“ரிவைசிங் கமிட்டிக்கு தூக்கிட்டு போங்க..” – Filter Gold படத்தின் மீது எகிறிய எதிர்பார்ப்பு..!

திருநங்கைகளின் வாழ்க்கை வரலாற்றை புதிய கோணத்தில், அவர்களுக்கு அருகில் இருந்து, உணர்ந்து எடுக்கப்பட்ட படம் தான் “Filter Gold”. மூன்று திருநங்கைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக பல் வேறு வகைகளில் இருக்கும் என்கிறார். 

 

இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே இந்த படம் தான் முழு முழுக்க திருநங்கைகளை மையப்படுத்திய ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது “Filter Gold”. 

 

திருநங்கைகளை கதாநாயகர், கதாநாயகிகளாக நடித்துள்ள இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று கூருகிறார் இயக்குனர் விஜயபாஸ்கர். 

 

எதை பற்றிய படம்

 

படத்தின் இயக்குனர் தொடர்ந்து பேசுகையில், தளபதி, நாயகன் போன்ற படங்களில் திருநங்கைகள் ஹீரோ-வாக நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற யோசனையே இந்த படத்தை எடுக்க தூண்டு கோலாக இருந்தது.

 

தளபதி, நாயகன் ஆகிய படங்களின் கதைகளைப்போல் அதிரடி காட்சிகளுடன் கதை நகரும். 800 திருநங்கைகளை வைத்து ஒரு பாடல் காட்சியையும், 400 பேர்களை வைத்து இன்னொரு பாடல் காட்சியையும் படமாக்கி இருக்கிறோம். படத்தில் வில்லன் இருக்கிறார். அவர் யார்? என்பதை ரகசியமாக வைத்து இருக்கிறோம். 

 

பொதுவாகவே, திரைப்படங்களில் திருநங்கைகளை கேலி, கிண்டலாக சித்தரிக்கும் போக்கே தலை தூக்கி இருந்தது. ஆனால், சமீப காலமாக அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பல படங்களில் காட்சிகள் இடம் பெற்று வருகின்றன. 

 

 

அப்படியான முயற்சிகள், திருநங்கைகள் மத்தியில் அவர்களை பற்றிய நேர்மரையாக தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை பல வழிகளில் பல துறைகளில் உயர்த்தியுள்ளது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். 

 

இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை பற்றி பிரம்மிப்பாக கூறியுள்ளார் படத்தின் இயக்குனர், இந்த படத்தில் இடம்ப ஏற்றுள்ள ஒரு பாடல் விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இந்த பாடல் காட்சியில் நடித்துள்ளனர்.

 

ரிவைசிங் கமிட்டிக்கு எடுத்துட்டு போங்க

 

 

இந்த படத்திற்கு “A” சர்டிபிகேட் கிடைத்திருந்தாலும், இந்த படம் கூறியுள்ள விஷயம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் விதமாக இருக்கும். இந்த படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு எடுத்துட்டு போங்க-ன்னு தணிக்கை குழு சொல்லி விட்டது. 

 

ஆனால், அவர்களை சமாதானப்படுத்தி சில காட்சிகள் நீக்கிய பிறகு “A” சான்று கொடுத்தனர். 

 

எகிறிய எதிர்பார்ப்பு

மூன்று வருடங்களாக திருநங்கைகளின் அனுபவங்களை கேட்டறிந்து அவர்களுடனேயே பயணித்துள்ளேன். இந்த படம் நிச்சயமாக திருநங்கைகளின் வாழ்வியலில் ஒரு ஏற்றத்தை கொடுக்கும் என கூறியுள்ளார். 

 

படத்தின் இயக்குனர் விஜயபாஸ்கர். இது வித்யாசமான கதைகளத்தை விரும்பும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

 

சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *