Tuesday, September 24

இன்றைய ராசிபலன் 23 பிப்ரவரி 2023 வியாழக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 23 பிப்ரவரி   2023 வியாழக்கிழமை. ஒவ்வொரு மனிதனின் ஜனனத்திற்கு பிறகு எழுதப்படுகின்ற ஜாதகம் ஆனது அவர்களின் பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது.. எனவே அவனின் வளர்ச்சி மற்றும் தோல்விகளுக்கான சூழ்நிலைகள் எந்த எந்த காலகட்டத்தில் எப்படி அமையும் என்பதை எளிதில் இந்த ஜாதகத்தை வைத்து கணித்து விடலாம்.

 அது மட்டுமல்லாமல் அவனுக்கு ஏற்படக்கூடிய கண்டங்கள், ஆரோக்கிய குறைபாடுகளையும் நாம் முன்னரே கண்டுபிடித்து அதற்குரிய பரிகாரங்களை செய்வதன் மூலம் கண்டங்களில் இருந்து ஓரளவு நாம் விடுதலை அடைய முடியும். அத்தகைய சிறப்புமிக்க ஜாதக பலாபலனை அறிந்து கொள்ள அனைவரும் விருப்பப்படுவார்கள். பொதுவாக கூறப்படுகின்ற சில பலன்களுக்கு சில நேரங்கள் மாற்றம் இருக்குமா என்று கேட்டால் அது அவரவர் ஜாதகத்தின் படியும் தசா புத்தியின் படியும் அமையும் எனக் கூறலாம். எனவே அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

 மேஷ ராசி நேயர்களே இன்று நீங்கள் எதையும் செய்யும்போது மிகவும் அமைதியாக செய்ய வேண்டும். கடினமான சூழ்நிலைகளை இன்று சந்திக்க வேண்டிய நிலை இருப்பதால் நீங்கள் உங்கள் முழு ஆற்றலையும் எந்த ஒரு செயலை செய்யும் போதும் செலுத்த வேண்டிய உள்ளது. பொழுதுபோக்குக்காக சில நேரங்களை ஒதுக்கி செலவிட நீங்கள் விருப்பப்படுவீர்கள்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை என்று பொறுப்புகள் அதிகரிக்கும் நாள் கட்டாயமாக நீங்கள் பணிகளை கவனமாக கையாள வேண்டி இருந்துள்ளது. அப்படி நீங்கள் கையாளவில்லை என்றால் தவறுகள் நிகழ்வதோடு உங்களுக்கு அது வருத்தத்தை தரக்கூடிய நிலையை ஏற்படுத்தும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பண இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆரோக்கியத்தில் இன்று உங்களுக்கு தொண்டை வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் குளிர்ந்த பொருட்களையோ, குளிர்பானங்களையோ, ஐஸ்கிரீன்களையோ சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சூப்பராக இருப்பதால் சவுரியமாக இருப்பீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் நல்ல பயன்கள் வந்து சேரும். உங்கள் தன்னம்பிக்கை சற்று உயர்ந்து காணப்படும்.

 தொழில் ஸ்தானத்தையும் பொறுத்த வரை குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள். மன உறுதியால் பணிகள் அனைத்துமே தங்கு தடை இன்றி எளிதில் முடியும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை திறத்தன்மை இருப்பதால் உங்கள் சொத்துக்களின் அளவை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதின் மூலம் நீங்கள் லாபம் அடையலாம். ஆரோக்கியத்தை பொருத்தவரை மிகவும் சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை.

மிதுனம்

மனதில் இன்று தெளிவான நிலை இருப்பதால் உங்கள் செயல்கள் அனைத்தும் திறமையாக செயல்பாட்டுக்கு வரும். நீங்கள் மிகச் சிறந்த செயல்களை செய்து உங்கள் நிலையை மேம்படுத்திக் கொள்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல பலன் என்று வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணியிடத்தில் வெற்றி மேல் வெற்றி வந்து குவிய கூடிய பலன்கள் அதிக அளவு உள்ளது. கடின உழைப்புக்கு ஏற்ப உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை லாபம் அதிகரிக்கக்கூடிய நாள் என்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்வதற்காக நீங்கள் யோசிப்பீர்கள். எனவே இந்த நாளை சேமிப்புக்காக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுவது நலம் தரும். ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி எந்த விதமான கவலையும் படவேண்டிய அவசியம் இல்லை.

கடகம்

 கடக ராசி அன்பர்களே இன்று பதட்டமான சூழ்நிலை உங்களுக்கு நிலவுவதால் எந்த விஷயத்தையும் நீங்கள் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். மன அமைதியை வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். கூடுதல் பொறுப்புக்கள் உங்களுக்கு வந்து சேர்வதால் அது கவலையை ஏற்படுத்தும். இரவில் தூக்கம் இன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 தொழிலைப் பொறுத்தவரை நல்ல பலனை நீங்கள் அடைய வேண்டும் என்றால் கடினமான உழைப்பை மேற்கொள்ள வேண்டும். பணியில் வெற்றி பெற சில சௌரியங்களை நீங்கள் விட்டுக் கொடுத்து ஆக வேண்டும். எனவே இந்த நிலை உங்களுக்கு அதிருப்தியை அளிக்கும்.

 நிதி நிலைமையிலும் சற்று சுணக்கம் இன்று நிலவுவதால் நீங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதே கடினமாக இருக்கும். பொறுப்புக்கள் அதிகரிப்பதின் காரணமாக நிதி நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதற்காக பண செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களுக்கு  இன்று அதிருப்தியான நாள் என்பதால் நீங்கள் அனுசரணையாக நடந்து கொள்வதால் மட்டுமே வெற்றியை பெற முடியும். சிறந்த பலன்கள் வேண்டும் எனில் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். மேலும் எதிர்காலத்திற்காக நீங்கள் திட்டமிடுவது அவசியம்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை சக பணியாளர்களுடன் நல்லுறவாக இருந்தால் மட்டுமே நீங்கள் உங்கள் பணியில் சிறப்பாக நடந்து கொள்ள முடியும். பணி செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் தவறுகள் நேரலாம். தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் நீங்கள் கட்டாயம் கவனத்தோடு பணியை செய்யுங்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பயணத்தின் போது பண  இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பல்வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது, கண் சம்பந்தமான பிரச்சனைகளும் உங்கள் ஆரோக்கியத்தில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதால் கவனத்தோடு செயல்படுங்கள்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அட்டகாசமான நாளாக இருப்பதால் பல வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு இந்த நாளில் கிடைக்கக்கூடிய நல்ல பலன்கள் மூலம் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள்.

 தொழிலைப் பொறுத்தவரை பொறுப்புணர்வுடனும், சிரத்தையுடனும் நீங்கள் பணி செய்ய முயற்சி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். கடினமான பணிகளை மிக எளிதாக செய்து பாராட்டுகளை பெறுவீர்கள்.

 நீதி நிலைமை பொறுத்த வரை இன்று சீராக இருப்பதால் பணத்தை நீங்கள் பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த ஒரு குறையும் இல்லை என்பதால் உங்களது ஆரோக்கியம் இன்று சீரும் சிறப்புமாக இருக்கும்.

துலாம்

 வெற்றிகளை வாரிக் குவிக்க கூடிய நாளாக இந்த நாள் அமைந்திருப்பதால் இந்த நாள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். கடினமான பணிகளை கூட மிக எளிதில் முடிக்கக்கூடிய ஆற்றல் படைத்த துலாம் ராசி நேயர்கள், இன்று செயல்கள் செய்யும்போது சற்று கவனத்தோடு இருக்கலாம். மேலும் முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுப்பது நல்லது.

 தொழிலைப் பொறுத்தவரை இன்று பணிபுரியும் இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் நன்மதிப்பை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் தொழில் ஸ்தானம் திருப்திகரமாக இன்று உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை உங்களுக்கு சாதகமான நாள் என்பதால் சேமிப்புக்கள் உயரும். பணத்தை தக்க வழியில் நீங்கள் பயன்படுத்துவீர்கள். ஆரோக்கியமும் அதுபோலவே மிகச் சிறப்பாக இருப்பதால் உங்கள் மனநிலையில் தெளிவு இருக்கும் ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

விருச்சிகம்

 விருச்சிக ராசி நேயர்களே இன்று உங்கள் செயல்கள் சீராக நடக்காது. அதிக பொறுப்புகள் இருக்கும் இதன் மூலம் உங்களுக்கு கவலை ஏற்படும். உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும் முக்கிய முடிவுகளை எடுக்கவும் இந்த நாள் உகந்த நாள் இல்லை.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை  பணியை குறித்த நேரத்தில் நீங்கள் செய்து முடிக்க முடியாது. கூடுதல் பணி சுமை காரணமாக திட்டமிட்டு பணிகளை செய்வது மிகவும் நல்லது. எனினும் கடினமான சூழ்நிலையே இன்று நிலவுகிறது.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் குறைந்து இருக்கும். கூடுதல் செலவுகள் ஏற்படும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியமும் சிறப்பாக இல்லை என்பதால் கை கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

தனுசு

 தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சாதகமான பலன்கள் இல்லை என்பதால் சமநிலையை நீங்கள் இழக்க நேரிடும். நற்பலன்களை காண எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் பெரிதாக்காமல் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள்.இன்று முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடுங்கள்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணிசுமை அதிகளவு இருப்பதால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படும். பணிகளை செய்வதற்கு சளிப்பும் இருப்பதால் இன்று தொழில் நிமித்தமான வேலைகள் அனைத்தும் சற்று மந்தமாக தான் இருக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிகரிக்க கூடிய நாளாக இருப்பதால் பணசுமை ஏற்படும். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் ஆரோக்கியத்தை பொருத்தவரை கை, கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்களது மனதை ஆன்மீகத்தில் திருப்புவதின் மூலம் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள முடியும்.

மகரம்

 மகர ராசி அன்பர்களுக்கு இன்று சிறந்த வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நாள் என்பதால் முக்கிய இலக்குகளை நீங்கள் திட்டமிட்டபடி அடைய முடியும். எதிர்பார்த்ததை விட இன்று அதிக அளவு பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுப்பது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

 பணியிடத்தில் அதிகளவு வாய்ப்புகள் காணப்படுவதால் நீங்கள் அந்த பணிகளை திறமையாகவும் விரைவாகவும் முடிப்பீர்கள். உங்கள் அணுகுமுறையை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை உங்கள் சேமிப்பு உயரும். பணம் எல்லாவற்றிலும் லாபம் தரக்கூடிய வகையில் இருக்கும். புதிய முதலீடுகளில் நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று மிகவும் சிறப்பான நாளாக இருப்பதால் ஆரோக்கியத்தில் எந்த குளறுபடியும் இல்லை.

கும்பம்

 கும்ப ராசி நேயர்கள் இன்று எவ்வளவுதான் முயன்றாலும் சாதகமான பலன்கள் கிடைக்காது. அஜாக்கிரதையாகவும், கவனயின்மையோடும் எதிலும் நீங்கள் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் உங்கள் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். மிக நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்பதால் நீங்கள் கவனத்தோடு இருங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை வெற்றிகள் அதிகளவு கிடைக்காது. பணிகள் தேங்கும் எனவே திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிக்க நீங்கள் முயற்சி செய்யலாம்.நிதி நிலைமையை பொறுத்தவரை வீணான செலவுகள் காணப்படும்.

 உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முடியாது எனவே சிக்கனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமும் திருப்திகரமாக இல்லை என்பதால் உங்களுக்கு சளி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது கவனமாக இருங்கள்.

மீனம்

 மீன ராசி நேயர்களுக்கும் இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இல்லை. பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் உங்களுக்கு கவலை ஏற்படும். சில தடைகளை நீங்கள் சந்திப்பீர்கள் உங்களது வளர்ச்சியை அது பாதிக்கும் வகையில் இருக்கும். எனவே சிறப்பான முறையில் வளர்ச்சி காண திட்டமிட்டு செயல்படுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இல்லை எனில் மோதல்கள் ஏற்படும் பணி சுமை காரணமாக நீங்கள் திட்டமிட்டு அனைத்தையும் செய்து முடியுங்கள்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை கட்டுப்பாடோடு நீங்கள் இருப்பது நல்லது. கூடுதல் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். பொறுப்புடன் செயல்படுவதால் மட்டுமே நிதி நிலைமையை கட்டுக்குள் வைக்க முடியும்.

மன உளைச்சல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிப்படையலாம்.எனவே பதட்டத்தை விடுத்து தியானத்தை மேற்கொள்வது உங்களுக்கு நன்மை தரும்.