நடிகை ஷகிலா, சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்தபடியாக கவர்ச்சி நடிப்பில் தனி முத்திரை பதித்தவர்.
சில்க் ஸ்மிதாவின் தங்கையாக அறிமுகமான ஷகிலா, 1990களில் தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் கவர்ச்சி படங்களால் பிரபலமடைந்தார். அவரது படங்களின் போஸ்டர்கள் நகரெங்கும் அரசியல் போஸ்டர்களை மிஞ்சி காணப்பட்டன.
தியேட்டர்களில் காலை மற்றும் இரவு சிறப்பு காட்சிகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக, ஷகிலாவின் படங்களை திரையிட தியேட்டர் நிர்வாகங்கள் போட்டியிட்டன.
கவர்ச்சி படங்களுடன், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மலையாள கவர்ச்சி படங்களில், கணவனை இழந்தவர், திருமணமாகாதவர், அந்த விஷயத்தில் திருப்தியடையாதவர் போன்ற மையப்படுத்திய கதைகளில் ஷகிலா நடித்தார்.
படுக்கையறை காட்சிகளே பிரதானமாக இருக்க, அவரது தாராளமான கவர்ச்சி படங்களுக்கு வசூல் குவிந்தது. ஆனால், இத்தகைய காட்சிகளில் சில ஆண் நடிகர்கள் வேண்டுமென்றே அத்துமீறியதாக ஷகிலா ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசினார்.
“படுக்கையறை காட்சிகளில் நடிக்கும்போது, சில நடிகர்கள் கேமரா முன்பு நிஜமாகவே என்னிடம் அத்துமீற முயற்சி செய்துள்ளார்கள். நான் ஒருவேளை அனுமதித்தாலும் அனுமதிப்பேன் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்களை தடுத்தேன். இது சினிமாவில் சாதாரணம் என்பதால் பெரிதாக எடுக்கவில்லை,” என கூறினார்.
ஷகிலாவின் இந்த ஓப்பனான பேச்சு, கவர்ச்சி நடிப்பின் பின்னணியில் உள்ள சவால்களை வெளிச்சமிட்டது. அவரது படங்கள் ரசிகர்களை கவர்ந்தாலும், படப்பிடிப்பில் நடிகைகள் எதிர்கொள்ளும் சங்கடங்களை புலப்படுத்தியது.
அந்த மேட்டரை வணிகமாக்கிய சினிமாவில், ஷகிலா தனது திறமையால் மட்டுமல்ல, துணிச்சலான பேச்சாலும் கவனம் பெற்றார்.