Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

‘உன்னாலே உன்னாலே’ நாயகன் வினய் ‘குடும்ப குத்துவிளக்கு’ நடிகை..! – வைரலாகும் போட்டோஸ்..!

நடிகர் வினய்,(Actor Vinay) கடந்த 2007ம் ஆண்டில் உன்னாலே, உன்னாலே படத்தின் மூலம், தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, பல தமிழ் படங்களில் அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக, மிஷ்கின் இயக்கத்தில், ‘துப்பறிவாளன்’ படத்தில் அவரது வில்லன் கேரக்டர் மிரட்டலாக இருந்தது.

விஷால் – வினய் மோதிக்கொள்ளும் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள், ரசிகர்களை சிலிர்ப்படைய செய்தது. நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்திலும், வினய்தான் வில்லன். இந்த இரண்டு படங்களுமே செம ஹிட் படங்களாக, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. எதற்கும் துணிந்தவன், கனெக்ட் போன்ற சமீபத்திய படங்களிலும், வினய் நடித்திருக்கிறார்.

வினய்
Actor Vinay

இவர் துவக்கத்தில் நடித்த படங்களில், ஹீரோவாக தான் நடித்தார். பின், நாளடைவில் வில்லன் நடிப்புக்கு மாறிவிட்டார். ஜெயங்கொண்டான், ஒன்பதுல குரு, மிரட்டல், என்றென்றும் புன்னகை படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இப்போது, டீசல் மற்றும் ஹனுமான் என்ற படங்களில் நடித்து வருகிறார்.நடிகர் வினய், சோஷியல் மீடியாவில் மிக ஆர்வமாக, ஆக்டிவ்வாக இருக்கும் ஒரு நடிகர். எப்போதும் தனது செயல்பாடுகளை, நிகழ்வுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்து, அந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

அந்த வகையில், தற்போது கோடை விடுமுறையை கொண்டாட ஹங்கேரி நாட்டுக்கு சென்றிருக்கும் வினய், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை, இன்ஸ்டாவில் அப்பேட் செய்திருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த சினிமா ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்து வருகின்றனர்.

வினய்
Actor Vinay

ஏனெனில், ஹங்கேரி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் நடிகர் வினய் உடன் கட்டிப்பிடித்தபடி போஸ் தருவது, நடிகை விமலா ரமணன். ‘டேம் 999’ என்ற படத்தில் வினய் – விமலா ரமணன் சேர்ந்து நடித்த போது, இருவருக்கும் ஆழமான நட்பு ஏற்பட்டதாகவும், கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள் டேட்டிங்கில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருவருமே திருமணம் செய்துகொள்ளாத முரட்டு சிங்கிள் என்பதால், லிவிங் டூ ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. வினய் கையில் ஐஸ்கிரீம் வைத்து சாப்பிட்டபடி இருக்கிறார். அருகில், ஐஸ்சை விட குளுமையான விமலா ரமணன் இருக்கிறார் என, பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வினய்
Actor Vinay

விமலா ரமணன், குடும்ப குத்துவிளக்கு போன்ற அம்சமான அழகி, இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ராமன் தேடிய சீதை, பொய், இருட்டு ஆகிய சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். எனினும் மிக அழகான நடிகையாக ரசிக்கப்பட்ட இவர், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்த போது, கவர்ச்சியில் எல்லை கடந்து, முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகளிலும் நடித்து, ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

வினய்
Actor Vinay

இப்போது, வினய் உடன் ஹங்கேரி நாட்டில் ஜோடியாக இருக்கும் படங்களை பரர்க்கும்போது, குடும்ப குத்துவிளக்காக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகும் நல்ல நடிகைகள், காலத்தின் ஓட்டத்தில் வேறுமாதிரியான திசைகளில் பயணிக்க துவங்கி விடுகின்றனர் என, ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …