இளசுகளை கதற விடும் ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை டீன் ஏஜ் போட்டோஸ்..!

சாந்தினி பிரகாஷ்,( Chandhni Prakash)டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர். பல சீரியல்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இப்போது, இவரது படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘பிரியமானவள்’ சீரியலில், தமிழ் டிவி சீரியலில் அறிமுகமாகி, நியூ என்ட்ரி கொடுத்தவர் சாந்தினி பிரகாஷ். மாடலிங் துறையில் இருந்தவர் என்பதால், நடனத்திலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். அதனால், விஜய் டிவியில் நடந்த ஜோடி நம்பர் 1 நடன போட்டி நிகழ்ச்சியில், 8 வது சீசனில் சாந்தினியும் ஒரு போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார்.

எனினும், நடனத்தை காட்டிலும், சீரியல் நடிகையாக இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Chandhni Prakash

ஈரமான ரோஜாவே சீரியலில், சீசன் 2ல், ரம்யா என்ற வில்லி கேரக்டரில் நடித்துவரும் சாந்தினி, பல சீரியல்களில் வில்லி நடிப்பால், ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.

இவரது வில்லி கேரக்டரில் நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதால், வில்லி கேரக்டர் இவரை தேடித் தேடி வருவதாகவே தெரிகிறது.இப்போது, ராஜா ராணி சீரியலில் நடித்த போது எடுக்கப்பட்ட சாந்தினி பிரகாஷ் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சாந்தினி பிரகாஷ், கலர்ஸ் தமிழில், அபி டைலர்ஸ் என்ற தொடரிலும், சன் டிவியில் வானத்தை போல தொடரிலும், நடிக்கிறார். இந்த தொடர்களில், முக்கிய ரோல்களில் இவர் நடிக்கிறார்.

Chandhni Prakash

வானத்தை போல தொடரில் நடித்துவந்த ப்ரீத்திகுமார் விலகியதை அடுத்து, அவர் நடித்த ‘பொன்னி’ கேரக்டரில், ஸ்ரீக்கு ஜோடியாக, சாந்தினி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பூவே பூச்சூடவா, தொடரிலும், விஜய் டிவியில், காற்றின் மொழி தொடரில், சாந்தினி வில்லியாகவும் நடித்திருக்கிறார்.

சாந்தினி, டிவி சீரியல்கள் மட்டுமின்றி, சினிமாவிலும் முகம் காட்டி இருக்கிறார், சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படத்தில், இவர் நடித்திருக்கிறார். ஆனால், டிவி சீரியலைப் போல, சினிமாவில் சாந்தினிக்கு பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை என்பதால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது.

Chandhni Prakash

விஜய் டிவி சீரியல்களில் மிகவும் பிரபலமான தொடர்களில் முக்கியமானது ராஜா – ராணி. இந்த சீரியலில் நடித்த சஞ்சீவ் – ஆல்யா மானசா, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை, பாராட்டை பெற்றவர்கள்.

ராஜா – ராணியில் சீரியல் ஜோடியாக நடித்த இவர்கள், நிஜ வாழ்விலும் ஜோடியாகி விட்டனர். இருவரும் காதலித்து, திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில், சங்சீவ், ஆல்யா மானசாவுடன் சொர்ணா என்ற வில்லி கேரக்டரில், சாந்தினி நடித்திருந்தார். அப்போது, எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை, இப்போது சாந்தினி, தனது சமூகவலை தளப்பக்கங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

Chandhni Prakash

சினிமாவில் எப்படி ஒருவர் வில்லன், வில்லி கேரக்டரில் நடித்து வெற்றி பெற்றாமல், அந்த கேரக்டரில் நடிக்கவே அதிக வாய்ப்பு வருவது போல், டிவி சீரியலிலும், அதே நிலைமைதான் நீடிக்கிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் ரகுவரன் போல, தமிழ் டிவி சீரியலில் சாந்தினியும், ஒரு பெண் ரகுவரனாக மாறி வருகிறார் என்றால் அது மிகையல்ல.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …