செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தனியார் கல்லூரி மாணவி ஒருவர் அதிகளவு மது அருந்தியதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இளைஞர்கள் பொழுது போக்கிற்காக போதைப் பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
இது பல்வேறு விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கிறது. போதைப்பொருட்களின் தீமை தெரிந்தும் இளைஞர்கள் மத்தியில் இதன் பயன்பாடு அதிகரிப்பது கவலை அளிக்கிறது.
இந்நிலையில், அதிகளவு மது போதை காரணமாக கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் கல்லூரி மாணவி பலி
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் படூரில் தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுவேதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஏகாட்டூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி கவிதா கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். விடுமுறைக்காக சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்று திரும்பிய கவிதா, திரும்பியதில் இருந்து மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
தோழியுடன் மது விருந்து - விபரீதம்
சம்பவத்தன்று கவிதா தனது தோழியின் விடுதி அறைக்கு சென்று இரவு முழுவதும் மது அருந்தியுள்ளார். இந்நிலையில், அதிகப்படியான மது போதை காரணமாக உடல் ஒத்துழைக்காமல் கவிதாவுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், கவிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் செங்கல்பட்டு விரைந்துள்ளனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அன்று இரவு நடந்தது இது தான்
இளைஞர்கள் மத்தியில் பெருகி வரும் போதை கலாச்சாரம் குறித்து கவலையும் விவாதமும் எழுந்துள்ளது. மேலும், கல்லூரி மாணவிகளுக்கு மது கிடைத்தது எப்படி..? யார் வாங்கி கொடுத்தது..? நிஜமாகவே மது அருந்தியதால் மட்டும் தான் மாணவி உயிரிழந்தாரா..? அன்று இரவு என்ன நடந்தது..? போன்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறார்கள் இணைய பக்கங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.
இது போன்ற சந்தேகங்களுக்கு விடையளிக்கு அன்று இரவு நடந்தது இது தான் என பொதுவெளியில் தெரியப்படுத்த.. குறிப்பிட்ட தனியார் விடுதியின் CCTV காட்சிகள் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை..? போன்ற விவாதமும் இணைய பக்கங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)

