ஜிம் சூட்டில் ஹெவி வொர்க்-அவுட்..! – இறுதிசுற்று ரித்திகா சிங்கின் வாவ் போட்டோஸ்..!

இறுதிச்சுற்று படத்தின் மூலம், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ரித்திகா சிங் (Ritika Singh) இதில், குத்துச்சண்டை வீராங்கனையாக இவரது நடிப்பு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பல விருதுகளையும் வென்றது. மேலும், நிஜத்தில் குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங்குக்கு, இந்த கேரக்டர் வெகு எளிதாக பொருந்தியதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிச்சுற்று படத்தில், மீன் விற்கும் ஒரு சாதாரண மீனவக் குப்பத்தைச் சேர்ந்த பெண்ணாக, நல்ல நடிப்பை ரித்திகா சிங், வெளிப்படுத்தி இருப்பார். இதில், அவருக்கு குத்துச்சண்டை பயிற்சியாளராக, மாதவன் நடிப்பும் மிக சிறப்பாக இருந்ததும், படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.

ரித்திகா சிங்
Ritika Singh

இறுதிச்சுற்று படத்துக்கு பிறகு, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை படத்திலும், மாஸ்டர் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக, சிவலிங்கா படத்திலும், ரித்திகா சிங் நடித்தார்.

ஆனால், இந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில், வெற்றி பெறவில்லை. குறிப்பாக, ஆண்டவன் கட்டளை படத்தில், ரிப்போர்ட்டராக ரித்திகா சிங் நடித்திருந்தார். ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், விஜய் சேதுபதிக்கே தோல்வி படமாக அமைந்துவிட்டது.

சிவலிங்கா படத்தை ரசிகர்கள் ஆரவாரமாக ரசித்தாலும், ஜனரஞ்சகமான பேய் படங்களின் வரிசையில் அது இடம் பெற்று விட்டது.

ரித்திகா சிங்
Ritika Singh

தமிழில் போதிய வாய்ப்பும், அடுத்தடுத்து நடிக்க படங்களும் இல்லாததால், தெலுங்கில் நடித்தார் ரித்திகா சிங். அங்கு கட்டுமஸ்தான இவரது உடல்வாகுக்கு ஏற்ற கவர்ச்சி படங்களாக அமைய, அம்மணி தெலுங்கு படவுலகில் ‘பிஸி’ யாகி விட்டார்.

தெலுங்கு மொழி படங்களில் அதிகமாக நடித்தார்.இந்நிலையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘ஓ மை கடவுளே’ படத்தில், அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்தார்.

இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.வித்யாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம், செம ஹிட் ஆனது. ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது.இப்போது, இந்தி படவுலகில் தன் காலடியை பதித்திருக்கிறார் ரித்திகா சிங். ‘இன் கார்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

ரித்திகா சிங்
Ritika Singh

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவரும் ரித்திகா சிங், அடுத்து வெப் சீரிஸ்களிலும், தனது நடிப்பு சேவையை தொடர்ந்து வருகிறார். இதுவரை, பல வெப் சீரிஸ்களில் ரித்திகா சிங் நடித்து வருகிறார்.

நிஜ வாழ்வில், அத்லெட்டிக் வீராங்கனையாக, குத்துசண்டை வீரராக உள்ள ரி்த்திகா சிங், சிறு வயதில் இருந்தே ஜிம்களில் ஒர்க் அவுட் செய்து வருகிறார். இப்போதும் தனது கட்டுமஸ்தான உடல்கட்டை போற்றி பாதுகாக்க, தினமும் உடற்பயிற்சி கூடத்தில் பல மணி நேரங்களை செலவிட்டு வருகிறார்.

ரித்திகா சிங்
Ritika Singh

டைட்டான ஜிம் சூட்டில், உடற்பயிற்சி கூடத்தில் சமீபத்தில் எடுத்த ஹாட் ஆன புகைப்படங்களை, வீடியோக்களை ரித்திகா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அப்டேட் செய்திருக்கிறார்.

ஹெவி ஒர்க் அவுட் செய்யும் நிலையில், அவர் எடுத்துள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள், ‘வாவ்’ வீடியோவை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே? என, வாயை பிளந்தபடி திரும்ப, திரும்ப பார்த்துக்கொண்டே இருக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …