் இயற்கையை ரசிக்கும் ரசிகையாகவே இருக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அமலாபால்.
தமிழில் அதோ அந்த பறவை போல படத்திற்கு பின் கடாவர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவரது சொந்த தயாரிப்பு ஆகும். இதையடுத்து தெலுங்கில் வெப்சீரிஸில் நடிக்கிறார்.
கன்னடத்தில் “யூ டர்ன்” படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பவன் குமார் இயக்கும், புதிய வெப் சீரிஸான குடி யெடமைதே என்ற வெப் சீரிஸில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
பேண்டஸி திரில்லராக உருவாகும் இந்த தொடர் 8 பகுதிகளை கொண்டது. அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும் டைம் லூப்பை அடிப்படையாக கொண்ட கதை இது.
அடுத்து நந்தினி ரெட்டி இயக்கும் ஆந்தாலஜி சீரிஸிலும் அமலா பால் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இந்த படங்கள், தொடர்கள் தவிர ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் விஸ்வேஷ் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் பாலிவுட்டில் அமலாபால் அறிமுகமாகவுள்ளார்.
சமீப காலமாக, யோகா, ஆன்மிகம் என்று தன்னை ஈடுபடுத்தி கொள்ளும் இவர் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Tags
Amala Paul