இன்றைய ராசிபலன் 28 பிப்ரவரி 2023 செவ்வாய்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 28 பிப்ரவரி   2023 செவ்வாய்கிழமை. நாளை என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள மனிதர்கள் அனைவருமே விருப்பத்தோடு இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் இது நாளைக்கு நமக்கு நன்மை தரும் என்று செய்தி உங்கள் மனதில் எண்ணற்ற சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 அது மட்டுமல்லாமல் நாளைக்கு நமக்கு நடக்கின்ற நன்மை தீமைகளை மனதில் கணக்கு போட்டு நீங்கள் உங்கள் காரியங்களை திட்டமிட்டு உற்சாகத்தோடு செய்யலாம். அந்த வகையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

 மகிழ்ச்சிகரமான நாளாக இருக்க வேண்டும் என நினைக்கும் மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு பொறுப்புக்கள் அதிகரித்து காணப்படும். திட்டமிட்ட அணுகுமுறை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். விஷயங்களை நீங்கள் எப்போதும் எளிதாக எடுத்துக் கொள்வதின் மூலம் உங்களுக்கு எந்த வித சிரமங்களும் ஏற்படாது .மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டால் உங்கள் மனதுக்கு இனிய படி நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு பயணம் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உள்ளது. பணிகளை ஒழுங்கான முறைகள் நீங்கள் திட்டமிடுவதின் மூலம் சிறப்பாக செய்ய முடியும் அனைவரது உதவியும் உங்களுக்கு கிடைக்கும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை பணப்புழக்கம் குறைவாக காணப்படும். பணம் சேமிப்பது கடினமாக இருக்கும் எனவே நெறியில் அக்கறை காட்ட வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று யோகா, தியானத்தை மேற்கொள்வது உங்களுக்கு நல்ல நிலைமையை ஏற்படுத்திக் கொடுக்கும். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பராமரிக்கலாம். எப்போதும் நீங்கள் மன அமைதியோடு இருப்பதை கடைப்பிடித்தால்  கட்டாயம் ஆரோக்கியத்தில் நன்மை கிடைக்கும்.

ரிஷபம்

 ரிஷப ராசி நேயர்களில் உங்களின் நெகிழ்வான அணுகுமுறை காரணமாக எல்லாவற்றையும் சாதகமாக மாற்றி நல்ல பலன்களை இன்று பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சரியான தொடர்பால் பயனுள்ள விஷயங்கள் நடப்பதோடு ஆச்சரியங்களை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுகளையும் உண்டாக்கக்கூடிய நாளாக இந்த நாள் உங்களுக்கு உள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனை தடுக்க வேண்டும் என்றால் நீங்கள் தொழிலில் கவனத்தோடு உங்கள் புத்தியை செலுத்துவதின் மூலம் மட்டுமே நடக்கும்.

 நிதி நிலைமை பொறுத்த வரை அஜாக்கிரதை காரணமாக பண இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அப்படி பணம் இழப்பு ஏற்பட்டால் அதை நீங்கள் சமாளிப்பது மிகவும் கடினம் என்பதை உணர்ந்து கண்ணும் கருத்துமாக செயல்படவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இருமல், சளி பிரச்சனை தொடர்ந்து இருப்பதால் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

மிதுனம்

 மிதுன ராசி அன்பர்களே இன்று தொழில் மற்றும் அது சார்ந்த அணுகு முறையில் எதார்த்தமாக இருப்பது மிகவும் நல்லது. இன்றைய நாள் அவ்வளவு சிறப்பான நாளாக இல்லை என்பதால் முக்கிய முடிவுகளை எடுப்பதை நீங்கள் தள்ளிப்போடுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை தன்னம்பிக்கையோடு பணியாற்றுவது அவசியம். அவ்வாறு பணி செய்யும்போது மேலதிகாரிகளின் பாராட்டை நீங்கள் எளிதில் பெற முடியும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை அலட்சியமாக இருப்பதால் பல இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை கையாளும்போது அதிக கவனத்தோடு கையாளுங்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை பற்களில் சிறிய அளவு வலிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உடனடியாக பல் மருத்துவரின் சந்திக்கவும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது அவசியமாகும்.

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு இன்று அட்டகாசமான நாள் என்பதால் அமைதியான சவுரியத்தை உணர்வீர்கள் திருப்தியான எண்ணங்கள் மேலோங்கும். பெரிதாக சாதித்து விட்ட உணர்வு உங்களிடம் இருப்பதால் எல்லாம் நன்மைகள் முடியும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை சக பணியாளர்கள் அனைவருமே உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது. இது நிமித்தமாக நீங்கள் பயணங்களையும் மேற்கொள்ளலாம்.

 நிதி நிலைமை பொறுத்த வரை என்று உங்கள் பணத்தை சேமிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இது உங்களுக்கு முழு திருப்தியை அளிக்கும் என்பதால் நிதி நிலையில் சுணக்கம் இல்லை. ஆரோக்கியமும் நேர்மறையாக இருப்பதால் நீங்கள் கட்டாயம் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மகிழ்ச்சியாக இருந்த நாளை செலவிடுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே இன்று சாதகமான நாளாக உங்களுக்கு இருப்பதால் புதிய தொடர்புகளை அமைத்துக் கொள்வதின் மூலம் அதிக அளவு பலன்களை பெறுவீர்கள். உங்கள் எண்ணங்களை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் வந்து சேரக்கூடிய நாளாக இருப்பதால் நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடச் சூழல் உங்களுக்கு உகந்ததாக இல்லை. பணி சுமை அதிகமாக இருக்கும் .இதன் மூலம் அசவுரியங்கள் உங்களுக்கு ஏற்படும். உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக் கூடிய நிலை என்று தொழிற் ஸ்தானத்தில் உள்ளது.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று உங்களுக்கு சாதகமாக இருப்பதால் கடின உழைப்புக்கான பலனை பெறுவீர்கள். பணப்புழக்கம் ஓரளவு சராங்கமாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் நீங்கள் திடமான மனதுடன் எதையும் செயல்படுத்தலாம். ஆரோக்கியத்தை பற்றி அதிக கவலை தேவையில்லை

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இன்று மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் ஆற்றலோடும் நீங்கள் இருப்பீர்கள். எதிர்பாராமல் எதையும் செய்து முடிக்க கூடிய ஆற்றல் உங்களுக்குள் ஏற்படும். வெற்றியை நீங்கள் எப்படிப்பட்டாவது பெற்று விடுவீர்கள்.

தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணி சுமைக்கு ஆளாகியிருக்கும் நீங்கள் கவலையோடு காட்சி அளிப்பீர்கள். பணிகளை திட்டமிட்டபடி செய்தால் உங்களுக்கு எளிதில் பணி நிறைவேறும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை வீட்டை மேம்படுத்துவதற்காக செலவுகளை செய்வீர்கள். இதனால் செலவுகள் உங்களுக்கு அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களுக்கும் நீங்கள் உதவிட நேரிடலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது

துலாம்

துலாம் ராசி நேயர்களே என்று சாதகமான நாளாக இருப்பதால் நீங்கள் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தால் கட்டாயம் அது நடக்காது. ஏனென்றால் இன்று மகிழ்ச்சிகரமான நாடாக அமையவில்லை என்பதுதான் உண்மை.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளில் அதிக பொறுப்புகளை ஏற்க நேரிடும் பணியில் கவனம் தேவை. உங்களது நலனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நீங்கள் திட்டமிட்டு செயல்படுவது கட்டாயமாகும்.

 நிதி நிலைமையை பொறுத்த வரை ஆரோக்கியமாக இல்லை என்பதால் அதிக செலவுகள் ஏற்படும். பண பற்றாக்குறை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை தாயாரின் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது அவசியம். அவருக்காக செலவுகள் செய்ய நினைவிடம் என் மூலம் உங்களுக்கு கவலையே மிஞ்சும்.

விருச்சிகம்

 விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று துடிப்பான நாள் என்பதால் எதிலும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். சுய வளர்ச்சிக்கான வழிகளை தேர்வு செய்து அதில் வெற்றிகளை குவிக்க கூடிய சூழ்நிலைகளை இந்த நாள் உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை குறித்த காலத்துக்குள் உங்கள் பணிகளை படு சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களது முயற்சிகளுக்கும், பாராட்டுக்கள் மேல் பாராட்டுக்கள் வந்து சேரும்.

நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று சிறப்பாக இருப்பதால் பயனுள்ள வகையில் உங்கள் பணத்தை சேமிக்க திட்டமிடுவீர்கள். அதுபோல உங்கள் செலவுகளையும் திட்டமிட்டே செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை மனநிலையில் தைரியமாக இருப்பதால் இன்று சிரமமான ஆரோக்கியம் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு

 தனுசு ராசி நேயர்களே இன்று எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படக்கூடிய நாள் முக்கியமான விஷயங்களை தவிர நீங்கள் மற்ற விஷயங்களையும் பக்குவமாக அணுகுவது மிகவும் நல்லது. பயனுள்ள முடிவுகளை இன்று எடுப்பதன் மூலம் உங்களுக்கு பலன்கள் அதிகமாக கிடைக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணி சூழல் சவாலாக இருப்பதால் பணிகளில் தவறு நேர வாய்ப்புகள் உள்ளது. இதனை தவிர்க்க நீங்கள் கவனத்தோடு பணியாற்ற வேண்டும்.

 நிதி வளர்ச்சியை பொறுத்தவரை இன்று சிறப்பான நாள் என்பதால் கடின முயற்சியின் மூலம் நீங்கள் பண பயனை அதிகரித்துக் கொள்ள முடியும். எனினும் பணம் சம்பந்தமான விஷயங்களில் தாமதமாக தான் எதுவுமே நடக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்த வரை இன்று சிறப்போடு இருக்கும் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் கட்டாயம் தியான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

மகரம்

 வெற்றி மேல் வெற்றியை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மகர ராசி நேயர்களுக்கு இன்று நல்ல பலன்கள் உள்ளதால் தொழில் சார்ந்த நிலைகளில் எதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்வது மிகவும் நல்லது. எதிர்மறை ஆற்றல்கள் உங்களுள் ஏற்படுமானால் அதை தவிர்ப்பது மிகவும் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிச்சுமை அதிகமாக இருப்பதால் பணிகளை மேற்கொள்ளும் போது தடைகளை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே கவனமாக பணியினை செய்ய வேண்டும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று வளர்ச்சி அவ்வளவு இல்லை என்று தான் கூற வேண்டும். உங்கள் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு நீங்கள் பல செலவுகளை செய்யும்போது கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டை பகுதிகளில் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை உண்பதை நீங்கள் தவிர்த்து விடுவது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

கும்பம்

 மிதமான பலன்களை கிடைக்கும் என்பதால் எந்த ஒரு நிகழ்வுகளையும் நீங்கள் சாதகமாக மாற்றிக்கொள்ள அமைதியை கையாளுவதை தவிர வேறு வழி இல்லை என்று கூறலாம்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை குறித்த நேரத்தில் பணிகளை முடித்துக் குறிப்பதற்கான அதிர்ஷ்டம் இன்று உங்களுக்கு மேலோங்கி இருப்பதால் பணி நிமித்தமாக பயணங்களையும் நீங்கள் மேற்கொள்ளலாம். இது உங்களுக்கு நன்மையை தான் கொடுக்கும் என்பதை புரிந்து கவனத்தோடு இருங்கள்.

நிதி நிலைமையை பொறுத்தவரை பணவரத்துக்கான வாய்ப்புகள் குறைவு. கணிசமான தொகையை காண வேண்டும் என்று நினைத்தால் அது ஈடேறாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவிட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். தாயாரின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம் அவர்களுக்காக பண செலவு செய்ய வேண்டி இருக்கும்.

மீனம்

 மற்றவர்கள் மேல் அக்கறையோடு செயல்படும் மீன ராசி நேயர்களே இன்று இனிமையான தொடர்பான உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகளை இன்று கண்டறிந்து அதில் நீங்கள் ஈடுபடுவீர்கள்.

தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணித்தேடல் சுமூகமாக இருப்பதால் நல்ல பெயர் கிடைக்கும் நீங்கள் பணியாற்றும் விதமும் உங்கள் தொடர்பாலும் மகிழ்ச்சிகள் ஏற்படும். இது உங்கள் மேல் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தரும்.

 இன்று பணப்புழக்கம் அதிக அளவு காணப்படும் விரைவு கடன் மூலம் உங்கள் பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். எனினும் செலவுகளை மட்டுப்படுத்துவது நல்லது. ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பான நாளாக இருப்பதால் நேர்மறை எண்ணங்களும் அதிக ஆற்றலும் உங்கள் ஆரோக்கியத்தை மேலும் வலுப்படுத்தும். எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

29 வயதாகும் நடிகை சம்யுக்தா மேனன் கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். வணிகவியல் துறையில் …