Tuesday, September 24

இன்றைய ராசிபலன் 24 பிப்ரவரி 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 24 பிப்ரவரி   2023 வெள்ளிக்கிழமை. வாழ்க்கையில் நல்ல முறையில் செல்ல வேண்டுமென்றால் நல்ல எண்ணங்கள் மனிதர்களிடையே இருக்க வேண்டும். எனவே தான் எண்ணம் போல் வாழ்வு என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு நமது ஜனன ஜாதகம் பேர் உதவியாக உள்ளது.

 ஜாதகத்தில் இருக்கும் தசா புக்திகளின் அடிப்படையை கொண்டு நாம் நமக்கு ஏற்படக்கூடிய சுப மற்றும் அசுப பலன்களை தெரிந்து கொள்ள முடியும். மேலும் நமக்கு வருகின்ற கண்டங்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கு தக்கவாறு பரிகாரங்களை செய்வதின் மூலம் அதில் இருந்து ஓரளவு நாம் தப்பித்துக் கொள்ளலாம். எனவே ஜாதகம் என்பது அவரவருக்கு சாதகமாகவே தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் அறிவியலில் இந்த ஜோதிடக்கலையும் ஓர் அறிவியலாக தான் அன்று முன்னோர்கள் வகுத்து விட்டுச் சென்று இருக்கிறார்கள். எனவே அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

 மேஷ ராசி நேயர்களே இன்று நீங்கள் நினைக்க கூடிய வகையில் இந்த நாள் இல்லை. இந்த நாளில் நீங்கள் அதிக பலன்களை பெற முடியாது. உங்கள் தன்னம்பிக்கை சற்று குறைந்து இருப்பதால் எல்லா செயல்களிலும் நீங்கள் நம்பிக்கையோடு செயல்படுவது மிகவும் முக்கியமானதாகும்.

 பணி சுமை இன்று கூடுதலாக காணப்படுவதால் கொடுக்கின்ற வேலைகளை செய்து முடிக்க அதிக அளவு நேரத்தை எடுத்துக் கொள்வீர்கள். இதன் மூலம் உங்களுக்கு வருத்தம் ஏற்படும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை சாதகமான நாள் இல்லை என்பதால் பண தட்டுப்பாடு அதிக அளவு நிலவுவதால் உங்களுக்கு கவலை ஏற்படலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்களில் எரிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே கண் மருத்துவரை உடனடியாக அனுப்புவது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ரிஷபம்

தொட்டதெல்லாம் துலங்க வேண்டும் என்று நினைக்கின்ற ரிஷப ராசி நேயர்களே இன்று பதட்டமான சூழ்நிலை நிலம்புவதால் நீங்கள் எதையும் சாமர்த்தியமாக கையாள வேண்டும். வீண் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் நீங்கள் பேசும்போது ஜாக்கிரதையாக பேச வேண்டும். நட்புடன் பழகுவதின் மூலம் நல்ல நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை கவனக்குறைவு காரணமாக உங்கள் திறமை பளிச்சென்று தெரியாது, வேலையில் தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 நிதி நிலைமையை பொருத்தவரை பண இழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இன்று செலவுகள் அதிகமாகும். சேமிப்பு உயராது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை தலைவலிக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் நீங்கள் தியானம் மற்றும் பிரார்த்தனையை மேற்கொள்வது உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.

மிதுனம்

 மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருப்பதால் எதையும் சாதிக்க கூடிய வகையில்  சாதகமான நாளாக இந்த உள்ளது. இதன் மூலம் நீங்கள் நல்ல பயன்களை பெறுவீர்கள். உங்களை ஆதரிக்க கூடிய நண்பர்கள் கூட்டாளிகள் இன்று அதிகரிப்பார்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை உங்கள் செயல்பாட்டில் நம்பிக்கை வெளிப்படும் நல்ல நிலையில் தொழில் வளரும். இதனால் உங்களுக்கு பணி புரியும் இடத்தில் ஊக்கத்தொகைகள், சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணப்புழக்கம் அதிகமாக உள்ளதால் சேமிப்பு உயர்வதற்கான சூழ்நிலை உள்ளது. நிதி வளர்ச்சி கணிசமாக உயர்ந்து இருக்கும். ஆரோக்கியத்தில் மிகவும் நல்ல நிலை நிலவுவதால் அதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

கடகம்

 கடக ராசி நேயர்களுக்கு என்று சமூகமான நாளாக இருப்பதால் நீங்கள் குறித்த லட்சியத்தை மிக எளிதில் அடையக்கூடிய நிலை ஏற்படும். மகிழ்ச்சிகரமான நாளில் வீட்டை புணரமைக்க நீங்கள் முயற்சி செய்யலாம். புது வீடு வாங்கக்கூடிய யோகம் இன்று உங்களுக்கு உள்ளது அது பற்றிய எண்ணங்கள் உங்களுக்கு மேலோங்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிச் சூழலில் வளர்ச்சி வாய்ப்பு அதிகமாக இருக்கும். எந்த ஒரு சவாலையும் எளிதில் எதிர்கொண்டு திறமையாக முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையும் மகிழ்ச்சிகரமாக இருப்பதால் உங்கள் பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பை நீங்கள் அதிகப்படுத்த முயற்சி தருவீர்கள். சேமிக்க சிறந்த நாளாக இந்த நாள் விளங்குகிறது. ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்தவிதமான சுணக்கமும் இல்லை. நல்ல முறையில் இருப்பதால் அதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

சிம்மம்

அற்புதமான நாளாக சிம்ம ராசியின் நேயர்களுக்கு இந்த நாள் அமைய வேண்டும் என்றால் நீங்கள் இன்று மிதமான பலன்களை மட்டும் தான் பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே இன்று உங்களது மன குழப்பம் மேலோங்கி இருப்பதால் எதிலும் ஆலோசனைகளை பெற்று செயல்பட வேண்டும்.மேலும் பெரியவர்களின் ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் நீங்கள் உயர உறுதுணையாக இருக்கும்.

 பணிபுரியும் இடத்தில் பணி சுமை அதிகமாக காணப்படுவதால் திட்டமிட்டு பணிகளை செய்வதின் மூலம் திறமையாக செய்யக்கூடிய நிலை ஏற்படும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை செலவுகள் அதிக அளவு ஏற்படும் போதுமான பணத்தை சேமிப்பது கடினமாக இருக்கும் என்பதால் செலவுகளை சுருக்குவதற்கு என்ன வழி என்பதை பாருங்கள்.

 ஆரோக்கியமும் சொல்லிக் கொடும்படி இல்லை. கண்களில் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 அப்படி நேர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும்.

கன்னி

ஆற்றல்மிக்க கன்னி ராசி நேயர்களே இன்று மிதமான பலன்களை உங்களுக்கு கிடைக்கும். சாதகமான பலன்கள் பெற நீங்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுதலின் மூலம் சிறப்பு ஏற்படும். சில சமயம் பயணங்கள் மேற்கொள்ள கூடிய நிலை உருவாகலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை மேற்கொண்ட பணிகள் பாதியிலேயே அப்படியே நின்றுவிடும். கூடுதல் பணிகள் சேர்வதின் காரணமாக பணி தேக்கம் இருக்கும் என்பதை என்பதால் பணியினை முடித்துவிட்டு மற்றொரு பணியை ஏற்றுக் கொள்ளவும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். உங்கள் குடும்ப அங்கத்தினரின் ஆரோக்கியத்திற்காக செலவுகள் செய்ய வேண்டி வரும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை குறித்த நேரத்தில் உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள். செரிமான சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும்.

துலாம்

வெற்றி மீது வெற்றியை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் துலாம் ராசி நேயர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருப்பதால் வெற்றி உங்களை வந்து சேரும். எடுக்கின்ற முடிவுகள் அனைத்தும் நல்ல பலன் கிடைத்தாலும் என்பதால் நல்ல முயற்சியில் பயனுள்ள முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று மகிழ்ச்சியோடு பணியாற்றுவீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளிடமிருந்து நல்ல பெயர்கள் பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களுடைய பணிக்கான அங்கீகாரம் கட்டாயம் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை சிறப்பான நாள் என்பதால் செழிப்பான பணப்புழக்கம் உங்களிடையே இருக்கும் எதையும் அனுபவிக்க கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. மேலும் ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடும் இல்லாததால் மகிழ்ச்சி கலந்த இந்த நாளை உங்களது நாளாக மாற்றி விடுங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று பயனுள்ள முடிவுகளை எடுக்கலாம். ஆற்றலும், உற்சாகமும் அதிகரித்து இன்று உங்களுக்கு காணப்படும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதற்கான சூழ்நிலைகள் நிலவுவதால் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் வெற்றி பெற முடியும்.

 தொழிலைப் பொறுத்தவரை உங்கள் திறமையை பணியில் காட்டுவீர்கள். புத்திசாலித்தனம் மேலோங்கி இருப்பதால் உங்கள் திறமை பளிச்சென்று வெளிப்படும். இன்று பண வரவு உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

 கடின உழைப்புக்காக நீங்கள் ஊக்கத்தொகைகள் மற்றும் சலுகைகளை பெற முடியும். ஆரோக்கியத்தில் இன்று எந்தவிதமான சுணக்கமும் இல்லை. ஆரோக்கியமாக உங்களது உடல்நிலை இருப்பதால் அது பற்றி கவலைப்பட வேண்டாம்.

தனுசு

 அருமையான நாளாக இன்றைய நாள் தனுசு ராசி நேயர்களுக்கு அமைய உள்ளதால் இன்றைய நாளில் நீங்கள் மிதமான பலன்களை மட்டுமே பெற முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். சோம்பேறித்தனமும், தூக்க இன்மையும் உங்களிடம் காணப்படுவதால் உற்சாக இன்மையோடு இருப்பீர்கள். இதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும் எனவே சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

 பணியிடத்தை பொருத்தவரை சுமூகமான சூழல் இல்லை என்பதால் தவறுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு அந்த தவறுகள் செல்லாதவாறு நீங்கள் கவனத்தோடு உங்கள் பணியை செய்ய வேண்டும். இல்லை என்றால் பணி இடத்தில் அதிருப்தி நிலவும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை கூடுதல் செலவினங்கள் என்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பயணங்களை மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு பணம் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று கண்டிப்பாக நீங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். தோல் எரிச்சல் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் எண்ணெய் பதார்த்தங்களை உண்பதை நீங்கள் தவிர்த்து விடுங்கள்.

மகரம்

மகர ராசி  அன்பர்களுக்கு இன்றைய தினம் குறைந்த அளவே சாதகமான சூழ்நிலைகள் உள்ளது. உணர்ச்சி பூர்வமாக நீங்கள் எந்த காரியத்தையும் செய்யக்கூடாது. தன்னம்பிக்கையை இழக்காமல் நீங்கள் எதையும் எதிர்கொள்ளுங்கள். நகைச்சுவை உணர்வு இருந்தால் நீங்கள் இன்று நல்ல பலன்களை தர முடியும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை கொடுத்த பணியை சிறப்பாக முடிப்பதற்கான சூழ்நிலை இல்லை. இது உங்களுக்கு கவலையை தருவதோடு மட்டுமல்லாமல் சக தொழிலாளிகளிடம் இருந்து பிரச்சனைகளையும் ஏற்படுத்தித் தரக்கூடிய நாளாக இந்த நாள் உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை தேவையில்லாத செலவுகள் ஏற்பட்டு கையில் இருக்கும் கையிருப்பு அப்படியே குறைந்து போகும். சேமிக்க வாய்ப்பே இல்லை. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று தொண்டை பகுதியில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தலைவலி வருவதற்கான சூழ்நிலை உள்ளதால் நீங்கள் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும்.

கும்பம்

 கும்ப ராசி நேயர்களே இன்று உங்கள் விருப்பம் பூர்த்தி ஆவதற்கு உரிய உகந்த நாள் என்பதால் நல்ல தருணங்கள் ஏற்படும். புதிய தொடர்புகள் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்பதின் மூலம் உங்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சேரு.ம் இந்த தினத்தை உங்களுக்கு உரிய தினமாக நீங்கள் மாற்றி பயன் பெறுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகள் ஒழுங்கான முறையில் நல்ல வகையில் நடக்கும் பணியில் மூத்தவர்களின் பாராட்டுகளை நீங்கள் பெறுவீர்கள்.

 நிதி நிலைமையை பொருத்தவரை அபாரமான நாள் என்பதால் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். ஆரோக்கியமும் இன்று மிக நல்ல முறையில் இருப்பதால் மன உறுதியோடு நீங்கள் செயல்படலாம். ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள். பிறரிடம் பேசும் போது பின்விளவை சிந்தித்து பேச வேண்டும். வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. பாதுகாப்பு இன்மை உணர்வு உங்களிடம் மேலோங்கும்.

 பிரார்த்தனைகள் மூலம் நீங்கள் ஆறுதல் அடையலாம். தொழிலைப் பொறுத்தவரை வேலை பொறுப்பு அதிகமாக இருக்கும். கொடுத்த பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்வீர்கள். சாதகமான பலன்களை பெறுவதற்காக நீங்கள் தொழிலில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை இன்று குடும்ப பொறுப்புக்கள் அதிகரிப்பதன் காரணமாக செலவு செய்ய நேரிடலாம். சில தேவைகளை பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன் கூட வாங்க வேண்டி இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். கண் வலி, முதுகு வலி வந்து செல்லலாம்.