தெறிக்கும் K.G.F 2 – தாக்குப்பிடிக்குமா “பீஸ்ட்”..? – ரசிகர்கள் என்ன சொல்றாங்க..!

KGF 2 vs Beast பேச்சு தான் சமூக வலைதளங்களில் மேலோங்கி உள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’.

இப்படத்தின் முதல் பாகம் 2018 ம் ஆண்டு வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது.

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.இப்படத்தின் டீஸர் வெளியாகி 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

அண்மையில் வெளியான இப்படத்தின் பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ஆக்ஷன் ரசிகர்களுக்கிடையே பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே சற்று முன் வெளியானது.

100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள கேஜிஎஃப் 2 படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஏப்ரல் 14 ம் தேதி ரிலீசாக உள்ளது. கொரோனா, லாக்டவுன், கோர்ட் தடை என பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக இந்த படம் ரிலீசாக உள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக ஏப்ரல் 13-ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. இரண்டு படங்களுக்கும் கடுமையான் போட்டி இருக்கும் நிலையில் ட்ரைலரை பார்த்த ரசிகர்கள், பீஸ்ட் தாக்குபிடிக்குமா..? என்ற கேள்வியுடன் மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

மேலும், பீஸ்ட், கேஜிஎஃப் இரண்டு படங்களும் தலா ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …