கவுண்டமணி ( Goundamani ) தமிழ் சினிமாவில் காமெடி கிங் ஆக வலம் வந்தவர். கவுண்டமணி- செந்தில் இருந்தாலே, படம் ஓடிவிடும் என்று படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் நம்பிக்கை வைக்கும் அளவுக்கு, இந்த காமெடி ஜோடி, தமிழ் சினிமாவில் கோலோச்சிய காலகட்டம் இருந்தது.கவுண்டமணி, துவக்கத்தில் மேடை நாடகங்களில் நடித்தவர்.
பின்னர், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ் செய்த பேருதவியால், 16 வயதினிலே படத்தில் நடிக்கும் வாய்ப்பு, கவுண்டமணிக்கு கிடைத்தது. பரட்டை கேரக்டரில் நடித்த ரஜினியுடன் இருக்கும் கவுண்டமணி, ‘பத்த வெச்சுட்டியே பரட்டை’ என்ற டயலாக், அவருக்கு நல்ல அறிமுகத்தை தந்தது.
அடுத்து, சுவரில்லாத சித்திரங்கள் படத்தி்ல், காளியண்ணன் என்ற பெட்டிக்கடை டெய்லர் கேரக்டர் தந்து, இன்னும் அவரை பிரபலப்படுத்தினார் அந்த படத்தின் இயக்குநராக பாக்யராஜ்.
தொடர்ந்து உதயகீதம் படத்தில், மரத்துக்கு மரம் உண்டியல் வைத்து, பக்தர்களிடம் பணம் வசூலிக்கும் கேரக்டரும், கவுண்டமணிக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதிலும், ‘தேங்காயில் பாம்’ என்ற புரளியை கிளப்பி, ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர் கவுண்டமணி.
Goundamaniஇதயக்கோவில் படத்தில், கேபி சுந்தராம்பாள் பாட்டை கேட்டுக்கொண்டே, வாடிக்கையாளருக்கு மொட்டை அடித்து விடும் கவுண்டமணி, ஹெல்மெட் கட்டாயம் என்பதால், போலீசாரை ஏமாற்ற மண் சட்டியில் பெயிண்ட் அடித்து, தலையில் கவிழ்த்து சென்ற காமெடி எல்லாம் அந்த காலத்தில் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது, மீண்டும் டெண்ட் கொட்டகைகளை, தியேட்டர்களை தேடி, ஓடி வரவழைத்தது.
கடந்த 1980 -90-களில் இளையராஜாவின் இசைக்காலம் போல, அந்த காலகட்டம் கவுண்டமணியின் காமெடி காலமாக மாறி இருந்தது. ஜப்பானில் கல்யாணராமன் படத்தில், கவுண்டமணி – கோவை சரளா ஜோடி ஜப்பானில், பாஷை தெரியாமல் தவிப்பதும் முனுசாமி கேரக்டரில் சித்ரா லட்சுமணன் அவர்களை கலாய்ப்பதும் இப்போதும் டிவியில் ரசிக்கும் காமெடி காட்சிகளில் முக்கியமானதாக இருக்கிறது.
Goundamaniகவுண்டமணி – செந்தில் ஜோடி சேர்ந்த பிறகு, அது இன்னும் அதிக வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. குறிப்பாக, இந்த ஜோடிக்கு அதிகமான பெயரை, புகழை பெற்றுத்தந்தது கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படம்தான். அதற்கு பிறகு, பல படங்களில் கவுண்டமணி – செந்தில் ஜோடியாக நடித்து, அந்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றியடைந்தது.
ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜூன், சரத்குமார், கார்த்திக் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த கவுண்டமணி, ஹீரோக்களான அவர்களையே சில காட்சிகளில் கலாய்த்து விடுவார். பாபா படத்தில், ரஜினியும் இவரது நக்கலான பேச்சுக்கு தப்பவில்லை. சத்யராஜ் – கவுண்டமணி காம்பினேஷன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘ஜாக்பாட்’ பரிசாக அமைந்திருக்கிறது. விஜய், சிம்பு படங்கள் வரை கவுண்டமணி நடித்துக்கொண்டே இருக்கிறார்.
Goundamaniஆனால், வயது மூப்பின் காரணமாக இப்போது அதிக படங்களில் கவுண்டமணி நடிப்பதில்லை. இந்நிலையில், கவுண்டமணி குறித்த ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை, இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் கூறியிருப்பது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நான் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தில் நடித்த பிறகுதான், கவுண்டமணிக்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் வந்தது. அந்த அளவுக்கு அந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரை அதில் நடிக்க வைத்திருந்தேன்.
அதற்கு பிறகு, விஜய்காந்த் நடிப்பில் கோவில்காளை என்ற படத்தை நான் இயக்கினேன். அந்த படத்தின் தயாரிப்பாளர் மிகவும் சிரமத்தில் இருந்தார். இதனால், எங்கே தனக்கான சம்பளம் வராமல் போய்விடுமோ என பயந்த கவுண்டமணி, அந்த படத்தில் அவர் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேச வர மறுத்து விட்டார்.
Goundamaniதனக்கு பேசிய சம்பளத்தை முழுதாக தந்தால் மட்டுமே, டப்பிங் பேச வருவேன் என கறாராக கூறி விட்டார். அதன்பிறகு, படத்தின் தயாரிப்பாளர் கடன்பட்டு, எப்படியே பணத்தை தயார் செய்து கொடுத்த பின்பே டப்பிங் பேச வந்தார்.
படத்தின் இயக்குநரான நான் கூறியும், அதை கவுண்டமணி ஏற்றுக்கொள்ளவில்லை. என்னையும் அவமதித்து விட்டார். இப்படி நன்றி இல்லாமல் நடந்துகொண்டவர்தான் கவுண்டமணி என ஆதங்கமாக கூறி இருக்கிறார். இது இப்போது, வைரலாகி வருகிறது.
அதே வேளையில், மனோபாலா குறித்து, தனது அண்ணன் இளையராஜா பேசியது வைரலானதால், அதை மறைக்க தான், கவுண்டமணி குறித்த இந்த விஷயத்தை, இப்போது கங்கை அமரன் கொளுத்தி போட்டிருக்கிறாரோ, என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.