“புடவையை தூக்கி.. அந்த இடத்தில் குத்தியுள்ள…” – டாட்டூவை காட்டும் “பீஸ்ட்” பட நடிகை..!

 

டிக்டாக் வந்த பின்பு பலரது வாழ்க்கையே மாறிவிட்டது. டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டே பலர் பிரபலமாகிவிட்டனர். அப்படியாகப் பிரபலமானவர் காயத்ரி ஷான். இலங்கையைச் சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் டிக்டாக் வீடியோ வெளியிட்டே பிரபலமானவர். 

 

 

டிக்டாக் வீடியோக்களில் அவர் பாடலுக்கும், டயலாக்களும் வாய் அசைப்பது மற்றும் முக பாவனைகளால் பிரபலமானவர். இவர் டிக்டாக் வீடியோக்கள் வைரலானது மூலமே திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார் இவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துவிட்டார். தமிழ்த் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

 

 

மேலும், விஜய்யின் பீஸ்ட் படத்திலும் காயத்ரி ஷான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

 

 

நண்பன் படத்துக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், ஷைன் டாம் சக்கோ, அபர்னா தாஸ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். 

 

 

இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இலங்கையை சேர்ந்த டிக் டாக் பிரபலம் காயத்ரி ஷான் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்போதும் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சில வற்றை வெளியிட்டுள்ளார். அதிலும், புடவையை முட்டி வரை தூக்கி கெண்டை காலில் குத்தியுள்ள டாட்டூவை காட்டும் அவரது புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *