தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூவ் நீபோனும் காதலித்து வந்தனர்.
இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள் என்றும் கூறப்பட்டது. இருவரும் நெருக்கமாக படம் எடுத்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வந்தனர். இலியானா படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு ஆண்ட்ரூவ் தவறாமல் வந்து விடுவார்.
இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் வதந்தி பரவியது. இலியானாவின் கவர்ச்சி புகைப்படங்கள் பெரும்பாலானவை ஆண்ட்ரூவால் கிளிக் செய்யப்பட்டவையாகும். மேலும் இலியானா அடிக்கடி தனது தலைப்புகள் மூலம் அவரை 'கணவன்' என்று குறிப்பிட்டு வந்தார்.
இன்னும் ஒரு படி மேலே சென்றுஎங்கள் இருவருக்குள்ளும் எல்லாமே நடக்கும். ஆனால், குழந்தை பெற்றுக்கொள்வதை மட்டும் இப்போதைக்கு முடிவு செய்யவில்லை என்று கூறி அதிர வைத்தார்.
இந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாகவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது இல்லை என்றும், சந்தித்து கொள்வதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இலியானா மற்றும் ஆண்ட்ரூவின் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பார்த்தால், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பின்தொடரவில்லை, மேலும் புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர்.
இதை பற்றி கேட்ட போது, அது மிகவும் தனிப்பட்டது. இதைப்பற்றி அதிகம் பேச நான் விரும்பவில்லை, ஆனால் உலகம் இதைத்தான் அதிகம் பேசுகிறது" என கூறினார்.
அதன் பிறகு, படங்களில் நடிக்க ஆயத்தமான அவர் தன்னுடைய உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சிகளை செய்து தன்னுடைய குண்டான உடம்பை மீண்டும் சிலை போல செதுக்கியுள்ளார்.
அந்த வகையில், தற்போது கடுமையான உடற்பயிற்சி செய்து அது மிருகத்தனமானது என்று கூறியுள்ளார் அம்மணி.
Tags
Actress Ileana