“பீஸ்ட்” கதையின் கரு இது தான்..? – வேற லெவல்..! – எகிறிய எதிர்பார்ப்பு..!

விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாகிறது என சன் பிக்சர்ஸ் அறிவித்ததில் இருந்தே கொண்டாட்டத்தை துவக்கி விட்டனர் ரசிகர்கள். இந்நிலையில் வார விடுமுறை நாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் இனிப்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்தை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது. படத்தின் வெளியீட்டு உரிமம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தை பான் இந்தியன் படமாக வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பீஸ்ட் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான போஸ்டர்கள் நேற்று வெளியிடப்பட்டன.

தென்னிந்திய மொழிகளில் பீஸ்ட் என்று இருக்க, இந்தியில் மட்டும் இந்த படத்திற்கு ‘ரா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் படத்தில் விஜய் ரா ஏஜென்ட்டாக நடித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் வெற்றி பெற்றன. இந்த இரு படங்களும் பிளாக் காமெடிக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டவை.

விஜய் மாஸ் ஆக்ஷன் ஹீரோ. ஆகவே, நெல்சனின் முந்தைய இரு படங்களிலிருந்து பீஸ்ட் மறுபட்டிருக்கும் என்கிறார்கள்.பீஸ்ட் படத்தின் கதை தங்கக் கடத்தலை மையப்படுத்தியது என உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : “பீஸ்ட்” – ரிலீசுக்கு முன்னாடியே இவ்வளவு பிரம்மாண்ட வியாபாரமா.?

விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படுவதை பின்னணியாகக் கொண்டு பீஸ்ட் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த கடத்தல் வேலைகளில் ஈடுபடுகிறவராக ஷைன் டாம் சாக்கோ நடித்திருப்பதாகவும், அவர் பிரதான வில்லன்களில் ஒருவரான செல்வராகவனின் ஆளாக படத்தில் வருவதாகவும் கூறப்படுகிறது.

பீஸ்ட் படம் முழுக்க முழுக்க தங்க கடத்தலை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருப்பதாகவும், இந்த படத்தில் விஜய் ராணுவ கமாண்டோவாக நடித்துள்ளார் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.

இயக்குனர் நெல்சன் இதற்கு முன்பு தான் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தை போதைப் பொருள் கடத்தலை மையமாக எடுத்திருந்தார்.அதையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர் படத்தை குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து இயக்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …