இன்றைய ராசிபலன் 29 மார்ச் 2023 புதன்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 29 மார்ச் 2023 புதன்கிழமை. தன்னம்பிக்கை விடாமுயற்சி இறை நம்பிக்கை இருக்கும் போது உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் உங்களுக்கும் மேலோங்க வேண்டும் எது எப்படி நிகழ்ந்தாலும் கடைசியில் நன்மை நடக்கும் என்ற தின்னமான நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம்.

உங்கள் எதிர்காலத்தை நீங்கள் முன்கூட்டியே ஜாதகத்தின் உதவியோடு கணித்து அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு நீங்கள் உங்களுக்கு ஏற்படக்கூடிய அசுப பலன்களுக்கு உரிய பரிகாரங்களை செய்து விட்டு நம்பிக்கையோடு நீங்கள் உங்கள் பணிகளை செயல்படுத்தும் போது கட்டாயம் வெற்றி கிட்டும். அதன் அடிப்படையில் இன்று நீங்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 28 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள். உங்கள் நடவடிக்கைகளில் கவனம் தேவை. இன்று உணர்ச்சிவசப்படுதலை நீங்கள் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை சகப் பணியாளர்டன் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிக அளவு உள்ளதால் பொறுமையுடனும் நிதானத்துடனும் நீங்கள் எதிலும் ஈடுபட வேண்டும். அப்போதுதான் பணிகளை நீங்கள் விரைவாக முடிக்க முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்த வரை பண பற்றாக்குறை அதிகரித்து காணப்படும். இன்று செலவுகளை சமாளிக்க கடன் வாங்கலாம். எனவே சிக்கனமாக செலவுகளை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை கை, கால்களில் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே உடற்பயிற்சியை நீங்கள் தினமும் மேற்கொள்வதின் மூலம் வலிகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று நன்மை தீமை என்று இரண்டு பலன்களும் கலந்து உங்களுக்கு ஏற்படும். பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். பயணங்களில் உங்களுக்கு நன்மை ஏற்படும். எனவே பயணம் போகக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடத்தில் சிறப்பான பலன்கள் உள்ளது .உங்களின் சிறிய முயற்சிகள் கூட தொழிலை பொறுத்தவரை பெரிய அளவு வெற்றியை பெற்றுத்தரும்.

 நிதி நிலைமையை பொருத்தவரை கனிசனமான பணத்தொகை உங்களிடம் காணப்படும். இதை கொண்டு குடும்பத்தோடு பயணம் செல்வீர்கள். அதற்காக நீங்களே பணத்தை செலவு செய்வீர்கள்.

ஆரோக்கியத்தை பொருத்தவரை என்று எந்தவிதமான சுணக்கமும் இல்லை ஆரோக்கிய குறைபாடு இல்லாத காரணத்தால் நீங்கள் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசியின் நேயர்களே இன்று உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்களை ஏற்படும். இந்த நாளை நீங்கள் திட்டமிட்டு செயல்படுத்தினால் உங்களுக்கு நன்மைகள் வந்து சேரும். சிறந்த முறையில் நீங்கள் முயற்சி செய்தால் வெற்றிகளும் கிட்டும்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை பணிகளை குறித்த நேரத்தில் முடித்து விட திறம்பட செயலாற்றுவீர்கள். அதே சமயத்தில் வேலையை துவங்கும் போது சில தடங்கல்கள் ஏற்படலாம். அதை நீங்கள் ஒரு பொருட்டாக நினைக்காமல் உங்கள் பணியை கண்ணும் கருத்துமாக செய்தால் போதுமானது.

நிதி நிலைமையை பொறுத்தவரை உங்கள் தேவைகளுக்கு கடன் வாங்கக் கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அதுவும் உங்கள் விருப்பம் போல நடக்கும். எனினும் பணத்தை சிக்கனமான முறையில் செலவு செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி யோசிக்கவும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் செரிமான சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் மிதமான உணவுகளை நீங்கள் உட்கொள்ளுங்கள்.

கடகம்

கடக ராசி அன்பர்களே என்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பொறுப்புக்கள் அதிகரித்திருந்தாலும் உங்கள் பணிகளை நீங்கள் தரமாக முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் திட்டமிடுதல் மூலம் வெற்றிகளை அதிக அளவு நீங்கள் பெற முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். இதன் மூலம் உங்களுக்கு நன்மைகளை கிடைக்கும். எனவே உங்கள் பணிகளை மும்மரமாக முடிப்பது நீங்கள் முனைப்போடு இருப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை குடும்பத்திற்காக பண செலவு செய்வீர்கள். பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. எனவே எந்த வகையில் பணத்தை சேர்க்கலாம் என்பதில் உங்களது எண்ணம் இருக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் அதற்காக நீங்கள் செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். எனவே பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் உங்கள் ஆரோக்கியத்திலும் கவனத்தோடு இருக்கவும்.

சிம்மம்

சிம்மராசி அன்பர்களே இன்றைய நாள் மந்தமாக இருக்கும். குழப்பங்களும் கவலைகளும் உங்களை சூழ்ந்திருக்கும். சிறந்த பலன்கள் கிடைப்பதற்கான நாள் இந்த நாள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு உங்களது மனதை ஆன்மீகத்தில் செலுத்தி ஆறுதலை பெற்றுக் கொள்ளுங்கள்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணியில் மும்மரமாக இருப்பீர்கள். பணி நிமித்தமாக அதிக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். வேலைகளை திட்டமிட்டு முடிப்பதின் மூலமே உங்கள் பணிகளை விரைவாக செய்ய முடியும்.

 நிதி நிலைமை பொறுத்த வரை நீங்கள் எதிர்பார்த்தது போல் இன்றே எதிர்மறையான பலன்களை ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே இது உங்களுக்கு கவலையைத் தரும். பணத்தைப் பற்றி கூடுதல் அக்கறையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களிடையே பதட்டம் அதிகமாக இருக்கும். இதன் மூலம் கை, கால்களில் வலி வந்து சேரும். எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று சாதகமான நாள் உங்களுக்கு அமைந்துள்ளது. எந்த நாளில் சிறிய முயற்சியை எடுத்தாலும் பெரிய அளவு உங்களுக்கு வெற்றிகள் வந்து சேரும். உங்கள் எண்ணங்கள் ஈடேற கூடிய நாள். அதுமட்டுமல்லாமல் உங்கள் விருப்பங்களை இன்று நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை திருப்திகரமான நிலை உள்ளதால் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். விரைவாக எல்லா பணிகளையும் முடித்து அனைவரது பாராட்டுதல்களையும் அடைவீர்கள்.

 நிதி நிலைமை பொறுத்த வரை இன்று கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். மிகுதியாக பணம் இருப்பதால் எதில் முதலீடு செய்யலாம் என்பது போன்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படும். அது மட்டுமல்லாமல் வங்கிகளில் இருக்கக்கூடிய உங்கள் சேமிப்பு உயரும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உடல் முழு ஆரோக்கியத்தோடு இருப்பதால் எந்த விதமான பிரச்சனையும் இல்லை எனவே ஆரோக்கியத்தை பற்றி அச்சப்பட வேண்டாம்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று உங்களுக்கு நல்ல அணுகூலமான நாளாக உள்ளது எல்லா செயல்களையும் விரைந்து செய்து முடிப்பீர்கள். பணிகளில் போட்டியும் சவால்களும் இருந்தாலும் அதை சமாளித்து உங்கள் திறமையை நிரூபிக்க கூடிய ஆற்றல் இன்று உங்களுடைய அதிகரித்து இருக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று சீராக பணிகளை செய்து முடிக்க கூடிய நீங்கள் விரைவாகவும் உங்கள் பணிகளை முடிப்பீர்கள். இதன் மூலம் மேல் அதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு அதிக அளவு கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சீரான நிதி வளர்ச்சி இருக்கும். சேமிக்கும் பழக்கத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்வீர்கள். இதனால் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தோடு வெளியே செல்வதற்காக பணத்தை செலவு செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று அற்புதமான நாள் என்று கூறலாம். முழு ஆரோக்கியத்தோடு நீங்கள் இருப்பதால் ஆரோக்கியத்தை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே என்று நீங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதிய முயற்சிகளை செய்வீர்கள். அதில் எதிர்பார்த்த வெற்றியை நீங்கள் பெறக்கூடிய மனநிலை உங்களுக்கு ஏற்படும்.

 பணி நிமித்தமாக பயணங்கள் செல்லலாம். தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை கவனம் வேண்டும் விடாப்பிடியான எண்ணத்தைக் கொண்டு இருந்தால் மட்டுமே நீங்கள் வெற்றி வாய்ப்பை பெற முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நிதி நிலைமை பொறுத்த வரை இன்று அதிர்ஷ்டமான நாள் என்று கூறலாம். நிதி வளர்ச்சி சிறப்பாக இருப்பதோடு கையில் பணப்புழக்கமும் அதிகரிக்கும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சுமாரான நாள் எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவில் கவனத்தை செலுத்துங்கள். தினமும் குறைந்தபட்ச உடற்பயிற்சியை யாவது மேற்கொள்ளுங்கள்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே இன்று மந்தமான நாளாக இருப்பதால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவது சற்று கடினமாக இருக்கும். எனவே முக்கியமான முடிவுகளை நீங்கள் இன்று எடுக்க வேண்டாம். அந்த முடிவுகளை தள்ளிப் போடுவது மிகவும் சிறந்தது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்த வரை உங்கள் பணியின் தரம் பாராட்டத்தக்க கூடிய வகை இருக்காது. பணியிடத்தில் மேலதிகாரிகளின் அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள். எனவே பணியில் கவனத்தை செலுத்துவது அவசியம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பான வளர்ச்சி இல்லை என்று கூறலாம். வரவும் செலவும் சேர்ந்தே இருக்கும். எனவே பணத்தை திட்டமிட்டு செயல்படுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாக இல்லை. தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். எண்ணெயில் பொரித்த வறுத்த உணவுகளை உட்கொள்ள வேண்டாம். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே என்று உங்கள் விருப்பங்கள் நிறைவேற கூடிய நாளாக இருப்பதால் உங்களுக்கு தொட்டதில் எல்லாம் வெற்றி கிட்டும். முக்கிய முடிவுகளை இன்று எடுப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகள் பல வந்து சேரும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை திறம்பட செயல்படுத்துவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் வந்து நிக்கும். இதன் மூலம் உங்களுக்கு உற்சாகமான மனநிலை ஏற்பட்டு திருப்தியும் கிடைக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை நீங்கள் இன்று அதிக அளவு லாபம் பார்க்கக்கூடிய நாள் என்று கூறலாம். பண புழக்கம் அதிகரிக்கும். பணத்தை முதலீடு செய்வதில் மனம் செல்லும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று மிக நல்ல ஆரோக்கியத்தோடு நீங்கள் இருப்பீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். எனவே ஆரோக்கியத்தை பற்றி கவலை வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்கள் ஆற்றல் வலிமையை நீங்கள் உணரக்கூடிய நாள் என்று கூறலாம். உங்களுடைய இருக்கக்கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன்மூலம் பல நன்மைகள் ஏற்படும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை இன்று எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் பணி திறனை பார்த்து மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண வரவு இன்று அதிக அளவு காணப்படுகிறது. நீங்கள் எதிர்பாராத இடத்திலிருந்து உங்களுக்கு பணம் வந்து சேரும். எனவே நீங்கள் பணத்தை எப்படி சேமிக்கலாம் என்பதில் மனதை செலுத்துவீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை சிறப்பான நாள் என்று கூறலாம். உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. தியானம், யோகா மேற்கொள்வதின் மூலம் மேலும் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பேணி பாதுகாக்க முடியும்.

மீனம்

மீன ராசி நேயர்களே இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவதின் மூலம் உங்களது மனம் மகிழ்ச்சி அடையும். மன ஆறுதல் ஏற்படும். எனவே என்று உங்களது மனதை ஆன்மீகத்தின் பக்கம் திசை திருப்புவதால் உங்களுக்கு எண்ணற்ற நன்மை கிடைக்கும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பணியில் மும்மரமாக செயல்படுவீர்க.ள் நல்ல வளர்ச்சி உங்கள் தொழிலில் ஏற்படும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை ஏழைகளுக்கு தொண்டு செய்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு உங்கள் பணத்தை செலவு செய்ய முற்படுவீர்கள். இதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன் வந்து சேரும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று மிகவும் சிறப்பான நாள் என்று  கூறலாம்.எனவே உங்களுக்கு ஆரோக்கியத்தை பற்றி கவலை தேவையில்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …