அந்த நடிகையை பார்த்தும் திருந்தாத கீர்த்தி சுரேஷ் – தலையில் அடித்துக்கொள்ளும் நண்பர்கள்..!

தமிழில் சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் வெளியாகி ஹிட் ஆன ‘வேதாளம்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. தெலுங்கு ரீமேக்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். 

 

இப்படத்தை மெஹர் ரமேஷ் என்பவர் இயக்குகிறார். தற்போது சிரஞ்சீவி கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் ராம் சரணும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

 

அதையடுத்து வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி இணையவுள்ளார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அந்தப் படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

வேதாளம் தமிழில் அஜித்தின் தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 

வேதாளம் படத்தில் தங்கை வேடத்தில் நடித்த பின் லட்சுமி மேனனுக்கு வாய்ப்புகள் குறைந்துபோனது. இதை காரணம் காட்டி கீர்த்தி சுரேசை நடிக்க வேண்டாம் என்று நண்பர்கள் கூறியிருக்கின்றனர். 

 

ஆனால் கீர்த்தி சுரேஷ் அதை கண்டுகொள்ளாமல் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *