70 இடத்துல சென்சார்..! – ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “பில்டர் கோல்டு..”..!

திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படம் “பில்டர் கோல்ட்”. இதனை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். விஜயபாஸ்கர் இயக்கி நடித்திருக்கிறார். 

 

ஆர்.எம்.மனு தயாரித்திருக்கிறார். பரணிகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹியூமர் எழிலன் இசை அமைத்துள்ளார். பொதுவாக திரைப்படங்களில் திருநங்கைகளின் வாழ்க்கை முழுமையாக காட்டப்படுவதில்லை.

 

ஆனால் இந்தப் படம் முழுக்க முழுக்க திருநங்கைளின் வாழ்க்கையையும், வலியையும் சொல்லும் படம். நானும், சண்முகம் என்பவரும் திருநங்கையாக நடித்துள்ளோம். 

 

 

எங்களுடன் தோராஸ்ரீ என்ற திருநங்கையும் நடித்திருக்கிறார். திருநங்ககைளுக்கு எந்த சலுகையும் வேண்டாம், அந்தஸ்தும் வேண்டாம். அவர்களை அவர்கள் பாணியில் அவர்கள் உலகத்தில் வாழ விட்டால் போதும் என்பதை சொல்லும் படம் என்றார். 

 

முக்கிய வேடத்தில் நடித்து, இயக்கியிருக்கும் விஜயபாஸ்கர், படத்தை பற்றி கூறியதாவது: “பில்டர் கோல்டு என்றால் சொக்க தங்கம் என்று பொருள். இது, இந்த கதையின் நாயகியை குறிக்கும். 

இதுவரை வந்த திருநங்கைகளை பற்றிய கதையில் இருந்து மாறுபட்ட கதை, இது. 3 திருநங்கைகளை சுற்றி கதை பின்னப்பட்டு இருக்கிறது. தளபதி, நாயகன் ஆகிய படங்களின் கதைகளைப்போல் அதிரடி காட்சிகளுடன் கதை நகரும். 800 திருநங்கைகளை வைத்து ஒரு பாடல் காட்சியையும், 400 பேர்களை வைத்து இன்னொரு பாடல் காட்சியையும் படமாக்கி இருக்கிறோம். 

 

படத்தில் வில்லன் இருக்கிறார். அவர் யார்? என்பதை ரகசியமாக வைத்து இருக்கிறோம்.படம் தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், 70 இடங்களில் ‘கட்’ கொடுத்து, அந்த 70 இடங்களையும் நீக்கியபின், ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம், ஜனவரியில் திரைக்கு வரும்” என அவர் தெரிவித்தார்.

 

 

முழுக்க முழுக்க திருநங்கைகளை மையப்படுத்திய கதை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *