இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை. வாழ்க்கை என்றால் ஏற்,ற இறக்கங்கள் இருப்பது வாடிக்கைதான். இந்த ஏற்ற இறக்கங்களிலும் நாம்  தன்னம்பிக்கையோடு செயல்படும் போது நம்மால் நமக்கு ஏற்படும் தடைகளை கடந்து வெற்றி இலக்கை எளிதாக அடைய முடியும்.

 அதற்கு நாம் உதவிகரமாக இருக்க கூடிய ஜோதிடக் கலையை என்றும் மறக்கக்கூடாது. நமது பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படக்கூடிய ஜாதகத்தில் இருக்கும் கிரகக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு கொண்டு நம் ராசிக்கான பலன்கள் கணிக்கப்படும்.

அதனை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற நாம் திட்டங்களை தீட்டி நடக்கும் போது நமக்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதோடு குறிப்பிட்ட அளவு வெற்றி இலக்குகளை எளிதாக அடைந்து விடலாம். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களின் இன்று ஆன்மிக சிந்தனையோடு நீங்கள் இருப்பீர்கள். ஆன்மீகம் பற்றிய கலந்துரையாடல்களில் கலந்து கொள்வீர்கள். இதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.

தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியின் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்கள் உடன் பணியாற்றும் சக பணியாளர்களை அனுசரித்து நடந்து கொள்வதின் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரவு மிதமாக இருக்கும். பணம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை அந்த அளவுக்கு சேமிக்க கூடிய சூழ்நிலை இருக்காது. எனவே சிக்கனமாக பணத்தை செலவு செய்ய வேண்டும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்களில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கண் மருத்துவரை சந்தித்து உரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். முகப்பருக்கள், வெயிலால் ஏற்படக்கூடிய கொப்பளங்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது அவசியமாகும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இன்றைய தினம் சவால்கள் நிறைந்த தினம் என்று கூறலாம். உங்களிடம் காணப்படும் ஈகோ பிரச்சனையின் காரணமாக சில தடங்கல்கள் நேர வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் ஈகோ பார்க்காமல் இருப்பது மிகவும் நல்லது.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிவிடத்தில் சக பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இதனால் உங்கள் மனதில் குழப்பங்கள் உண்டாகும். பணியில் தோல்வி ஏற்படும். எனவே தொழிலில் கவனமான முறையில் செய்ய வேண்டும்.

நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று மிதமான அளவே பண வரவு இருக்கும்.நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்வதின் மூலம் உங்கள் நிதி நிலைமையை அதிகரிக்க முடியும். சரியான முறையில் நிதியை பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரையில்  தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே குளிர்ச்சியான உணவுப் பொருட்களை நீங்கள் உண்ண வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று மந்தமான நாளாக உங்களுக்கு இருக்கும். எனவே முன்னேற வேண்டுமென்றால் நீங்கள் கவனத்தோடு செயல்பட வேண்டும். மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் முன்னேற்ற பாதையில் தடைகள் ஏற்படும். எனவே சிந்தித்து அறிவுப்பூர்வமாக செயல்படுவது மிகவும் நல்லது.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை உறுதியோடும், எளிதாகவும் பணியாற்றக்கூடிய திறன் உங்களுடைய மேலோங்கும். உங்கள் முயற்சியின் மூலம் நல்ல பலன்களை இன்று பெற முடியும்.தொழிலைப் பொறுத்தவரை இன்று அபிவீர்த்தியான நாள் என கூறலாம்.

நிதி நிலைமையை பொருத்தவரை இன்று சாதகமான நாளாக இல்லை. இன்றைய நாளின் முடிவில் தேவையில்லாத செலவுகள் வந்து சேரலாம். எனவே பணத்தை செலவு செய்வதில் சிக்கனம் தேவை.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சூட்டின் காரணமாக முகத்தில் சில தோல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே குளிர்ச்சியான உணவுப் பொருட்களை அருந்தி சூட்டில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே இன்று சரியான முடிவுகளை நீங்கள் எடுத்து அனைத்தையும் சாதித்து விடுவீர்கள். உங்கள் முடிவில் மகிழ்ச்சி ஏற்படும். எனவே இன்றைய நாள் சிறப்பான நாளாக உங்களுக்கு அமைந்துள்ளது.

தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை கொடுக்கப்பட்ட பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். இது உங்களுக்கு கவலையை தரும். எனவே பணியை திட்டமிட்டு செய்வதின் மூலம் கால தாமதத்தை தவிர்த்து விடலாம்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று அபாரமான நாள் என்று கூறலாம். நீங்கள் காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்ய முயற்சி எடுக்க கூடிய நாள். அதிலும் வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை மகிழ்ச்சி காரணமாக இந்த இன்று ஆரோக்கியத்தில் எந்த விதமான குழப்பமும் இல்லை. முழு ஆரோக்கியத்தோடு என்று இருப்பீர்கள்.

சிம்மம்

சிம்மராசி அன்பர்களே இன்று நிறைய மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஆன்மீக விஷயங்களில் உங்கள் மனதை செலுத்துவதின் மூலமே அனைத்தும் சீராக நடக்கும்.

தொழில் தானத்தை பொருத்தவரை சாதாரணமாக நீங்கள் பணிகளை மேற்கொண்டு நல்ல முறையில் முடித்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தொழில் நிமித்தமாக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

நிதி நிலைமையை பொருத்தவரை பணவரவுக்கான அதிர்ஷ்டம் குறைந்து உள்ளது. கூடுதல் செலவுகள் அதிகரிக்கும். எனவே எப்படி சிக்கனமாக செலவுகளை செய்யலாம். பணத்தை நீங்கள் திட்டமிட வேண்டி இருக்கும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை தந்தையின் உடல் நலத்தில் அக்கறை தேவை. அவரது உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரிடும். எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தையும் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே என்று உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வந்து சேரும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி தரும். இறை பிரார்த்தனையில் மனதை ஈடுபடுத்தலாம். ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவது நன்மையை தரும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை கவனக் குறைவு காரணமாக சில சமயங்களில் நீங்கள் மேற்கொண்ட பணிகளில் உங்களுக்கு குழப்பம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.

நிதி நிலைமையை பொறுத்தவரை என்று ஏற்ற இறக்கமான பலன்களை உள்ளது. வரவும், செலவும் சேர்ந்து வரும். உங்கள் சேமிப்புக்கு சில கட்டுப்பாடுகள் ஏற்படும். எனவே பணத்தை திட்டமிட்டு செலவு செய்யவும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வதின் காரணமாக உங்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே இன்று மந்தமான நாளாக உள்ளது. மேலும் நல்லது எது, கெட்டது எது என்று பிரித்து அறிய முடியாமல் நீங்கள் கஷ்டப்படுவீர்கள். அதிர்ஷ்டத்தை தயவுசெய்து நம்பி இருக்காதீர்கள். கடின உழைப்பால் மட்டுமே உங்களால் நல்ல பலன்களை பெற முடியும்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிசுமை அதிகரித்து காணப்படும். உங்களுக்கு கொடுக்கப்படும் பணிகள் அதிகமாக இருப்பதால் குறைத்த நேரத்தில் முடிப்பது சற்று சிரமமான விஷயமாக இருக்கும். எனவே திட்டமிட்டு உங்கள் வேலைகளை செய்யவும்.

நிதி நிலைமையை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு இருக்காது. பணத்தை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை மிதமான ஆரோக்கியமே காணப்படும். வெப்ப சம்மந்தமான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே இன்று உங்களுக்கு பலவிதமான வாய்ப்புகளும் வந்து சேரும். இது உங்களுக்கு திருப்தியை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்றைய நாள் நீங்கள் கடுமையாக போராடி அனைத்தையும் சாதிப்பீர்கள்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியில் நன்றாக பணிபுரிந்து மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெற்று விடுவீர்கள். உங்கள் திறமை வெகுவாக வெளிப்படும். இதன் மூலம் அனைவரும் உங்களை பாராட்டுவார்கள்.

நிதிநிலைமையை பொறுத்த வரை அபாரமான வளர்ச்சி உள்ளது. கடின உழைப்பின் பலனாக இன்று ஊக்கத்தொகைகள் உங்களுக்கு வந்து சேரலாம். நிதி ஆதாயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளது.

ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறந்த முறையில் இருக்கும். ஆற்றலோடு இருக்கும் உங்களுக்கு ஆரோக்கியத்தை எந்தவிதமான சிக்கலும் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே இன்று நல்ல நாளாக உங்களுக்கு அமைந்துள்ளது. சிறிய முயற்சி செய்தாலே பெரிய வெற்றிகளை நீங்கள் அடைந்து விடுவீர்கள். உங்கள் செயல்களுக்கு அதிர்ஷ்டமான வாய்ப்புகள் காத்துள்ளது. எனவே இந்த நாளை உங்களது நாளாக்கி விடுங்கள்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை நீங்கள் நன்றாக பணியாற்றுவீர்கள். ஆனால் உங்களுக்கு சக பணியாளர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே ஜாக்கிரதியாக இருங்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை எதிர்வாராத பணவரவு ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். நிதி ஆதாயம் அதிகரிக்க வாய்ப்புகள் இன்று உள்ளது.

ஆரோக்கியத்தை பொருத்தவரை சீரும் சிறப்புமாக இருப்பதால் ஆரோக்கியத்தில் எந்த விதமான குழப்பமும் ஏற்படாது. எனவே ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று சமயோகித புத்தியின் மூலம் புதிய நண்பர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். இன்று நன்மை, தீமை என்று இரண்டு பலன்களும் உங்களுக்கு கலந்தே ஏற்படும். எனவே கூடுதல் கவனம் எதிலும் தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை கையாளும்போது கவனத்தோடு இருக்க வேண்டும். திட்டமிட்டு பணிகளை செய்வது மிகவும் அவசியமான ஒன்று. அதன் மூலம் தான் உங்கள் பணிகளை சிறப்பாக செய்ய முடியும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை வரவும், செலவும் இணைந்தே இருக்கும்.மேலும் கணிசமான பணத்தை நல்ல வகையில் செலவு செய்வது உங்களது கையில் தான் உள்ளது. எனவே பணத்தை சிக்கனமான முறையில் செலவு செய்ய முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக இருக்கும். பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் இல்லை. எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று மன அழுத்தம் மற்றும் அசௌரியங்கள் உங்களுக்கு ஏற்படும்.எனவே கவனமாக திட்டமிட்டு பணியை மேற்கொள்வது அவசியமாக இருக்கும்.மேலும் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். மேல் அதிகாரிகளிடம் அங்கீகாரம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை வரவும், செலவும் கலந்து இருக்கும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். எனவே பணத்தை கவனமாக கையாளுவது அவசியமாகும்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை சராசரியான ஆரோக்கியம் உங்களுக்கு ஏற்படும். ஒவ்வாமை காரணமாக தொண்டை வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே என்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று உங்கள் சொந்த முயற்சியில் சொந்த முடிவு எடுப்பதில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்.

தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளில் சுமை இருந்தாலும் அதை எளிதாக செய்து முடித்து விடுவீர்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் உள்ளது.

நிதி நிலைமையை பொருத்தவரை என்று சீரான வளர்ச்சி இருக்காது. உங்கள் சேமிப்புகள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உருவாகும். எனவே பணம் பற்றிய கவலை உங்களுக்கு தேவையில்லை.

ஆரோக்கியமும் சீராகவே இருக்கும் தேக ஆரோக்கியம் நல்ல முறையில் இருப்பதால் அதைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version