பிரபல தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா, பிரபல ஹீரோவின் மகனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஈஷா ரெப்பா “அந்தகா முண்டு ஆ தர்வதா என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து, பண்டிபோட்டு, அமி துமி, தர்சகடு, அவே, பிராண்ட் பாபு, அரவிந்தா சமேதா வீர ராகவா படங்களில் நடித்துள்ளார். ஓய் என்ற படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர்.
அதன் பிறகு மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக, ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படம் விரைவில் வெளியாகஉ ள்ளது. இவருக்கு இப்போது தமிழ் மற்றும் தெலுங்கை தாண்டி பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரபல பாலிவுட் ஹீரோ அணில் கபூர் மகன் ஹர்ஷவர்தன் கபூர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார் ஈஷா. இதை தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜ் சிங் சவுத்ரி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ராஜஸ்தான் பெண்ணாக, ஈஷா ரெப்பா நடிக்கிறார். மும்பையில் நடந்த ஆடிஷனில் இவரது நடிப்பு நன்றாக இருந்ததால் இவரை தேர்வு செய்திருக்கிறது படக்குழு.
தொடர்ந்து பட வாய்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் ஈஷா ரெப்பா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு மேஜையின் மீது அமர்ந்தபடி முழு தொடையும் தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பாக வர்ணித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.