பணத்துக்காக இப்படியா..? – கூச்சமே இல்லாமல் அப்பா வயது நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும்… ஸ்ருதி ஹாசன்…?

 

உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். 

 

தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை, தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். 

 

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்த ‘லாபம்’ படமும் அண்மையில் ரிலீஸ் ஆனது. சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக விளங்கும் ஸ்ருதிஹாசன், தனது ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள், லேட்டஸ்ட் ஃபேஷன் நகை மற்றும் உடை என பல கிளாமரான ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அடிக்கடி பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார். 

 

சோஷியல் மீடியாவில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வரும், ‘சலார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பை முடிந்த பின்னர் ஸ்ருதி சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள திரைப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கவுள்ளது.

 

 

ஆச்சார்யா படத்தை அடுத்து லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஹாட்பாதர் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இப்படத்தை மோகன்ராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சிரஞ்சீவியின் 154-வது படம் நவம்பரில் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. 

 

பக்கா கமர்சியல் கதையில் உருவாகும் இப்படத்தில் அல்ட்ரா மாஸ் அவதாரத்தில் தோன்றுகிறார் சிரஞ்சீவி. பாபி இப்படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் ரொமான்ஸ் செய்யவுள்ளார் ஸ்ருதிஹாசன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, 61 வயதான பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாகியுள்ள ஸ்ருதிஹாசன் தற்போது, 66 வயதான சிறந்ஜீவியுடனும் ரொமான்ஸ் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை அறிந்த ரசிகர்கள், பணத்துக்காக இப்படியுமா..? தந்தை வயது நடிகருடன் ஜோடியாக நடிப்பீங்க..? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *