இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2023 செவ்வாய்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil :

இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2023 செவ்வாய்கிழமை.ஜாதகம் என்ன செய்யும் என்பவர் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு அந்த ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக சூழ்நிலைகளை அனுசரித்து எல்லாம் செய்யும் என்பதை நீங்கள் தைரியமாக எடுத்து உரைக்கலாம்.

ஏனென்றால் இந்த பூமி கூட சூரியனை சுற்றி வருவது நமக்கு நன்கு தெரியும். அது போல தான் ஒவ்வொரு கிரகங்களும் நமது வாழ்க்கையில் குறிப்பிட்ட காலகட்டங்களில் அதற்குரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

 அதன் அடிப்படையிலேயே ஒரு மனிதனுக்கு சிறப்பான காலகட்டமும் கஷ்டமான காலகட்டமும் ஏற்படுகிறது அப்படி ஏற்படுகின்ற கஷ்டமான காலகட்டங்களுக்கு உரிய பரிகாரங்களை செய்வதின் மூலம் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பித்துக் கொள்ள ஜோதிடம் பெரிதும் உதவியாக இருக்கிறது. அந்த ஜாதகத்தின் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று அதிர்ஷ்டம் இருக்கக்கூடிய நாளாக உங்களுக்கு உள்ளது. திருப்திகரமான பலன்கள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரக்கூடிய நாளாக இந்த நாள் விளங்குகிறது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் நேர்மையாக இருப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சரியான நேரத்தில் பணிகளை முடிப்பதன் மூலம் சக பணியாளர்களின் கவனத்தை ஈர்ப்புகள் உங்கள் பணியில் திறமை சிறப்பாக வெளிப்படும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை ஸ்திரமாக இருக்கும். சேமிப்புகள் அதிகரிக்கும். இதனால் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதைப் போல உணர்வீர்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பான நாளாக உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் ஆற்றல் அதிகரித்து காணப்படுவதால் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்று எதிர்பாராத வரவுகளும் வெற்றிகளும் கிடைக்கக்கூடிய நாளாக உள்ளது. உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி அதிகமாக சாதனைகளை செய்யலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் செயல் திறன் அதிகரித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கக் கூடிய நாள். குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பதற்கு அதிக சாத்திய கூறுகள் உள்ளது .எனவே தொழிலில் இன்று நீங்கள் சிறப்பாக திகழ்வீர்கள்.

இன்று நிதி நிலை சீராக இருக்கும். காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள். பூர்வீக சொத்து வகைகள் பணவரவு வந்து சேரும். எனவே மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்கள் ஆற்றல் அதிகரித்து திடமான மனநிலை இருப்பதால் ஆரோக்கியத்தில் எந்தவிதமான சுணக்கமும் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே என்று கவனமாக எந்த ஒரு செயலையும் கையாள வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இன்று கடினமான சூழ்நிலை காரணமாக  தடுமாறுவீர்கள். இசை கேட்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மூலம் உங்கள் மனதுக்கு ஆறுதல் ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க கடுமையான முயற்சிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும். சக பணியாளர்களின் மூலம் பிரச்சனைகளை அதிகரிக்கும்.  எனவே அவர்களுடன் நல்லுறவை நீங்கள் மேன்படுத்த முடியாது.

நிதி  நிலைமையை பொருத்தவரை அவ்வளவு திருப்திகரமான நாளாக இல்லை. தேவையற்ற செலவுகள் வந்து சேரும். இது மேலும் உங்களை கவலையில் ஆழ்த்தும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை பதட்டமான சூழ்நிலை காரணமாக முதுகு வலி ஏற்படும். மனதை தெளிவாக வைப்பதன் மூலம் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். இறை வழிபாட்டில் உங்களது மனதை செலுத்தவும்.

கடகம்

கடக ராசி நேயர்களே இன்று திருப்திகரமான பலன்கள் உங்களுக்கு நினைத்தாலும் கிடைக்காது. உங்கள் இலக்குகளை அடைய திட்டமிட்டு திறமையாக நீங்கள் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். அதை தள்ளிப் போடுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் அதிகரித்து காணப்படும். குறித்த நேரத்தில் பணிகளை உங்களால் முடிக்க இயலாத சூழ்நிலை இருக்கும். எனவே பணிகளை முடிக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

நிதி நிலைமையை பொருத்தவரை கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே பணத்தை கையாளும் போது கவனத்தோடு கையாளுங்கள். சிக்கனமாக இருக்க முயற்சி செய்யவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சற்று பதட்டமான நாள் என்பதால் கை கால்களில் வலி ஏற்படும் இது உங்களுக்கு ஆழ்ந்த கவலை தரும். எனவே ஆரோக்கியத்தை பற்றி கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கக்கூடிய நாள். எனவே இந்த நாளை நீங்கள் சாதகமான நாளாக மாற்றிக் கொள்ளுங்கள். கடின உழைப்பு மற்றும் இடைவிடாத முயற்சி காரணமாக லாபகரமான பலன்கள் இன்று உங்களுக்கு அதிக அளவு காணப்படும். வளர்ச்சி மேம்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். மேல் அதிகாரிகளின்  பாராட்டு உங்களுக்கு வந்து சேரும். எனவே தொழிலை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று பணம் சேர்ப்பதற்கான நாள் என்று கூறலாம். அதிர்ஷ்டம் அதிகமாக உள்ளது. உங்கள் சேமிப்பு உயரும். நீங்கள் அதன் மூலம் சவுகரிகமாக இருப்பீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று மன உறுதி காரணமாக உங்கள் ஆரோக்கியத்தில் எந்த ஒரு பிணக்கும் இல்லை. ஆரோக்கியம் மிக நல்ல முறையில் இருக்கும்.

கன்னி

கன்னி ராசியை அன்பர்களே என்று முன்னேற்றகரமான பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி அனைத்திலும் முயற்சி செய்து வெற்றி பெறுவீர்கள்.மொத்தத்தில் இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் நன்மைகளை தரக்கூடிய நாள் என்று கூறலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி தொடர்பாக நீங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். குறித்த நேரத்தில் பணிகளை முடித்து உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதனால் உங்களுக்கு பாராட்டு மழை கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை தொலைதூரத்தில் இருந்து வரும் பணம் உங்களுக்கு மிகச்சிறந்த பயனுள்ளதாக இருக்கும். எதிர்கால பாதுகாப்புக்காக பணத்தை சேமிக்க திட்டமிடுவீர்கள். நிதி நிலையில் எந்த ஒரு சுணக்கமும் இல்லை.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் மனநிலை இன்று மகிழ்ச்சியோடு இருப்பதால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று உங்கள் செயல்களில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். சாதகமான பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால் கடினமான சூழ்நிலைகளை கவனமாக முயன்று கையாள வேண்டும். இசை கேட்டல் தியானம் செய்தல் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருப்பதால் நீங்கள் பணியை கவனத்தோடு செய்ய வேண்டும். உங்கள் பணியை ஒரு முறை அல்ல இருமுறை சரிபார்த்து செய்வதின் மூலம் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பணியில் கவனத்தை செலுத்துங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்த வரை எதிர்ப்பார்த்த பணவரவு வந்து சேராது. இன்று அதிகம் சம்பாதிக்க முடியாது. கடினமான சூழ்நிலை நிதியில் நிலவும். எனவே பணத்தை ஜாக்கிரதையாக கையாளவும்.

 ஆரோக்கியமும் பதட்டம் காரணமாக கை கால் முட்டுக்களில் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பிரார்த்தனை மற்றும் தியானத்தை மேற்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே என்று சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். முடிவுகளை விரைந்து எடுப்பதன் மூலம் தவறுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வதின் மூலம் நல்ல பலனை காணலாம்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். சக பணியாளர்களிடம் உங்களுக்கு தொல்லைகள் ஏற்படும். எனவே ஜாக்கிரதையாக இருக்கவும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையற்ற செலவுகள் காரணமாக பண இருப்பு விரைவில் கரையும். சேமிக்க கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது.

ஆரோக்கியத்தை பொருத்தவரை தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். தலைவலியும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்தவும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இன்று வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கக்கூடிய நாளாக இருப்பதால் நீங்கள் முயற்சிகளை நல்ல முறையில் செய்வதின் மூலம் வெற்றி வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். இலக்குகளை நிர்ணயித்து செயல்படுங்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். நினைத்ததை சாதிப்பீர்கள். எனவே என்று தொழிலில் எந்தவிதமான பிணக்கமும் உங்களுக்கு இல்லை.

நிதி நிலைமை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஊக்கத்தொகை வந்து சேரும். பண வரவு ஏற்படுவதால் பல வழிகளில் உங்களுக்கு சேமிப்பு உயர வாய்ப்புகள் உள்ளது.

ஆரோக்கியத்தை பொருத்தவரை சுறுசுறுப்பு மட்டும் மனதிடம் காரணமாக ஆற்றல் நிரம்பி இருக்கும். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் எனது ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

மகரம்

மகர ராசி நேயர்களே இன்று உங்களுக்கு குழப்பங்களும் வருத்தமான சூழ்நிலைகளும் ஏற்படும். மனநிலையில் சற்று தடுமாற்றம் இருக்கும். இன்றைய நாளை சமாளிக்க நீங்கள் அமைதியோடும் கட்டுப்பாடோடும் செயல்படுவது அவசியம்.

தொழில் ஈடுபட்டாலும் அதை எளிதில் முடிக்க முடியாது. சக பணியாளர்களிடம் நீங்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். எனவே திட்டமிட்டு பணியை மேற்கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நிதி வளர்ச்சி அதிகம் இல்லை. கையில் இருக்கும் பணத்தை சேமிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளை தவிர்த்து விடுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே இன்று நல்ல பலன்கள் கிடைக்காது. சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நிலவும். பொறுமையுடனும் திறமையுடனும் எதையும் கையாளுவது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். தர்மங்கள், தானங்கள் செய்வதின் மூலம் உங்கள் மனம் அமைதி பெறும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சக பணியாளர்களுடன் அசௌரியங்களை உணர்வீர்கள். இது மாதிரியான அற்ப விஷயங்களை தவிர்த்து உங்கள் பணியில் கவனத்தை செலுத்துவது மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் சங்கடங்களை ஏற்படுத்தும். அதிகமான செலவுகளால் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படும். கையிருப்பு குறையும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான நாளில்லை. உங்கள் கை கால்களில் வலி ஏற்பட்டு அவஸ்தைக்கு உள்ளாக நேரிடும். எனவே நீங்கள் ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்று முன்னேற்றகரமான பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. பொறுமையுடன் இருந்தால் பல நன்மைகளை நீங்கள் பெற முடியும்.வெறுமையாக இருப்பது போல உணர்வு ஏற்படும். தியானத்தின் மூலம் இந்த சூழ்நடையில் சமாளித்து நீங்கள் அமைதி பெறலாம்.

 தொழிலைப் பொறுத்தவரை பணிகளை மேற்கொள்வதில் தடைகள் ஏற்படும். எனினும் திட்டமிட்டு பணியாற்றுவது மிகவும் அவசியம். அதை உணர்ந்து செயல்பட்டால் நன்மைகள் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை விரும்பும் பலன்கள் இல்லை. உங்கள் பணத்தை நிர்வகிப்பது கடினமாக இருக்கும். எனவே திட்டமிட்டு பணத்தை கையாள வேண்டும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை தேவையற்ற குழப்பங்களால் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும். அமைதியாக இருப்பது நல்லது எனவே தியானத்தில் புத்தியை செலுத்தவும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …