நடிகை மாளவிகா தமிழில் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அவர் நடித்த திருட்டுப்பயலே, வெற்றி கொடிக்கட்டு, சந்திரமுகி, உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மாளவிகா.40 வயதை கடந்த பின்னரும், தன்னுடைய கட்டழகு கவர்ச்சியால், ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வரும், வால மீன் மாளவிகா... தன்னுடைய திரையுலகில் அஜித் , விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'உன்னைத் தேடி' என்ற படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா.தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என தென்னிந்திய மொழிகளில் 90 களின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
தனது வாழ்நாளில் மிகப்பெரிய பாக்கியம் என்றால் அது ’சந்திரமுகி’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட மாளவிகா, தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்காக உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா, தற்போது மீண்டும் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், தனது தொடையழகை க்ளோஸ் அப்பில் காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் கொஞ்சம் காத்தடிச்சா மொத்த மானமும் போயிருக்கும்... என்று கலாய்த்து வருகிறார்கள்.
Tags
Malavika