விஜய் மற்றும் அஜித் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகை சுரேகா வாணி தனது 40-வது பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடியிருக்கிறார்.
பல தெலுங்கு படங்களில் நடித்த நடிகை சுரேகா வாணி தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யுடன் ‘மெர்சல்’ மற்றும் ’மாஸ்டர்’ ஆகியப் படங்களிலும், அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்தார்.
மேலும் தமிழ் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வரவிருக்கும் பல திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவரது மகள் சுப்ரிதா தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தான் கலந்துக் கொண்ட பார்ட்டி கொண்டாட்டத்தின் ஒரு அழகான வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுரேகா வாணி.
இதற்கிடையே சுரேகா வாணியின் மகள், அழகான சுப்ரிதாவும் சினிமாவில் அறிமுகமாக ஆர்வமாக இருப்பதாகவும், தொழில்முறை பயிற்சியை மேற்கொண்டு, முறைபடி தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், லோ நெக் கவுன் ஒன்றை அணிந்து கொண்டு ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றது.